மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/வடக்கும் தெற்கும்
Appearance
வடக்கே இமயமலை. விண்ணைத் தொடும் வண்ண மலை அது. அங்குள்ள சுனையிலுள்ள குவளை மணக்கும். மான்கள் நரந்தம் புல்லை மேயும். சுனையில் நீர் பருகும். பெண் மானோடு விளையாடும்.
அதற்கு இணையாக தெற்கே இருப்பது ஆய் நாடு. வடக்கே இமயமும் தெற்கே ஆய்நாடும் இல்லாவிடில் உலகமே நிலை கலங்கிவிடும்.
அத்தகைய நாட்டின் மன்னன்தான் ஆய். கொடையில் முதலிடம் அவனுக்கு. அவனைத்தான் முன்னர் நினைக்க வேண்டும் அப்படிச் செய்யாத உள்ளம் ஆழ்ந்து போக வேண்டும். அவனையே பாடாத நாக்கு பிளக்கப்பட வேண்டும். அவன் புகழ் கேளாத காது துர்க்கப்பட வேண்டும்.