மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/பண்புள்ள பையன்
Appearance
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன், அவனைக் காட்டிலும் பெரிய பையனை அடிக்க முற்பட்டான்.
சிறுவனின் அடிகள் தன் மீது விழாமல் தடுத்துக் கொண்டிருந்தான் பெரிய பையன். ஆனால், அவன் சிறுவனை ஒரு அடிகூட அடிக்கவில்லை.
அதைக் கவனித்த ஒருவர், பெரிய பையனிடம், “அவன் யார்?” உன் தம்பியா? என்று கேட்டார்.
“அடுத்த வீட்டு பையன்!” என்றான் பெரிய பையன்.
சிறுவன் உன்னை அடித்த போதிலும் நீ ஏன் திருப்பி அடித்திருக்கக் கூடாது? என்றார் அவர்.
“அவனோ சிறுவனாக இருப்பதால், அவனை அடிக்க எனக்கு மனம் இல்லை” என்றான் பெரிய பையன்.
‘அவன் ஒரு பண்புள்ள பையன்’ என்று எண்ணி மகிழ்ந்தார்.
வலிமையுள்ளவன் எளியவனை தாக்குவது வீரத்தனம் ஆகுமா?