மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பிட்டங் கொற்றனின் பெரும்புகழ்!
Appearance
பிட்டங் கொற்றன் சேரனின் படைத் தலைவன். குதிரை மலைத் தலைவன். அவன் நாட்டில் பன்றி உழுத நிலத்தில் தினை விதைப்பர். முற்றிய கதிரை அறுத்து அடித்துத் தினையைக் குற்றுவர். மான் கறி வாசனை வீசும் பானையைக் கழுவாமல் காட்டுப் பசுவின் பாலை ஊற்றுவர். தினை அரிசியைப் போட்டுச் சந்தன விறகால் எரித்து சோறு ஆக்குவர். வடித்து எடுத்து வாழை இலையில் போட்டுக் கூடி இருந்து உண்பர்.
இத்தகைய வளம் உடைய நாட்டு மன்னனான பிட்டன் கூரிய வேலன். வேங்கை மாலையன். வேகமாகச் செல்லும் குதிரையை உடையவன். பெருங்கொடை வள்ளல். ஆனால் பரிசிலர் நாவைத் துன்புறுத்தியவன் ஆவன். ஏனெனில் புலவர் அவனைப் பாடாமல் இருக்க முடியாது.