மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/எண்ண முடியாத யானைகள்
Appearance
“அண்ணே, காலையிலிருந்து இவ்வழியில் யானைகள் போனவண்ணமாய் இருக்கின்றன” என்றான் கந்தன்.
“போருக்குப் போகின்றனவா?” என்று கேட்டான் முகுந்தன்.
“போ அண்ணே போ. புலவர்கள் கொண்டு போகிறார்கள். நம் மன்னன் ஆய் பரிசளித்த யானைகள்?”
“எண்ணினாயா? எத்தனை யானைகள்?”
“எண்ணத் தொலையாத யானைகள்!” கொங்கரை மேலைக்கடல் ஒரம் தோற்கடித்த நாளில் அவர்கள் போட்டுவிட்டுச் சென்ற வேல்களை எண்ணியிருக்கிறாயா?
“அதை எப்படி எண்ண முடியும்”
“ஆய் பரிசளித்த யானைகளை எப்படி அண்ணே எண்ண முடியும்?” வேல்கள் எத்தனை-யானைகள் அத்தனை!