உள்ளடக்கத்துக்குச் செல்

மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/ஆடு! பாடு! அதோ ... அவன் நாடு!

விக்கிமூலம் இலிருந்து

45. ஆடு! பாடு! அதோ...அவன் நாடு!

முடமோசி விறலி ஆய் என்று வாய் மணக்க மக்கள் கூறுகின்றனர். அவன் பெயரை நீகேட்டிருக்கின்றாய் ஆனால் அவனை நீ பார்த்ததில்லை!

விறலி: “நான் பார்க்க வேண்டும்!”

முடமோசி: அப்படியானால் நேரே நடந்து போ. அதோ ஒரு மலை தெரிகிறது பார். அதன் வழியாக நடந்து போ...

மலைக் காற்று வந்து நின் கூந்தலை (மயிரை)க் கோதி விடும். உன் செவியில் ஆய் பெயரை ஒதிவிடும்...

அணிமயில் போன்று அடி பெயர்த்து நடந்து செல். போ... ஆயைப் பார்... ஆடு... பாடு.... அதோ அவன் நாடு!