உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்காடு/அதிகாலை

விக்கிமூலம் இலிருந்து

இயற்கைப் பகுதி

அதிகாலை

கொக்கோ கோகோ என இனிமையின்
குரல் மிகுத்திடக கூவல்- செவிக்
குளிர்தரும் அதிகாலை என்பதைக்
குறித்திடும் மணிச் சேவல்!
திக்கார்ந்திடும் இருள் விலகிடும்
சிறு பறவைகள் கூவும்— நல்ல

திரைக்கடல் மிசை எழுந்திடும் முனம்
செழுங் கதிரொளி தூவும்!
தக்கோர் கண்ணில், தெளியுளமதிற்
தகு புதுமைகள் உதிக்கும்- நல்ல

தமிழ்க் கவிதைகள் உழுபவர் சொல்ல
எருதுகள் சதி மிதிக்கும்!
செக்காடுவார் திகு திடு கிறு
கீச்சென வருஞ் சத்தம்!- நல்ல

சேரியின் துணை கோரி அங்குள
ஊர் முழுமையும் கத்தும்.

கண்மாமலர் விரிந்திடும், பெண்கள்
கரம் கதவுகள் திறக்கும் — மிகக்

கருத்துடனவர் முன்றில் விளக்கக்
காற் சிலம்பொலி பறக்கும்!
உண்ணா துண்டு துயில் கிடந்திடும்
உயிர் நிகர்த்தகு ழந்தை — விரைந்

தோடித் தனது பாடம்படிக்க
உவகை கொண்டிடும் தந்தை.
விண்ணேறிடும் பகலவன் கதிர்!
விளங்குறும் திசை முகமே!— தகு

வினை தொடங்குது கிடுகிடுவென
விரி மனித ச முகமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=முல்லைக்காடு/அதிகாலை&oldid=1508077" இலிருந்து மீள்விக்கப்பட்டது