மழலை அமுதம்/சின்ன மோட்டாரும் பெரிய மோட்டாரும்
Appearance
தாய் :பெரிய மோட்டார் சந்தைக்குப் போகுது
பெரிய மோட்டார் வேணுமா?
சின்ன மோட்டார் சந்தைக்குப் போகுது
சின்ன மோட்டார் வேணுமா?
குழந்தை:பெரிய மோட்டார் வேண்டாம்
பெரிய சத்தமும் போடும்
சின்ன மோட்டார் வேனும்
சிட்டாய்ப் பறக்க வேனும்
தாய்:பெரிய மோட்டார் சந்தைக்குப் போகுது
அரிசி வாங்கி வர
சின்ன மோட்டார் சந்தைக்குப் போகுது
தின்பண்டம் வாங்கி வர
குழந்தை:[அவசரமாக]
பெரிய மோட்டார் வேண்டாம்
அரிசி வாங்கி வரும்
சின்ன மோட்டார் வேணும்
தின்பண்டம் வாங்கி வரும்