மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/18. துரோகியின் சூழ்ச்சி முறியடிப்பு
மக்காவாசியான உத்மான் இப்னு ஹுவரிஸ் என்பவர் கதீஜா நாச்சியாரின் நெருங்கிய உறவினர். இவர் பைஸாந்தியம் சென்று அங்கு கிறிஸ்துவரானார். பின்னர் அரபியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஹிஜாஸ் மாகாணத்தை ரோமாபுரியின் ஆட்சிக்கு உட்படுத்திக் கொடுப்பதாகவும், அப்படியாகி விட்டால் தாமே அங்கு அரசப் பிரதியாகவேண்டும் எனக் கூறி ரோமாபுரிச் சக்கரவர்த்தியிடம் ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கொண்டு மக்காவுக்கு வந்து, இரகசியமாகப் பல சூழ்ச்சிகள் செய்தார்.
அவருடைய சூழ்ச்சி வெற்றி பெற்றிருக்குமானால் அரேபியாவில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கக்கூடும்.
அவருடைய சூழ்ச்சி பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்ததும், அவருடைய முயற்சி நிறைவேறாமல் முறியடித்தார்கள்.
அவரோ தோல்வியுற்றதும் சிரியாவுக்குத் தப்பியோடி, அங்கே கொல்லப்பட்டார்.
பெருமானார் அவர்களின் மாபெரும் சாதனையால், அரபியர்கள் அந்நியர்களுக்கு அடிமையாகாமல் காப்பாற்றப்பட்டனர்.
இந் நிகழ்ச்சி அரேபிய வரலாற்றில் முக்கியம் வாய்ந்ததாகும்.