வரதுங்க பாண்டியன் தனிப்பாடல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
வரதுங்க பாண்டியன் தனிப்பாடல்
இதில்
இவரும் இவர் மனைவியும் பாடிய இரண்டு பாடல்கள் உள்ளன
நூலில் பக்கம் 79 & 80***
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
***
அஞ்சலென்ற கரதலமுங் கணபணகங் கணமு
மரைக்கிசைந்த புலியுடையும் அம்புலிச் செஞ்சடையுங்
கஞ்சமலர்ச் சேவடியும் கனைகழலும் சிலம்புங்
கருணைபொழி திருமுகமும் கண்களொரு மூன்று
நஞ்சையுண்ட மணிமிடறு முந்நூலு மார்பும்
நலந்திகழ் வெண்ணீற் றொளியு மறிமானு மழுவும்
பஞ்சடிச் சிற்றிடையு மையாளொப்பனை பாகமுமாய்ப்
பால்வண்ணன் உளத்திருக்கப் பயமுண்டோ வெமக்கே. (1)

அவர் மனைவி

ஆக்கையெனும் புழுக்குரம்பை யணைந் தணையாப் பொருளை
யருளொளியைப் பராபரத்துக் கப்புறமாம் அறிவை
நீக்கமற மயிர் முளைக்கும் இடமற வெங்கெங்கு
நறைந்து நின்ற முழுமுதலை நினைவிலெழும் சுடரைப்
பாக்கியங்கள் செய்தனந்தந் தவக்குறை கண்முடிக்கும்
பழவடியார் தமக்குதவும் பசுந்துணர்க் கற்பகத்தை
வாக்குமன விகற்பத்தா லளவுபடா வொன்றை
மாசற்ற வெறுவெளியை மனவெளியில் அடைப்பாம். (2)