மெய்யறம் (1917)/பாயிரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

பாயிரம்


மெய்ப்பொரு ளருளான் மெய்யற மாகுக.
வள்ளுவர் மறையின் வழிதூன் மெய்யறம்.
அற நூல் கற்றுரைத் தாற்றுவோ னுவல்வோன்,
மேற்கோ ளாதியால் விளக்குத் னுவறிறன்.
மெய்யோ பொருளோ வேண்டுவோன் கொள்வோன்
கொளுந்திறன் கசடறக் கொண்டு நன் கொழுகல்.
மெய்யறம் பொருளொடு மெய்யருள் சேர்க்கும்.
பொய்யறம் புணர்ந்ததால் புரிந்தனன் மெய்யறம்.
பொய்யற மொழிந்திவண் மெய்யற நிலவுக:
மெய்யறஞ் செய்துயிர் மெய்ப்பொரு ளாகுக, ௧0

"https://ta.wikisource.org/w/index.php?title=மெய்யறம்_(1917)/பாயிரம்&oldid=1403721" இருந்து மீள்விக்கப்பட்டது