உள்ளடக்கத்துக்குச் செல்

மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/துன்பம் இடைக்கும் குடை

விக்கிமூலம் இலிருந்து

23. துன்பம் துடைக்கும் குடை!

“உச்சி வானத்தில் முழு நிலவு ஊர்கிறது. பாணன் காண்கிறான். விறலிக்கு காட்டுகிறான். விறலியோ களிப்பு மிகுதியால் காட்டு மயில்போல் ஆடுகிறாள். ஆகா என்ன அழகு. நீலக் கடல் நடுவே நெருப்புப் பந்து மிதப்பதுபோல் காட்சியளிக்கிறதே

பாணனும் ஆனந்தக் கூத்தாடுகிறான்.

ஒருகணம் கழிகிறது. இருவரும் முழு நிலவை கை தொழுகின்றனர். ஏன்?

வண்ண நிலவல்ல அது, மாவளவன் வெண் கொற்றக் குடை. துன்பம் துடைக்கும் குடை. துயர் நீக்கும் நற்குடை. எல்லையிலா இன்பம் பயக்கும் எழில் குடை என்று வாழ்த்துகின்றனர்.