மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/ஆற்றிலே மூழ்குவதே நல்லதா?
ஒரு ஊரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார்.
அவர் குளிக்கும்போது திடீரென வெள்ளம் வந்து ஆசிரியரை இழுத்துச் சென்றது.
“என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்று பலமுறை கூச்சலிட்டார். அவருக்கோ நீந்தத் தெரியாது.
அப்போது, ஆற்றின் கரையில் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தவன் கூச்சலைக் கேட்டு நீந்திச் சென்றார்.
அவரை நெருங்கியதும். “உன்னைக் காப்பாற்றினால் என்ன தருவாய்?” என்று கேட்கலானான்.
“நான் தொடக்கப்பள்ளி ஆசிரியர், உனக்குக் கல்வி கற்றுத் தருகிறேன்” என்றார் அவர்
அவன், அவரைக் காப்பற்றுவதற்கு நெருங்கினான்.
“நில் நீ ஏதாவது படித்திருக்கிறாயா?” என்ற கேட்டார் ஆசிரியர்.
“நான் ஒன்றுமே படிக்கவில்லை, பள்ளிக் கூடப்பக்கமே நான் போனதில்லை” என்றான் அவன்.
“நான் ஆற்றில் மூழ்கிப் போனாலும் சரி. ஆரம்பத்திலிருந்து உனக்கு அ, ஆ கற்றுத்தர என்னால் முடியாது” என்றார் ஆசிரியர்.
“எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது நீதி வாக்கியம்