உள்ளடக்கத்துக்குச் செல்

மழலை அமுதம்/கண்ணன்

விக்கிமூலம் இலிருந்து

கண்ணன்

1. கண்ணன் எங்கள் கண்ணனாம்
    கடல் நீல வண்ணனாம்
    வெண்ணெய் உண்ணும் கண்ணனாம்
    வேணு கானக் கண்ணனாம்


2. கன்றை மேய்த்து வந்தவன்
    காளிய நடனம் புரிந்தவன்
    குன்றை ஏந்திக் காத்தவன்
    கோகுல மைந்தன் கண்ணனாம்.


3. அன்பர் யார்க்கும். நல்லவன்
    அருள் சுரந்தே காப்பவன்
    துன்பம் போக்க வல்லவன்
    தொழுது போற்றி வணங்குவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மழலை_அமுதம்/கண்ணன்&oldid=1070124" இலிருந்து மீள்விக்கப்பட்டது