மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/அறிவிப்புப் பலகை இருக்கக் கூடாதா?

விக்கிமூலம் இலிருந்து

16
அறிவிப்புப் பலகை இருக்கக் கூடாதா?

ஒரு கிராமத்தில் ஒரு குளம் இருந்தது. குளத்தில் தண்ணீரில் நச்சுத்தன்மை பரவியிருப்பதாக தெரிய வந்தது.

அதனால், ஊராட்சி மன்றத்தினர். “இந்தக் குளத்தில் இறங்கினால் ஆபத்து” என்று ஒரு அறிவிப்புப் பலகையை தொங்க விட்டிருந்தனர்.

பல மாதங்களுக்குப் பிறகு, அந்த அறிவிப்புப் பலகையை ஊராட்சி மன்றத்தினர் எடுத்துவிட்டனர்.

அந்தக் கிராமத்து விவசாயி ஒருவர், ஊராட்சி மன்ற அதிகாரியிடம், “குளத்தில் தொங்க விட்டிருந்த அறிவிப்புப் பலகையை ஏன் எடுத்து விட்டீர்கள், ஆபத்து நீங்கிவிட்டதா?” என்று கேட்டார்.

“அந்தக் குளத்தில் யாரும் இறங்கவில்லை, ஒரு ஆபத்தும் உண்டாகவில்லை. அதனால், அந்தப் பலகையை அகற்றி விட்டோம்” என்று பதில் அளித்தார் ஊராட்சி மன்ற அதிகாரி.

ஆபத்து ஏற்படவில்லை என்பதற்காக அறிவிப்புப் பலகையை அகற்றி விடுவது நியாயமா? அரசு ஊழியர்களின் புத்தி விபரீதமானது.