மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/நரைத்து மூத்தவர்களே! கேளிர்!
Appearance
நரிவெரூஉத்தலையார் தாம் கண்ட அனுபவங்களை உலகோர்க்கு, உரைக்க விரும்பினார்:
“பற்பல கொள்கைகள் பேசும் பெரியோர்களே!
மீன் முள் போன்று, நரை மயிர் நீண்டு நிற்கக் கண்களைச் சுறுக்கிப் பார்க்கும் பயனற்ற முதுமையை ஏற்றுக் குனிந்தோர்களே! கேளுங்கள்!
மழுவை ஏந்தி வரும் எமன், பாசக் கயிற்றால் உம்மைக் கட்டிக் கதறக் கதற இழுக்கும்போது வருந்துவீர்களே.
ஒன்று சொல்வேன் கேளுங்கள். நீங்கள் உலகிற்கு நன்மை எதுவும் செய்ய வேண்டாம் தீமை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்!
அப்பொழுது, எல்லோர்க்கும் மனங் குளிரும்; அது மட்டுமின்றி, எமன் இழுப்பதற்குப் பதில் உம்மை, நல்லறம் வரவேற்று வாழ்த்துக் கூறும்!”