உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/பட்டணம்

விக்கிமூலம் இலிருந்து

பட்டணம் பெரும் பட்டணம்.
பலரும் கூடும் பட்டணம்
கார், குதிரை வண்டிகள்
கணக்கில் லாத பட்டணம்.
தண்ட வாள மீது ‘ட்ராம்’
வண்டி ஓடும் பட்டணம்.
ஆளை வைத்து ரிக்ஷாவில்
ஆள் இழுக்கும் பட்டணம்.
மிருகக் காட்சி சாலையும்,
மெத்தப் பெரிய கோட்டையும்
உயர மான் ‘கோர்ட்டு’மே
உள்ள தந்தப் பட்டணம்.
கப்பல் தங்கத் துறைமுகம்,
காற்று வாங்கக் கடற்கரை,
வீதி தோறும் பள்ளிகள்
விளங்கு கின்ற பட்டணம்.
பொட்ட ணத்தைக் கட்டியே
போகப் போறேன் பட்டணம்.
என்ன பட்டணம் தெரியுமா?
சென்னப் பட்டணம் தெரிஞ்சுக்கோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/பட்டணம்&oldid=1724550" இலிருந்து மீள்விக்கப்பட்டது