முடியரசன் தமிழ் வழிபாடு/004-049

விக்கிமூலம் இலிருந்து

4. பாட வா! வா!


முழுமதியே! செந்தமிழே! காலங் கண்டும்
மூவாத மலர்ப்பொழிலில் ஆடி வந்த
அழகொழுகும் இளமயிலே உலக மாந்தர்
அகமனைத்தும் குளிர்விக்கும் தென்றற் காற்றே!
பழகுசுவைக் கனிமூன்றும் சுவைத்துப் பார்த்துப்
பாடிவரும் பூங்குயிலே! எனது நெஞ்சில்
அழகுதவழ் தோகைவிரித் தாட வாவா!
அவ்வரங்கில் குரலெடுத்துப் பாட வாவா!


[மனிதரைக் கண்டுகொண்டேன்]