மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/இன்று போல் என்றும் வாழ்க
Appearance
காரிக் கண்ணர் பிட்டனைப் பார்க்கச் சென்றார். இரவலர் பிட்டனை நாள்தோறும் வந்து மொய்த்தனர். சலிப்பின்றிப் பொருள் வழங்கினார். அவன் பேராண்மை வாய்ந்தவன். தன் தலைவன் விருப்பப்படியே போர் செய்து வெற்றி பெற்றான். அவன் வழங்கும் பரிசுகளுக்கு அளவே இல்லை. தொழுப் பசுவையே கேட்டாலும் கொடுத்து விடுகிறான். களத்தில் குவித்த நெல்லைக் கேட்டால் அவ்வளவையும் அள்ளிக் கொடுத்து விடுகிறான். அணிகலனோ, யானையோ எது கேட்டாலும் கொடுக்கிறான். அவனது கொடைக் குணத்தைக் கண்ட புலவர் “அவன் காலில் சிறு முள்ளும் குத்தக் கூடாது” என்று இறைவனை வேண்டினர்.