முடியரசன் தமிழ் வழிபாடு/006-049

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. முதன்மைத்தமிழே!


 
.............................................
அன்னாய்! என்னுயிர் அன்னாய்! தமிழே!
ஒன்னார்[1] மனமும் உருக்குந் தமிழே!
அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே!
தகப்பன் தாயெனத் தகுவழி காட்டி
மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!
உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால்
கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே!
இறக்கும் வரைநின் பணியே யல்லால்
துறக்க[2]மொன் றுண்டெனத் துணியேன் தமிழே!
இடுக்கண் வருங்கால் துடைப்பாய் தமிழே!
மொழிவளம் மிகுந்தாய் முதன்மைத் தமிழே!

[பூங்கொடி]


('பூங்கொடி காப்பியத்தில், ஏடு பெற்ற காதை’ எனும் பகுதியிலிருந்து எடுக்கப் பெற்ற சிலவரிகள் மட்டும் இங்கு தரப்பெற்றுள்ளன.)
  1. ஒன்னார் - பகைவர்
  2. துறக்கம்-வீடுபேறு