உள்ளடக்கத்துக்குச் செல்

வருங்கால மானிட சமுதாயம்/பொதுவடைமையும் கட்டுக்கதைகளும்

விக்கிமூலம் இலிருந்து

பொதுவுடைமையும் கட்டுக்கதைகளும்

மது மகிழ்ச்சிக்கு எவ்விதக் குந்தகமும் இல்லாது எல்லோரும் சமமாகவும் உரிமையாகவும் வாழக் கூடிய ஒரு சமுதாய அமைப்பை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் கற்பனை செய்ய முயன்று வந்துள்ளனர். தொடக்கத்தில் அத்தகைய கருத்துகள் முறையானவையாக இருந்தன.

கனவுகள்

மக்கள் தமது கனவுகளில் கடந்துபோன தொல்லைப் பழங்காலத்தை, சமுதாய சமுன்மை நிலவிய காலத்தை, சமுதாயச் சமன்மை நிலவிய காலத்தை, தனியார் உடைமையோ ஏழைகளைச் செல்வர் சுரண்டும் சுரண்டலோ இல்லாத காலத்தை நினைத்துப் பார்த்தனர். மாந்த வகுப்பின் வைகறைக் காலம் இருள் மண்டிக் கிடந்தது என்பதே உண்மையாயினும், பலர் அந்தத் தொல்லைப் பழங்காலத்தை ஒரு "பொற்காலம்" எனக் கருதினர். மேலும் பல்வேறு நாடுகளிலும் அந்தக் காலம் போற்றிப் புகழப்பட்டது.

"பொற்காலம்!" ......... பழம் பெரும் கிரேக்கப் பாவலரான இசியாது அக் காலத்தை, உலகம் தானாகவே செழிப்பான செல்வததை அள்ளித் தந்து வந்த காலமாக, உழைப்போ கவலையோ இன்றி மக்கள் வாழ்ந்து வந்த காலமாகக் கற்பனை செய்தார். ஒரு வேளை மக்கள் உழைக்க நேர்ந்த போதிலும் அந்த உழைப்பு அவர்கள் தமக்குள் அமைதியோடு எதிரிடை எதிர் கொண்டு உழைத்த மகிழ்ச்சியான காரியமாகவே இருந்தது. உரிமை, நட்புறவு, ஒப்புறவு உதவி ஆகியவை அக்காலத்தின் ஒழுக்க முறை இருந்தன. அத்தகைய காலத்தை மட்டும் திரும்பக் கொண்டுவர முடிந்தால் என்று கனவு கண்டார் அக் கவிஞர்.

ஆனால் அக் காலத்தை எவ்வாறு திரும்பக் கொண்டு. வர முடியும்? ஒடுக்குமுறைச் சுமையைத் துக்கியெறிய முனைந்த அனைத்து முயற்சிகளும் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தோல்வியாகவே முடிந்தன. எதிர்காலம் அவர்களுக்கு எவ்வித நல்ல வாய்ப்புகளையும், இனங்காட்டவில்லை. எனவே தமது கனவுகளில்தான் மக்கள் அந்தப் "பொற்கால"த்தைத் திரும்ப கொண்டுவர முடியும் எனறே தோன்றியது.

இதனால், மக்கள் என்ன காரணத்தாலோ இழந்து விட்ட ஒரு வையகத் துறக்கத்தைப்பற்றிக் கற்பனைப் பாடல்கள் இயற்றப்பட்டன. கிறித்தவர்களின் துய மறையான விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் தொல்பழங் காலக் பொதுவுடைமைக்காக ஏங்கித் தலிக்கும் பகுதிகள் - சிறு பிள்ளைத்தனமான பகுதிகள் தான் - அடங்கியுள்ளன. அவற்றில் நம்பிக்கை உண்டு: ஆனால் தைரியம் கிடையாது. பழங்கால கிறித்தவ இலக்கியங்களில் ஒன்றான அபோகலிப்சே இறை காப்பாளரான ஏசு கிருத்துவின் வருகையை முன் கூட்டியே கூறுகிறது. அவர் மக்களை இருளிலிருந்து விடுவித்து வழிகாட்டுவார் என்றும், உலகின் மீது ஆயிரம் ஆண்டு காலம் சமன்மையும் அறமும் நிறைந்த ஆட்சியை நிறுவுவார் என்றும் அந் நூல் கூறுகின்றது.

ஆனால் காலம் செல்லச்செல்ல, மதமானது இந்த அறப்போரை விண்ணகப் பேரரசாக மாற்றியது; இந்த விண்ணகப் பேரரசியம் பற்றாவலர்களுக்கு இறப்புக்குப் பின்னர் கிட்டக்கூடிய பரிசாக மாறியது இதற்கிடையில் திருச்சபையோ நானிலத்தில் மீது நிலவிய சம்மை இன்மையும் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் தேவன் விதித்த வாழ்க்கை முறை என வெளிப்படுத்திற்று விண்ணகப் பேரரசும்கூட, தான் பெற்றிருந்த தொன்மை பொதுவுடைமை சாயல்களைப் படிப்படியாக இழந்து விட்டது மண்ணுக்கு அப்பாலுள்ள விண்ணக வாழ்க்கையும் பணக்காரர்களின் வாழ்க்கையை யொத்த வாழ்க்கையாக, சோம்பேறித்தனமும் இன்பம் மலிந்த வாழ்கையாக ஆக்கப் பட்டது.

ஆனால் மக்களோ இந்த உலகிலேயே சமன்மையையும், அறமுறையையும் பொருளியல் நல் வாழ்வையும் பெறுவதைப் பற்றிச் சிந்தித்து வந்தனர் அவர்கள் உழைப்பைக் கண்டு அஞ்ச வில்லை மாந்த இனத்தின் மூதாதையர்கள் சோம்பியிருக்கவில்லை என்பதை நினைவு கூர்ந்தனர் ஆதாம் நிலத்தைத் தோண்டினான்; ஏவாள் நூல் நூற்றாள்.

உலகில் அறமும் சமன்மையும் நிலவும் பேரரசு பற்றி பழைய கிறித்தவக் கருத்தை வலியுறுத்த ஆயிரம் ஆண்டுக் காலத்துக்கும் மேலாகப் பல இயக்கங்கள் தோன்றின் திருச்சபையால் வேதப் புரட்டர்கள் எனப் பழிதுாற்றப் பட்ட இவ் இயக்கங்களின் தலைவர்கள் தனியார் உடைமை தீவினையான தென்று கற்பித்தனர்; நிலத்திலும் உடைமையிலும் சம உரிமைகள் வேண்டு மென்பதை ஆதரித்தனர் 16ஆம் நூற்றாண்டுத் தொடக்கததில் செருமனியில் நடந்த உழவர்களது போரின் தலைவரான தாமசு முன்செர் தனியார் உடைமையின் முறையின்மையை எடுத்துக் கூறினார் எந்த வகையான வகுப்பு வேறுபாடுகளோ, தனியார் உடைமையோ, பகை மனம் கொண்ட அரசாங்கமோ இல்லாத ஒரு சமுதாய அமைப்பை நிறுவுதற்கான திட்டம் ஒன்றையும் உருவாக்கினார்.

அறமும் சமன்மையும் நிலவும் தெய்வப் பேரரசு கடந்து போன அந்தக் காலத்து மக்களின் கனவுபொதுவுடைமையை ஒரளவு ஒத்திருந்தது என்பது உண்மை. எனினும் தெளிவற்ற வகையில்தான் ஒத்திருந்தது. ஏனெனில் வளர்ச்சி குன்றிய பொருளியலில் எல்லோருக்கும் நல்வாழ்வை உறுதிப் படுத்த முடியாது; அத்தகைய நிலைமைகளில் சமன்மை என்பது ஏழைகளின் சமன்மையாகத்தான் இருக்க முடியும். மேலும் அதனை எய்திய போதிலும் கூட (இத்தகைய முயற்சிகளும் பல்வேறு சிறிய மத சமூகங்களில் மேற்கொள்ளப்பட்டன) அந்தச் சமன்மை வாழ்வு குறைநாளில் தான் முடிந்தது.

மக்களின் கனவு என்ன வாயிற்று? முதலில் அது "பொற்கால"மாக இருந்தது; அதுவோ முற்றிலும் கடந்த காலத்தைச் சேர்ந்ததாகி விட்டது. பின்னர் அது மண்ணகத்துர்க்கமாயிற்று. இதுவோ முற்றிலும் எல்லை காண முடியாத எதிர்காலத்தைச் சேர்ந்ததாகி விட்டது. அறமும் சமன்மையும் நிலவும் பேரரசு நிலத்தில் தானாகவே நிறுவப்பட மாட்டாது என்பதை மக்கள் மேன்மேலும் தெள்ளத் தெளிவாக உணரத் தொடங்கினர்.

அவர்கள் அதனை எவ்வாறு எய்துவது? அத்தகைய கனவுகளிலிருந்து முளைத் தெழுந்ததே

உண்மையில் அது தொடக்கத்தில் பல இலக்கியல் உலகுகளாக இல்ல; ஒரே கற்பனை உலகமாகத்தான் இருந்தது. கருத்தியல் உலகம் - என்னும் புதிய இலக்கியல் நாடும், பொது நலங் கருதும் சிறந்த அரசும் ஆற்றும் பயனுள்ள இன்பமான பணி - ஆங்கிலேய உட்படு கருமத்தலைவரும் மாபெரும் மனிதநலநாட்டவரான சர் தாமசு மூர் 1516-ல் எழுதிய தமது புகழ்பெற்ற நூலுக்கு இவ்வாறுதான் தலைப்புக் கொடுத்திருந்தார். அக் காலத்தில் இங்கிலாந்தில் ஆட்டுக் கம்பளிப் பொருள்களின் பெருக்க வளர்ச்சியின் விளைவாக மேய்ச்சலுக்காக வேலி கட்டி வைத்திருந்த தமது நிலங்களிலிருந்து உழவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்கள் கட்டாய தண்டனை கிட்டக் கூடிய இடர் இருப்பினும் கூட, அவர்கள் வேறு வழியின்றி இரந்துண்டு வாழ்வதற்காக நாடெங்கனும் அலைந்து திரிந்தனர்.

தாமசு மூர் தமது காலத்துச் சமுதாயத்தைக் அறச்சியற்றத்தோடு கண்டித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: இயல்பாகவே அறிவார்ந்த தன்மையும் கட்டுக்கு எளிதில் அடங்கியிருக்கும் பணம் கொண்ட உங்களது ஆடுகள் இப்போது மாந்தர்களையே தின்று வாழ்வதாகச் சொல்லலாம். அவை ஒழித்துக் கட்டுகின்றன."

" வேலைக்கு வர என்றுமில்லாத பெருவிருப்போடு முன்வந்த போதிலும்", அந்த மக்களை எவரும் வேலைக்கு வைத்துக் கொள்ளாத ஒரே குற்றத்தால் ஏழை எளிய மக்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பும் சமுதாயத்தை, உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கை ஆடு மாடுகளிலும் கடை கெட்ட பிழைப்பாய் இருக்க, ஒரு சில சோம்பேறிகளின் வாழ்க்கை மட்டும் ஆரவாரமாகவும் இம்பமாகவும் கழிந்து வந்த அந்தச் சமுதாயத்தை அவர் குற்றம் சாட்டினார்.

இந்தத் துயரத்துக்கும் முறையின்மை உரிய காரணம் எங்கிருந்தது? - இவ்வாறு தாமசு மூர் கேட்டார். தனியார் உடைமையில்தான் என்று விடைப்பு அளித்தார். மூரின் கருத்துப்படி, "ஒரு நாட்டில் சொத்துடைமை இருந்து வரும் வரையிலும், ஏதாவதோர் உரிமை ஆவணத்தின் மூலம் ஒவ்வொருவனும் தன்னால் முடிந்த மட்டிலும் சொத்துக்களைத் தனக்குத்தானே சொந்தமாக்கிப் பெருக்கிக் கொள்கிற வரையிலும் அங்கு ஆனந்தம் இருக்காது ஒரு நாடு எவ்வளவு தான் செல்வ வளம் மிக்கதாயிருப்பினும், அந்நாட்டின் செல்வத்தை ஒரு சிலர் மட்டும் தமக்குள் பங்கு போட்டுக் கொள்வார்களேயானால், ஏனையோர் ஏழைமைக்கு இரையாகியே தீருவர் என்பதும் தானாகவே விளங்கும்"

ஆனால் உட்டோப்பியர் என்ற இலக்கியல் நாட்டில் காணப்படக் கூடிய ஓவியமோ முற்றிலும் மாறு பட்டதாகும் தனியார் உடைமை இல்லாதிருப்பதே இலக்கியல் சமுதாயத்தின் முதன்மைச் சிறப்பாகும் இலக்கிய நாட்டில் வாழ்க்கை சகலரின் உடல் உழைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது சமுதாயக் கடமைகளை நிறைவேற்றுவதில் சிறிதுகாலமாக ஈடுபட்டுள்ளவர்களும் அறிவியலாளர்களும்தான் உடல் உழைப்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தனர் அங்கு ஏராளமான பொருள்வளம் உண்டு அவை அவரவர் தேவைக் கேற்ப பகிர்க்கப்படுகின்றன. பொது மக்கள் சமன்மையே அங்கு செங்கோல் ஒச்சுகிறது.

முறையான பகிர்வளிப்பதை மட்டும் கொண்ட முறை சமுதாய அமைப்பைக் கனவு கண்ட இடைக்கால குறிக்கோளர்களைப் போலன்றி, ஆக்கத்திளை அறிவு வார்ந்த முறையில் ஒழுங்கமைப்பதுதான் சமுதாய சமன்மைக்கான முன்தேவையாக இருக்க வேண்டும் என்று தாமசு மூர் கருதினார் நாடு பறந்த அளவில் ஆக்கத்தை ஒழுங்கமைப்பதுதான் அனைத்து மக்களது தேவை களையும் நிறைவு செய்யும் பயணீட்டுக் கோட்பாட்டை நடத்துவதை முடியத் தக்கதாக்கும் என்ற உண்மையின் அடிப்படையில்தான் அவர் இவ்வவாறு ஊகித்தார்

மூர் சித்திரித்துள்ள அத்தகைய சமுதாய் அமைப்பின் சில கூறுகள் வருமாறு: ஆக்கக் கைவினைப் பொருள்களின் அடிப்படையில் அமைந்துள்ள்து பண்ணைத் தொழிலைப் பொறுத்த வரையில், அதனை நகர மக்கள் தமக்குள் முறை வைத்து ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது ஒவ்வொருவரும் அதில் ஈராண்டுக் காலம் உழைக்கினறனர் ஒவ்வொரு குடும்பமும் ஒரு குறிப்பிட்ட தொழிலை ஒரு பொருளியல்ப் பிரிவாக ஏற்றுச் செய்து வருகிறது வேலைநாள் நேரம் ஆறு மணியாகும் எல்லா ஆக்கப் பொருள்களும் பொதுப் பண்டக சாலைகளில் சேர்க்கப் படுகின்றன கணக்குப் புத்ததகத்தில் அவை பதியப் படுகின்றன; ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவு செய்யும் வகையில் அவற்றை அரசு பகிர்ந்தளிக்கின்றது நலவாழ்வு ஆக்கத்தினால் மட்டுமல்லாமல், மக்களது தேவைகளின் இயல்பான அளவைக் கொண்டும் உறுதி செய்யப் படுகின்றது கருத்தியல்வாரையர்கள் துறவிகள் அல்லர், எனினும் அவர்களுது தேவைகள் முறையானவை; அவர்கள் இன்பநலநாட்டத்தையோ குலவாழ்வையோ நாடுவதில்லை

மூர் காட்டியபடி, அந்த இரும்பூதான அரசின் நல்வாழ்க்கை மேன்மையான உட்டோப்பசு மன்னரின் சட்ட நடவடிக்கைகளைச் சார்ந்திருந்தது மூர் இவ்வாறு நம்பிக்கையும் ஊட்டினார் "பொறுத்திருங்கள், இன்னும் பல கருத்தியல் மன்னர்கள் தோன்றுவார்கள்" என்றார் ஆனால் அவர் தமது காலத்துச் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கான நடைமுறைக்குரிய இயல்பு வழியைச் சுட்டிக் காட்ட முடியவில்லை

கருத்தியல் நாடு பற்றிய மூரின் கதையைத் திரும்பச் சொன்ன இரால்ப்ஹைத்லோ தாயி என்ற சுற்றுலாவாளர் கனவியர் வாணர்களின் வாழ்க்கையை மிக ஒளிவான காட்சியில் வண்ணித்தார்; அதனைக் கண்டு அவர் காலத்து மக்களில் பலர் அத்தகையதோர் நாடு உண்மையில் இருப்பதாகவே நம்பிவிட்டனர். ஆனால் நாம் உட்டோப்போசு (Outopos - உட்டோப்பியா) என்ற கிரேக்கச் சொல்லின் பொருளைப் பார்ப்போம்; இச் சொல்லுக்கு "இடமற்றது", எங்கும் இல்லாதது என்பதே பொருள். அத்தகைய இடம் ஏதும் உண்மையில் இல்லை. மேலும், சான்றவர் உட்டோப்பசு என்ற ஒருவரிடமிருந்து அதனை எதிர்பார்த்தால், அப்படியொரு இடமே இருக்க முடியாது என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும் கனவகம் என்று ஒன்று இருப்பது இயலாது என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அவற்றை நாம் பின்னர் ஆய்வோம்.

உலகில் உட்டோப்பியா என்று எந்த நாடு இல்லை என்பதை மக்கள் விரைவிலே உணர்ந்தனர். ஆனால் அப் பெயர் மட்டும் மறக்கப்படவில்லை. அது அழகான எனினும் பலிக்காத பகற்கனவின் பொருளைப் பெற்றுவிட்டது. மூரின் கருத்தியல்நாட்டைத் தொடர்ந்து எண்ணற்ற பிற கனவுலக நாடுகளும் தோன்றின.

1602இல் சிறைக்குள்ளிருந்த இத்தாலிய மெய்யியல் வாணரான தொம்மாசோ காம்பனெல்லா தமது பொதுவுடைமை கனவுலகான சிவிட்டாசு சோலிஸ் (செங்கதிர் நகரம்) என்ற நூலை எழுதினார்; இந்நூல் 1623ல் வெளி வந்தது. அதிலும் கதை சொல்பவர் ஒரு தாளிகையாளர்தான். அந் நகரம் இந்துமாக் கடலில் தர்ப்ரோபானு என்ற கற்பனைத் தீவில் அமைந்திருந்தது.

அந்த செனோவா ஊர்சுற்றி கூறியதென்ன?

செங்கதிர் மரபினரின் (செங்கதிர் நகரின் குடிமக்கள்) சமுதாயத்தில் தனியார் உடைமை இல்லை. அங்கு மக்கள் பொருள்களுக்காகப் பணி புரியவில்லை; மாறாக மக்களுக்குப் பணி புரிவதற்குத்தான் பொருள்காள் படைக்கப்பட்டன. செங்கதிர் மரபினருக்குக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே உழைப்பை மதித்துப் போற்றக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது அது அவர்களுக்கு வெறும் கடமையாக இருக்கவில்லை; மாறாக, வாழ்க்கைக்கான தேவையாக இருந்தது அங்கு உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையே இடைவெளி இல்லை. எந்த உழைப்பும் அங்கு ஒரு மதிப்புடையதாகும். எந்த அளவுக்கு உழைப்பு கடினமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன் மேன்மையும் அதிகம் அதே சமயத்தில் பல்வேறு தொழில் நுட்பக் கண்டு பிடிப்புக்களைப் பரவலான அளவில் பயன்படுத்துவதன் மூலம் அங்கு உழைப்பு எளிமையாக்கப்படுகிறது. (காம்பனெல்லா அங்கு பாய்மரத்தால் ஒடும் தானே இயங்கிச் செல்லும் ஊர்தி இருந்ததாகக் குறிப்பிடுகிறார் அங்குள்ள மக்களுக்குப் பறக்கவும் தெரிந்திருந்தது என்றும் கூறிகிறார்). அங்கு வேலை நாள் நேரம் நான்கு மணிநேரம்தான். பெண்கள் எளிமையான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்; அவர்கள் ஆண்களுக்குச் சமதை யானவர்களாகவும், பொதுவான மதிப்பைப் பெற்றவர்களாகவும் உள்ளனர் ஆக்கப் பொருள்களின் பெருவளம் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வதாக உள்ளது தனித்ததொருசிறப்புக் கல்வி முறையும், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் முறையும் ஒரே சீராக வளர்ச்சி பெறும் மனிதனை உருவாக்கி வளர்ப்பதை உறுதி செய்கிறது நடைமுறை, அன்பு, நட்புறவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே உறவுகள் அமைகின்றன. செங்கதிர் மரபினர் நேய தன்னார்வமும் வாய்மையும் மிக்கவர்கள்.

உண்மையில் அத்தகையதொரு நகரம் ஏதும் இருக்கவிலலை என்பதை காம்பனெல்லா ஒப்பு கொள்கிறார் ஆனால், மக்கள் தமக்குள் கூடிப் பழகும் வேட்கையை அடுத்தவர்களோடு ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று எல்லோரிடம் குடிகொண்டிருக்கும் உள்ளார்ந்த விருப்பத்தைப் பின்பற்றி நடந்தால், இறுதியில் இத்தகைய சீரான வாழ்க்கையை அவர்கள் எய்துவர் என்பது அவரது கருத்து.

17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்த கெர்ரார்டு வின்ஸ்டான்லி, சீன் மெகலியர், கபிரியேல் மாப்லி, மற்றும் 18ஆம் நூற்றாண்டில் வசித்த இயற்கை முறைமை என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியரான மோரெல்லி, மாபெரும் சமண்மை, பொதுவுடைமை கருத்தியல் நாடுகளின் பிற்காலத்தையும் ஆசிரியர்கள் ஆகிய எல்லோரும், காலத்தையும் வரலாற்றையும் கடந்த மாந்த இயல்புக்கும், மாந்த அறிவுக்கும், மாந்தனின் தூய நன்னெறிக் கோட்பாடுகள் எனக் கருதப்படுவனவற்றுக்கும்தான் வேண்டுகோள் விடுத்தனர்.

1649ஆம் ஆண்டு இன்னிளவேனில் பருவத்தில், ஆங்கில நாட்டு முதலாளியப் புரட்சி நடந்து வந்த காலத்தில், ஒரு சிறு சமூகத்தினர் இலண்டனுக்கு அருகிலிருந்த சர்ரே என்ற பகுதியிலுள்ள பொது நிலத்தில் குடியேறி அந் நிலத்தைக் கூட்டாக உழத் தொடங்கினர். அந்தக் குழுவினர் "தோண்டுவோர்" என அழைக்கப்பட்டனர். அவர்களின் தலைவரான வின்சுடான்லி என்ற அறிவுக்கோட்பாட்டுவாணர் தாம் எழுதிய உயர் நிலையில் உரிமையின் முறைமை அல்லது உண்மை அறத்தி மீட்சி (1952) என்ற நூலில் எல்லாக் குடிமக்களுக்கும் உண்மையான உரிமையை உறுதிப்படுத்தும் குடியரசு சமுதாயம் ஒன்றை வண்ணித்துக் காட்டினார்; அவர் மனித இயல்பின் தேவைகளை விவிலிய நூல் வெளியிடுவதாகச் கூறினார். அந்தச் சமுதாயத்தில் தனியார் உடைமையும் இல்லை; வாணிபமும் இல்லை. ஆக்கப்படும் எல்லாப் பொருள்களும் பொதுப் பண்டக சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன; அதிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்கிறது.

18ஆம் நூற்றாண்டில் புரட்சிக்கு முந்திய பிரான்சு நாட்டில் இருந்த கூட்டுடைமை கொள்கைகளின் ஆசிரியர்கள் மாந்த இயல்பிடமும் அறிவிடமும்தான் நேரடியாக முறையிட்டுக் கொண்டனர். ஆவணம் என்ற நூலின் ஆசிரியரான மெசுலியர் "அறிவின் இயல்பான ஒளியினால்" வழி காட்டப்பெற்று, ஒரு குறிக்கோள் சமுதாய அமைப்புப் பற்றிய சித்திரத்தை உருவாக்கினார்; அச்சமுதாயத்தில் பொது உடைமையும் அனைத்து மக்கள் உழைப்பும் உண்மையான உரிமையையும் சமன்மையும் மக்கள் எய்துவதற்கு உதவின. கம்யூனிச லட்சியத்தை எய்துவதற்குக் கல்வி மட்டும் போதாது. என்ற மெசுலியர் கருத்து. அவரது கொள்கைக்கு ஒரு தனித்தன்மை அளித்தது. புரட்சிகரமான வழியிலேயே தனியார் உடைமையையும் சுரண்டலையும் ஒழித்தாக வேண்டும் என்று அவர் கருதினார்.

மாப்லியின் கூற்றுப்படி, "இயற்கையின் ஆட்சி"க்கு அனைத்துத் தீமைகளுக்கும் முதல் காரணமான தனியார் உடைமையை ஒழிப்பது தேவையாக இருந்தது. பொதுச் சொத்து, சமன்மை, மிகச்சிறந்த குறிக்கோள்களின் பேரால் மக்களுக்கிடையே போட்டாபோட்டி, மக்களின் கைகளில் அனைத்து அதிகாரம் - இவையே மனித இயல்போடு இசைந்து வரும் சமுதாய உறவுகளாகும்; ஆனால் இவையெல்லாம் கடந்த கால செய்திகளாகிவிட்டன என்பதே மாப்லியின் கருத்து. எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் நிராசையே மாப்லியிடம் தென்பட்டது. தனியார் உடைமையால் சீரழிந்துபோன ஒரு சமுதாயத்தில் கம்யூனிச உறவுகளை நிறுவுவதே மிகக் கடினம் என்று அவர் கூறுகிறார்.

மாப்லியைப் போலவே, மோரெல்லியும் மாந்த இனத்தின் தொன்மை நிலையையே குறிக்கோள் வாழ்வாகக் கருதினார்; அதன் தொல்லைப் பழங்காலத்தைப் "பொற்காலம்" என்றும், "இயற்கை அறம்" நிலவிய காலம் என்றும் கருதினார். ஆனால், மாப்லியைப்போல் எதிர்காலம் பற்றி தோல்வியுணர்வு கொள்ளலாம், மோரெல்லி எதிர் காலத்தில் தன்னம்பிக்கை கொண்டவராக விளங்கினார். மாந்தனது "இயற்கை அறத்தின் முறைகளை மீட்டுக் கொண்டுவர, சட்டங்கள் மாந்த குலத்துக்கு உதவ முடியும்" என்று அவர் நம்பினார். இதற்குச் சான்றாக "சொத்துடைமையையும் தனியார் நலனையும்:"ஒழித்தாக வேண்டும். மோரெல்லியின் எதிர்கால பொதுவுடைமைச் சமுதாயம் அதன் சமுதாய உடையை நிறுவனத்தால் குறிப்பிடத்தக்க சிறப்பைப்பெற்றது. சமுதாயம் முழுவதன் நல்வாழ்வுதான் ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான நிலைமைகளையும் உறுதிப்படுத்த முடியும் என அவர் நம்பினார் உழைப்பு ஒவ்வொரு பிரஜையின் உரிமையாகும்; கடமையாகும்; அவரது சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்குமான உரிமை உத்தரவாதம் செய்யப்பட்டிருந்தது; பகிர்வளிப்பு மக்களது தேவைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது; அறிவியல் வளர்ச்சிக்குத் துணையான நிலைமை அவரது சமுதாயத்தில் உருவாக்கப்பட்டிருந்தன

கனவுலக சமன்மையின் முழுநிறைவான கொள்கைகள் 19ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளின்போதுதான் உருவாயின. இங்கிலாந்தில் பொருள் ஆக்கங்களை எந்திர மயமாக்கியதால் ஏற்பட்ட பெருந்தொழில் வளர்ச்சியும் சரி, 1789-94 ஆண்டுகளின் பிரஞ்சு முதலாளியப் புரட்சியும் சரி, உழைக்கும் மக்களுக்குதவும் தீவிரமான வளர்நிலைகள் எதையும் கொண்டு வரவில்லை. மாறாக மக்கட் தொகையின் பரந்த பகுதிகள் இடையில் ஓட்டாண்டியாகும் நிலையே அதிகரித்தது. வாழ்விழந்த உழவர்கள் நகரங்களுக்கு வெள்ளம் போல் திரண்டு வந்தனர்; ஆனால் ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் நிலவிய ஈவிரக்கமற்ற சுரண்டலும், அதைக் காட்டிலும் இழிவான வேலை இல்லாதத் திண்டாட்டமும் வறுமையும்தான் அங்கு அவர்களுக்குக காத்திருந்தன. அனைத்து மக்கள் உரிமை, சமன்மை, உடன்பிறப்பாண்மை ஆகிய முதலாளியப் புரட்சியின் வாக்குறுதிகளெல்லாம் மக்களைப் பொறுத்த வரையில் வெறும் ஆரவார சொற்களாகத் தான் இருந்தன.

முதலாளிய அமைப்பை செயின்ட் - சைமன், போரியர், ஓவென் ஆகியோர் கூர்மையாகத் திறனாய்ந்தனர். பிரஞ்சுப் புரட்சியானது மேட்டுக்குடி வகுப்பினர்க்கு எதிராக நடந்த போராட்டமாக மட்டுமல்லாமல் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் நடந்த போராகவும் இருந்தது என்பதை செயின்ட் - சைமனே முதன் முதலில் இனம் கண்டவராவர். இந்தப் போராட்டம், இல்லாதவர்களைப் பொறுத்தவரை துயர விளைவையே விளைவித்தது. முதலாளியத்தை இறும்பூதுடன் திறனாய்வு செய்த திறனியான சார்லசு பெரியர், அரும்பெரும் செல்வத்திலிருந்து பிறந்த வறுமையைக்கொண்ட மக்கட் தொகையில் எட்டில் ஏழு பகுதியினரை, மீதமுள்ள எட்டில் ஒரு பகுதியினர் கொள்ளையடித்துப் பிழைக்கின்ற, புல்லுருவித் தனம் செழித்து வளர்கின்ற, தனியார் நலன்களுக்கும் பொது நலங்களுக்கும் உள்ள முரண்பாடுகள் வெளிப்பட்டு காண்போர் சிரிக்கின்ற "நாகரிக அமைப்பின்" தீமைகளைக் கண்டித்தார். இந்த நாகரிக சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வெகு மக்களோடு உள் நோக்கம் கொண்ட ஒரு போராட்டத்தை நடத்தும் நிலையிலேயே இருந்ததாக அவர் எழுதினார். அதாவது மருத்துவர் நிறைய நோயாளிகள் இருக்க வேண்டுமென்று விரும்பினார்; கட்டிடச் சிற்பியோ தனது நகரில் தீநேர்ச்சி ஏற்பட்டு கால்பங்கு நகரைச் சுட்டுக் கரியாக்கக் கூடாதாஎன்று கனவு கண்டான்; கண்ணாடி வணிகரோ அனைத்து கண்ணாடிப் பலகணிகளையும் உடைத்து நொறுக்கிச் சென்ற பனிப்புயலைக் கண்டு களிப்படைந்தான்; அறங்கூறவையோ மிகுதியான குற்றங்கள் நடக்க வேண்டும் என விரும்பியது.

மக்களின் ஒழுக்க வடிவம் தாறுமாறாக இருந்தது. தன்னகச்செருக்குதான் அங்கு மேலோங்கிய குணமாக இருந்தது; பொதுவாக , மண வாழ்வில் காதலும் இருக்க வில்லை. செயின்ட்-சைமனைத் தொடர்ந்து, போரியரும் சுமுதாய உரிமையைப் பெண்களுக்குள்ள விடுதலையின் அளவைக் கொண்டு தான் அளந்து பார்க்க வேண்டும் என்று அறிவித்தார்.

போரியர், செயின்ட் - சைமன், ஓவென் ஆகியோர் முதலாளிய பொருளாயத்தின் நன்மைத் தீமைகளை வெளிப்படுத்தினர்; அதில் ஆட்சி செலுத்திய அட்டுழித்தையும், போரியர் குறிப்பிட்டபடி அந்தப் பொருளியலில் நிலவும் நெருக்கடிகளான "மிகுதி நெருக்கடிக" ளையும் வெளிப்படுத்தினர். முதலாளிய சமுதாயத்தின் அறிவுக்கு ஒவ்வாத் தன்மையை விவரிக்கும் போது, முதலாளியத்தின் கீழ் ஆக்கத் துறையில் எந்திரங்களைப் புகுத்திய தன்றன் தொழிலாளர்களின் உழைப்பை எளிதாக்குவதற்கு மாறாக, அதனை இழிவு படுத்தத்தான் செய்தது என்று ஓவென் எழுதினார். ஐம்பதாண்டுகட்கு முன்னால் அறுபதாயிரம் பேர் பெருக்கம் செய்த அதே அளவை இப்போது இரண்டாயிரத்து ஐந்நூறு தொழிலாளர்கள் பெருக்கம் செய்தனர்; ஆனால் இந்த வேறுபாட்டை ஆக்கம் என்ற வடிவில் ஆலை முதலாளிகளும் தொழிற்சாலை உடைமையாளர்களும் பறித்துக் கொண்டு விட்டனர். தொழிலாளிகளைப் பொறுத்த வரையிலோ, அவர்கள் விளைவு செய்த செல்வம் அவர்களுக்கு இழப்பையும் துன்பத்தையும்தான் கொண்டு வந்தது.

19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கனவுலகச் சமண்மைக்கு முந்நூறு ஆண்டுகள் அகவையாகியிருந்தது. மேலும் அந்த சமண்மையர்கள் நடப்பில் உள்ள நிலைமைகளை திறனாய்வு செய்து, ஒரு குறிக்கோள் சமுதாயத்துக்கான திட்டங்களை வரைந்து காட்டிய அதே சமயத்தில், அவர்கள் நல்லொழுக்க அறிவுரையும் செய்ய முனைந்து விட்டனர். பழமை நல்லொழுக்கத்துக்கு எதிரானதென்றும் அறிவித்தனர். சில சமயங்களில் அவர்கள் நல்லொழுக்கத்துக்குத் துணையாக அழகியல் முறையான கண்டனத்தையும் தெரிவித்தனர்; அதன் மூலம் குறிக்கோள் சமுதாயத்தின் இன்றியமையாமையை அழகியல் நிலைகளிலிருந்தும் ஆதரித்தனர். நல்லொழுக்கத் தேவைகள், அழகியல் தேவைகள் ஆகிய இரண்டுமே மாந்த இயல்பிலிருந்து தோன்றுவதாகக் கருதப்பட்டன.

19ஆம் நூற்றண்டின் மாபெரும் கருத்தியல் வாணர்கள் சமுதாயத்தின் சமண்மை மாற்றத்துக்கான தமது திட்டங்களை, பணம் படைத்தோரிடமிருந்து பெறும் பொருளாயத உதவியோடு கூடிய கருத்துப் பரப்புதலின் மூலமே நிறைவேற்றிவிட முடியும் என்று நம்பினர். இந்தக் கருத்துகளெல்லாம் முறையானவை யென்றும் என்றும் மாந்த இயல்புக்குப் பொருத்தமானவை என்றும் திண்ணமாகக் கருதினர். மக்கள் இவற்றுக்குச் செவி சாய்க்காமல் இருக்க முடியாது என்றும் அவர்கள் உணர்ந்தனர். போரியரும் செயின்ட்சைமனும் தமது கனவுலக சமுதாயத்தில் முதலாளிகளுக்கும் வங்கியாளர்களுக்கும் ஒரு தனித்தொரு இடத்தைக் கூட ஒதுக்கி வைத்திருந்தனர்; அவ் இடத்தில் அவர்கள் உழைக்கும் கட்டாயத்திலிருந்து விடுபட்டு தமது தனியார் உடைமை உரிமையோடு இருக்க முடியும்.

செயின்ட் - சைமன் நெப்போலியன் மீது நம்பிக்கை வைத்திருந்ததுபோல், அல்லது விக்டோரியா பேரரசியிடத்திலும், உருஷ்ய நாட்டின் முதலாம் நிக்கொலாசு பேரரசரிடத்திலும் ஓவென் முறையிட்டுக் கொண்டிருந்ததைப்போல், முதலாளிய ஒப்புறவில் ஒருவர் நம்பிக்கை வைப்பாராயின், அவர் பெரிதும் சூதுவாது அறியாதவராகவே இருக்க வேண்டும். ஒவெனே ஒரு முதலாளிதான்்; அவர் ஈகம் செய்ய அணித்தாயிருந்தார்; உண்மையில் ஈகமும் செய்தார். முதலாளிகளும் மாந்தத் தன்மை கொண்டவர்கள் என்று அவா நம்பினார்; அதனால் மீண்டும் "மாந்த இயல்பே" ஒரு தன்மைான பங்கை வகிக்கப் போவதாக அவர் கருகினார். அதுதான் அவரது பொன்னான நம்பிக்கையாயிருந்தது.

செயின்ட் - சைமன் காலமானவுடனேயே அவரின் தொண்டர்கள் இறுதி மாற்றம் செய்வதற்கான தேவை வந்துவிட்டது என்று எழுதினார்; ஒழுக்கவாணர்களின் கடமை அடிப்படையை நிறுவுவதே பின்னர் அதனை ஆணையாக்குவது சட்ட அமைப்பாளரின் கடமையாகும் என்று எழுதினர்.

இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? சமன்மை கொள்கைகள் இன்னும் வாகைக்கோட்டைகளாகத்தான் இருந்து வந்தன; கனவுலகநாடு எல்லாம் வியப்புக்குரியதாயின எனினும் அடையமுடியாத குறிக்கோளாகவே இருந்தன. அவை உண்மையில் அரிய உயரிய கொள்கைகள்தாம்; பிற்காலத்தில் வேறுபட்ட சூழ்நிலையிலும், வேறுபட்ட வழிகளிலும் நடைமுறை வாழ்வில் எய்தப்பெற்ற பல கருத்துகள் அவற்றில் இருக்கத் தான் செய்தன.

மாந்தன் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும், தான் பிறந்த இனத்தின் பயனாலன்றி, தனக்குரிய திறைமகளின் காரணமாகவே ஓர் இடத்தைப் பெற்றுக் கொள்ளவும் கூடிய வழிவகைகளை வழங்கும் ஒரு சமுதாய அமைப்பே, சமுதாய முன்னேற்றத்துக்கு மிக முதன்மைான அளவு கோல் ஆகும் என செயின்ட் - சைமன் கருதினார். இந்தச் வழிவகைகள் தொழில்மயமான ஒரு சமுதாயத்திலேயே உருப்பெற முடியும் என்றும் அவர் நம்பினார். அனைத்து மக்கள் உழைப்பு, மையப்படுத்தப்பட்ட பொருளியல் செயலாக்கம், மக்கள்மீது அரசாட்சி என்பதற்குப் மாற்றாக பொருள்களின் மீது அரசாட்சி (இதன் மூலம் பொருளாதாரத்தில் அரசியல் களையப்படும்) ஆகியவை இந்தச் சமுதாயத்தின் சிறப்பியல்புகளாக இருக்கும், செயின்ட்-சைமன் தமது தொழில்மயமான சமுதாயத்தில் தனியார் உடைமை, முதலீடு, ஆக்கம், ஆகியவற்றுக்கும். அதேபோல் உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் உள்ள வேற்றுமைக்கும் இடம் அளித்திருந்தபோதிலும், அந்தச் சமுதாயம் அதன் மக்கள் அனைவருக்கும் அரும்பெரும் வளத்தையும் மகிழ்ச்சியையும் அறத்தையும் உறுதிப் படுத்தும் ஆற்றல் படைத்தது என நம்பினார்.

ஆனால் தனியார் உடைமையைக் காப்பாற்றி வைத்திருந்தால், "மக்கள் மீது அரசாட்சி" என்பதற்கு மாற்றாகப் "பொருள்களின் மீது அரசாட்சி" என்ற நிலையைக் கொண்டு வருவது முற்றிலும் அருஞ்செயமாகும். இந்தக் கூறுதான் அவர்களது மாபெரிய குறிக்கோளுக்கும் அதன் கருத்தியல் தன்மைக்கும், நடைமுறை நோக்கு சற்றுமில்லாத் தன்மைக்கும், அவர்கள் கூறிய வழிகளில் அதனை நிறைவேற்ற இயலாத்தன்மைக்கும் உள்ள முரண்பாட்டை தெள்ளத் தெளிவாகப் புலப்படுததுகின்றது.

போரியரின் கொள்கையிலும் இதே இடை வெளியைத்தான் காண்கிறோம்; அதாவது எதிர்காலத்தைப் பற்றிய மாபெரும் திட்டத்தின் அடிப்படையில் அவற்றைச் சற்றும் எய்த இயலாத தன்மையையும்தான் காண்கிறோம். போரியரின் குறிக்கோளான சமூக மனிதரின் சமுதாயம் "இசைவான" கோட்பாடுகள் நடைமுறையில் செய்யப்பட்டுவரும் சமுதாயமாகும். அங்கு ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தின் மகிழ்ச்சிக்குப் பொருந்திய வகையில் தனது இன்பத்தைத் தேடிக் கொள்கிறான். ஆக்க உழைப்பில் எல்லோரும் பங்கெடுப்பதால், உழைப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேற்றுமையை ஒழிப்பதும் உறுதியாகிறது; மேலும், உழைப்பில் எதிரீடு ஏற்படுவதற்கும், உழைப்பை நாலாவகையாக்கும் விருப்பம் தோன்றுவதற்கும், அதேபோல் போரியர் "ஆர்வர்" என்று குறிப்பிடுகின்ற, பொருள்களைப் படைப்பதில் தடுக்க முடியாத அந்தச் சமூக மாந்தரின் சமுதாயம் இந்த ஆங்வங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான நிலைமைகளையெல்லாம் உருவாக்குகிறது. வேறு பல கூறுகளோடு அது மாந்தனின் வேலை செய்யும் உரிமையையும் உறுதிப்படுத்துகின்றது. அறிவியல், தொழில் நுட்ப அடிப்படையில் அமையும் பொருளியல் வளர்ச்சி அங்கு அனைத்து பொருளாயத வறுமையையும் போக்கிவிடும். அங்கு நகர்ப்புறத்துக்கும் சிற்றூர்ப் புறத்துக்கும் வேற்றுமை இல்லை; பெண்கள் வீட்டு வேலைச் சுமைகளிலிருந்து விடுபட்டிருப்பர்; அதனால் சமுதாயத்தில் சரிசமமான இடத்தைப் பெற்றிருப்பர். பிள்ளைகள் சமுதாய உழைப்பின் அடிப்படையில் வளர்ந்து ஆளாக்கப்படுவர்; மேலும் மக்களின் நடத்தைக்கு மாபெரிய நல்லொழுக்கங்களே வழிகாட்டும் கோட்பாடாகும் எனப் வெளிப்படுத்தப் பட்டிருக்கும்.

போரியர் சமூக மாந்தரின் சமுதாயம் பற்றிய ஒரு விரிவான திட்டத்தையே தீட்டிவிட்டார். அது ஓர் உலக சமுதாயமாக இருக்கும்; அதில் பல்வேறு சமன்மைக் கூட்டுக் குடும்பங்கள் - பலாங்கிகள் ஒன்றோடொன்று தன்னிச்சையான ஒப்பந்தம் செய்து கொள்ளும் அடிப்படையில் முழுமையான ஒற்றுமையைப் பெற்றிருக்கும். இந்தப் பலாங்கிகள் (2000 பேர்வரையிலும் கொண்ட) ஒப்புநோக்கில் குறைந்த உறுப்பினர் தொகையைக் கொண்ட பொருளாக்க பயனிட்டுக் கழகங்களாக ஒன்றுபட்டிருப்பர். அத்தகைய கூட்டுக் குடும்பத்தில் தொழிற் பட்டறைகள், படுக்கையறைகள், உணவருந்தும் அறைகள், பள்ளிக் கூடங்கள் முதலியவற்றைத் தன்னுட் கொண்ட ஒரு பெரிய கட்டிடத்தில் - பலாங்கிக் கூடத்தில் - வாழ்க்கை ஒருமுகப்படுத்தப் பட்டிருக்கும். உழைப்பைப் பலவிதமாக்குவதற்காக, மக்கள் தமது விருப்பம் போல் தொழில்களை மாற்றிக் கொள்வர். உழைப்பு மகிழ்வின் ஊற்றாக மாறிவிடும். பணக்காரர்களையும் உள்ளிட்ட அனைத்து மக்களும் அங்கு உழைப்பர் என்று போரியர் கூறியபோது அவர் இந்த உண்மையைத் தான்் பெரிதும் நம்பியிருந்தார்.

ஓவெனின் கொள்கை ஓரளவு வேறுபட்டதாகும். முதன் முதலாக அவரது "அறிவார்ந்த சமுதாய அமைப்பு" தனியார் வகுப்புகளற்ற அமைப்பாகும். அத்தகைய அடிப்படையில் எந்திரங்களின் அற்புதமான ஆற்றல் பெரு வளத்தை உறுதி செய்யும். புதிய சமுதாயத்தின் கருவான - சிறிய உழைப்பாளர் கூட்டுக் குடும்பத்தின் - ஒவ்வோர் உறுப்பினரும் தமக்குத் தேவையானதை யெல்லாம் பெறுவார். எந்திரத் தொழில் உழைப்புக்கும் பண்ணை உழைப்புக்கும், நகரத்துக்கும் சிற்றுார்க்கும் உள்ள வேற்றுமைகளோடு, உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் உள்ள வேற்றுமையும் முற்றிலும் மறைந்துவிடும்.

ஓவெனது கருத்துகளின் மிகப்பெருந் தன்மை குறிப்பிடத் தக்கதாகும். எனினும் அதே நேரத்தில் நிகழ்கால சமுதாயத்தின் துன்பங்களுக்கெல்லாம் பகிர்வு முறையே ஒரே காரணமாகும் என ஓவென் கருதினார். எனவே பண மாற்றுக்கு மாற்றாக நேரடியான பண்டமாற்று முறையைக் கொண்டு வந்து விட்டால், இந்தத் துன்பங்களை வெற்றி காண்பது ஏற்றதாகிவிடும் என்று நம்பினார். ஏனைய எல்லா கனவுலக சமன்மையர்களையும் போலவே, ஓவெனும் மக்களின், தொழிலாளி வகுப்பின் படைப் பாற்றலில் நம்பிக்கை வைக்கவில்லை; அவர் முதலாளிகளையே நம்பினார். அவர் வகுத்துள்ள சமுதாய அமைப்பு அவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று என்று கருதினார்.

அனைத்து சமன்மை பொதுவுடைமைக் கொள்கை களையும் விளக்குவது நமது நோக்கமல்ல. இதேபோல் பிற நாடுகளிலும் பிற புகழ் பெற்றவர்கள் இருந்தனர். சாடன்றாக, மெகலியர் போன்ற சில கனவுலக நாட்டின் எழுத்தாளர்கள் பொதுமக்கள் புரட்சியின் மூலமே சமன்மை குறிக்கோளை எய்த முடியும் என்று கருஙாதினர். அவர்களில் 19ஆம் நூற்றாண்டின் சிறப்பு வாய்ந்த உருசியச் சிந்தனையாளரான என். சி. செர்னிசெவ்சுகியும் ஒருவர். ஆனால் இத்தகைய கொள்கைகள் அனைத்தும் கருத்துருவத்தில் பல திட்பமான கூறுகளில் பிழையாகவே இருந்தன.

பொதுவாக, இத்தகைய ஆசிரியர்களெல்லாம் ஓர் கருத்தியல் சமுதாயம் வடிவத்தோடு "இருக்கக்கூடிய இடமாக" மாறிவிட முடியும் எனக் கருதினர். சான்றாக, 1823இல் செயலாய்வுக்கான ஒரு பலாங்கிக் கூட்டுக் குடும்பத்தை நிறுவினால், அது மறு ஆண்டிலேயே செயல்படத் தொடங்க முடியும் என்றும், 1828-க்குள் சமுதாய மாற்றம் நிறைவாகிவிடும் என்றும் போரியர் நம்பினார். ஓவெனுக்கோ பொதுவுடைமை அடிப்படையில் ஒரு சமுதாயத்தைக் கட்டியமைக்க கூடிய வரை பத்தாண்டுக் காலமே போதுமானதாகத் தோன்றிற்று. இத்தகைய சமுதாயத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே முனைந்து ஈடுபட்டவர்களும் - இந்தச் சிந்தனையாளர்களும் அவர் தம் ஆதரவாளர்களும் - இருந்தனர்.

செயலாய்வுகள்

1832 செப்டம்பரில் ஒரு "சமூக மனிதரின்" வேளான் தொழில் துறைக் குடியிருப்பின் நூற்றாண்டு விழா பாரீசு நகரின் சுற்றுப்புறப் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அந்தக் குடியிருப்பை, போயெர் உயிரோடு இருந்த காலத்திலேயே முனைவர் பாடெட் - டுல்லாரிலின் என்பவர் கான்டி -"சுர் வெசுகிரே என்ற தமது பண்ணையில் நிறுவியிருந்தார். அதே சமயத்தில், கசுஸ் என்னுமிடத்தில் ஒரு சிறிய இரும்புத் தொழிற்சாலையின் அடிப்படையில் காடென் என்பவர் 1859-க்கும் 1865-க்கும் இடையில் கட்டிய பாமிலிசுடெர் என்ற குடியிருப்பும் இருந்து வந்தது.

அந்தக் குடியிருப்பு வெற்றிகரமாக நடந்து வந்ததா? அந்தோ கான்டி சுர் - வெசுகிரேயில் இருந்த "சமூக மாந்தரின் குடியிருப்பு" ஏதோ ஒரு வகையான கூட்டுறவு விடுமுறைக் கால விடுதியைப் போல் எப்போதோ உருமாறிப் போய்விட்டது; ஆக்கம், பகிர்வு, பண்டப் பயன்பாடு, பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் சமன்மை அடிப்படையில் மாற்றியமைப்பதற்காக நிறுவப்பட்டிருந்த பாமிலிசுடெர் குடியிருப்பினர்களோ அனைத்து வகுப்புப் போராட்டங்ளிலும் உழைப்பாளி வகுப்பின் எதிரிகளாகவே செயல்பட்டனர்.

போரியரின் கருத்துகளிலிருந்து விலகிச் சென்றதுதானா இத்தகைய தோல்விக்குக் காரணம்? கான்டி சுர் - வெககிரேயில் இருந்த குடியிருப்பு எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டதோ, அந்தக் கோட்பாடுகளை போரியர் முழுமையாக ஒத்துக்கவில்லை என்பதும், காடென் அமைத்த பாமிலிசுடெரும் போரியரின் திட்டத்தில் ஒரு பகுதியைத்தான்் பின் பற்றியது என்பதும் தெரிந்த செய்தியே.

ஆனால், நாம் ஓவெனின் செயலாய்வினையைப் பார்ப்போம். அவர் 1824இல் அமெரிக்காவிலுள்ள இன்டியானாவில் "புதிய ஒற்றுமை" என்ற பெயரில் ஒரு சமன்மைக் குடியிருப்பை நிறுவினார். சுமார் 800 பேர் (ஒரு சிறந்த சமன்மைக் கூட்டுக் குடும்பத்தில் 800 முதல் 2000 பேர் வரை இருக்கலாம் என்ற ஓவெனின் கருத்துக் கேற்ற தொகைதான் இது). ஐரோப்பாவின் பல திசைகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தனர். (அவர்களில் அமெரிக்க நிலவியலின் தந்தையான வில்லியம் மக்லூர், அமெரிக்க உயிரியல் தந்தையான தாமசு சே, தச்சுப் நிலவியலாளரான த்ரூட், பிரஞ்சுத் தாவரவியல் அறிஞரான சார்லசு லெஸ்சூர் எட் அல் ஆகிய அறிவியலார்களின் வருகையை ஓவென் மிக இன்றியமையாததாக நம்பியிருந்தார்).

அந்தக் குடியிருப்புக்கு ஓகியோ ஆற்றின் கிளையாறு, கப்பல் போக்குவரவுக்கு உதவக் கூடியதுமான வபாசு ஆற்றின் கரையில் 30,000 காணி பரப்புள்ள நிலமும் இருந்தது. அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கிய காலத்தில் , அதில் சாகுபடி செய்யப்பட்டு வந்த வயல்களும், பழத் தோட்டங்களும், கொடுமுந்திரித் தோட்டங்களும் இருந்தன; அத்துடன் தொழிற்பட்டறைகளும் குடியிருப்பு ஏந்துகளும் கூட இருந்தன.

"புதிய ஒற்றுமை" ஓவெனின் திட்டப்படி ஒழுங்கமைக்கப்பட்டது. 1825ஆம் ஆண்டு மே முதல் நாளன்று முழுநிறைவான கூட்டு குடும்பத்துக்கான அரசியல் சட்டமானது ஓவென் தீட்டிக் கொடுத்த வண்ணம் அப்படியே நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டுக் குடும்பத்தின் வாழ்க்கை விரிவாக்கங்களின் போது 32 உடைமை, உழைப்புக்கேற்ப பகிர்வு ஆகிய அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பொதுவுடைமைக் கழகமாக மாறுவதே அந்தக் கூட்டுக் குடும்பத்தின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது. இந்த மாறுதலுக்கான காலம் மூன்றாண்டுகள் என குறிக்கப்பட்டது. ஆனால் 1826 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே குடியிருப்பின் வளர்ச்சி திட்டமிட்ட இலக்குகளையும் மிஞ்சிக்கொண்டு வளர்ந்து விட்டதாகவும், பொதுமைக் குறிக்கோளை எய்துவதற்கு எல்லாம் அணியமாகி விட்டதாவும் ஓவென் தீர்மானித்துவிட்டார். பிப்ரவரி 5ம் தேதியன்று பரிபூரண சமன்மை கொண்ட கூட்டுக் குடும்பத்துக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் புதிய கூறு என்னவெனில், சமுதாய உடைமையைத் தவிர ஒவ்வொருவரும் உணவையும் உடையையும் உறையுளையும் பெறும் உரிமையும், அத்துடன் அவர் எந்த அளவுக்கு வேலை செய்பவராயினும் அவரது வாழ்வுக்கான உரிமையும் இதன்மூலம் வழங்கப்பட்டது. அனைத்து தண்டனை களும் அன்பளிப்புகளும் ஒழிக்கப்பட்டன. சட்டம் செய்யும் அதிகாரம் பொதுருக் குழுவுக்கு உரியது: செயலாட்சி அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு உரியது; அமைப்புக்குழு பொதுக்குழுவுக்கு வாரா வாரம் அளிக்க வேண்டும். -

இவ்வாறெல்லாம் இருந்த போதிலும், பிணக்குகள் விரைவிலேயே தோன்றிவிட்டன. அரசியல் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்டவில்லை. முதலில் "புதிய ஒற்றுமை"யிலிருந்து இரு கூட்டுக் குடும்பங்கள் விலகிச் சென்றன; 1827 மார்ச்சில் மேலும் இரண்டு குடும்பங்கள் பிரிந்துவிட்டன, "புதிய ஒற்றுமை"யிலேயே எந்த வகையான ஒருமித்த கருத்தும் இல்லை; 1828ஆம் ஆண்டில் ஓவென் தோல்வியை ஒப்புக்கொள்ள நேர்ந்தது. ஆனால் அதற்கு மூன்றாண்டுகட்டு முன்னர்தான் அவர் வாசிங்டனில் பேசியபோது, "புதிய ஒற்றுமை" ஒரு புதிய காலத்தின் தொடக்கம் என்று கூறினார்; அதன் பட்டறிவானது அறிவாளிகளின் சிந்தையையும் அனைத்து அரசாங்கங்களையும் தெளியவைக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

"இக்கேரியன்" பொதுவுடைமை வரலாறோ முற்றிலும் துயரமாக முடிந்தது.

1840ஆம் ஆண்டில் பாரீசு நகரில் எட்டியென்னி கேபட் என்பவர் இக்கேரியாவுக்கு உலா என்ற தமது "மெய்யியல், சமுதாய" நாவலை வெளியிட்டார். தொன்மக்கதையில் வரும் இக்கேரசு தன் தந்தை தாடலக தனக்கென உண்டாக்கிக் கொடுத்த இறக்கைகளின் உதவியால் கிரீட் இலாபிரிந்த்திலிருந்து பறந்து செல்கிறான். பொதுவுடைமை அடிப்படையில் உருவாக்கப்பட்டதொரு உரிமைச் சமுதாய வடிவத்தை வடித்தெடுத்துக் காட்ட இந்தக் கற்பனைக் கோட்டுக்கு உதவியது.

கேபெட் இக்கேரசின் இறப்பையும் எண்ணிப் பார்த்திருக்கவேண்டும். அடிமைத்தனம் மேலாதிக்கம் செலுத்தும்போது எவரும் உரிமையாக இருக்கமுடியாது. "புதிய ஒற்றுமை"யைப் பற்றிய கதையை ஓவெனிடமிருந்தே கேட்டுத்தெரிந்து கொண்ட கேபட் அதன் தீவினையான பட்டறிவையும் கருதிப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் ஓவெனை நேரில் காணுவதற்கென்றே கேபட் லண்டனுக்குப் புறப்பட்டுப் போன காலத்தில், ஒருவேளை ஓவென் அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினாரோ என்னவோ?

எவ்வாறாயினும், 1847 மே மாதத்தில் கேபட் இக்கேரியாவுக்குப் புறப்படுங்கள்! என்ற வேண்டுகோளை வெளியிட்டார். அந்த வேண்டுகோள் சொத்துக்களெல்லாம் பொதுவாக இருக்கும், பகிர்வுகளெல்லாம் தேவைகளின் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு "புதிய துறக்க"த்தில் குடியேற வருமாறு விடுத்த அழைப்பாகும். 1848 பிப்ரவரி 3-ஆம் நாள் ரோம் என்ற கப்பல் "முதல் முன்னணிப்படை"யான 69 இக்கேரியர்களைச் சுமந்து கொண்டு, ஆவ்ரேயிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றது. 'கேபட் பாப்புலேர்' என்ற தாளிகையில் எழுதிய வண்ணம், "மாந்த வரலாற்றின் மாபெரும் துணிகர முயற்சி" தொடங்கியது. "இக்கேரியாவிலிருந்து ஏராளமான புதிய தேனிக்கள் உலகை மாற்றியமைப்பதற்காக உலகமெங்கனும் பறந்து செல்லும்" என்று கேபட் நம்பினார்.

இக்கேரியாவின் கதையை விரித்துச் செல்வதில் எவ்விதப் பொருளும் இல்லை. அது தொடர்ச்சியாகத் தோல்விகைளையே கண்டு வந்தது என்று சொன்னால் போதும். அமெரிக்காவுக்குச் சென்ற இரண்டாவது முன்னணிப்படை"யில் 1,000 முதல் 1,500பேர்போவார்கள் என்றே கூறப்பட்டது; ஆனால் 19 பேர் தான்் சென்றனர். ஆக மொத்தம் அந்தப் புதிய கூட்டுக் குடும்பத்தில் கேபட்டின் தலைமையில் 487 பேரே இறுதியில் சேர்ந்திருந்தனர். அதிலும் அந்தப் "புதிய துறத்தை" உருவாக்குவதற்கான தொடக்க முயற்சிகளைத் தொடங்கு முன்பே, இக்கேரியன் சமுதாயத்திலிருந்து 200 பேர் விலகிச் சென்று விட்டனர். இக்கேரியர்களின் எண்ணிக்கை ஒரு முறை அதிகரிப்பதாகவும் மறுமுறை குறைவதாகவும் நிலையில்லாமல் மாறிக் கொண்டே யிருந்தது; அதன் பொதுவுடைமைக் குறிக்கோளோ என்றும் போல் எட்டாக் கனியாகவே இருந்து வந்தன. இடையறாத பிணக்குகளால் கேபட்டே தமது இறப்புக்குச் சிறிது காலத்துக்கு முன்னர் இக்கேரியன் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப் பட்டுவிட்டார்.

"இளம் இக்கேரியா", "புதிய இக்கேரியன் மன்றம்", "இக்கேரியா நம்பிக்கை" ஸ்பெரன்ஜா என்பன போன்ற பற்பல பெயர்களில் சிறு இக்கேரியன் சமுதாயங்கள் பல்வேறு இடங்களில் இடையிடையே தோன்றின. இவற்றில் இக்கேரியா நம்பிக்கை கூலிக்கே ஆட்களை அமர்த்தியதன் மூலம் குழிமூடிப் போய் விட்டது; அதில் அதில் கம்யூனிச் முறை உண்மையில் முதலாளிய முறையாகி விட்டது.

வேறு பல ஆய்வுகளும் நடந்தன. அமெரிக்காவிலுள்ள புரூக் பார்ம் என்ற இடத்தில் செயின்ட்-சைமன் கூட்டுக் குடும்பம் ஒன்று உருவாக்கப்பட்டது: "சமுதாயப் ஆய்வுக்கான சிற்றுார்ச் சிறுவர்களின் இல்லம்" என்றழைக்கப்பட்டதும், பிரான்சில் 22 ஆண்டு காலம் இருந்து வந்ததுமான டாக்டர் சூவானின் கழகத்தைப் பேன்ற மோரியரிசுடுக் கழகங்களும் இருந்தன; மற்றும் (இசுகாத்லாந்திலிருந்த ஒரு பிசுடோன் கூட்டுக் குடும்பம், அயர்லாந்தில் கார்க்கிலிருந்த இரோலாகின் கூட்டுக் குடும்பம், இலண்டனிலும் ப்ர்மிங்காமிலும் ஓவென் உருவாக்கிய பண்ட மாற்றுச் சந்தைகள் ஆகிய) ஒவெனிஸ்டுக் கூட்டுக் குடும்பங்களும் இருந்தன.

இந்தச் செயல்முறை முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியிலேயே முடிவடைந்தன; இந்த முடிவு "உட்டோப்பியன்" சமன்மையின் முழு மாயைத் தன்மையைத்தான்் மெய்ப்பித்தது.

1726ஆம் ஆண்டில் இத்தாலிய மெய்யியல்வாணர் கியாம் பட்டிசுடர் விக்கோ "மனித நிலை மாந்தனில் காணப்படும் தெய்வக்கூறாகும்" என உறுதிப்படுத்தினார். இதன் மூலம் நிலை என்பது ஒரு தெய்வப் பிறவியால் முழுமையாக முன் கூட்டியே சிந்தனை செய்யப்பட்டு விட்ட ஒன்றாகும் என்ற வரலாறு பற்றிய கருத்தினை மறுத்தார்.

விக்கோவுக்குப் பின்னர் 18ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவ அறிவியக்க வாணர்கள் அனைத்து சமுதாய நிறுவனங்களையும் "பகுத்தறிவால் ஆய்வு" செய்யப் படவேண்டுமென அறைகூவல் விடுத்தனர். அவை அறிவுக்குப் பொருந்தாதவை எனக் கண்டனர்; எனவே பழைய நிலக் கிழார்வ உறவுகளுக்கு மாற்றாக முதலாளிய உறவுகள் இடம் பெற வேண்டுமெனக் கோரினர். மாந்த அறிவும் நல்லொழுக்க நெறிகளுமே உலகத்தை மாற்றியமைக்கும் தன்மை படைத்தவை எனக் கருதி வந்த 19ஆம் நூற்றாண்டின் சமன்மைகளின் மனமயக்கங்களை யெல்லாம், மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத முதலாளிய புரட்சியின் விளைவுகளும், "இல்லாத இடங்"களாகவே இருந்து வந்த 16 - 18 நூற்றாண்டுகளின் எண்ணிறந்த உட்டோப்பியாக்களும் போக்கியிருக்க வேண்டும் என்றே கருதத் தோன்றும். ஆனால் சமன்மை சமுதாய மாற்றத்தைக் கொண்டு வரும் ஆற்றலைப் படைத்த காலம் அதற்குள் பிறப்பித்துவிட வில்லை. எனவே மனித அறிவு, மனித இயல்பு ஆகிய "நிலையான" தன்மைகளையே சிந்தனையாளர்கள் அப்போதும் நம்பி வந்தனர்.

தீவினை காரணமாக வரலாற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கும் "மனித இயல்பு", மனித அறிவின் கூர்மையான தேவைகள், இனங்களைக் கடந்து நிற்கும் தூய இயற்கையான நல்லொழுக்கம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.

கடந்த காலத்தில் சமன்மை, பொதுவுடைமைக் கொள்கைகளின் உட்டோப்பியன் தன்மையைத் தெள்ளத் தெளிவாக்குவதில் இணை பிரிக்க வொண்ணாத இரு கூறுகள் இடம் பெற்றிருந்தன. அவை: நல்லொழுக்க நெறி, பகுத்தறிவு, மாந்த இயல்பு ஆகியவற்றின் மீது மட்டும் அவர்கள் வைத்த நம்பிக்கைகளும் நன்னெறி மொழிகளும் ஒரு கூறு: பொதுவுடைமை அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் படைத்த, வரலாற்றின் மூலம் அவ்வாறு செய்து முடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்த ஒரே உண்மையான ஆற்றலை, அவர்கள் மக்களிடத்திலும், அதற்கும் மேலாக தொழிலாளி வகுப்பிலும் சற்றேனும் இனங்காண முடியாது போன ஏலாத்தன்மை மற்றொரு கூறாகும்.

கருத்தியல்வாணர்களின் இரக்கமெல்லாம் பொது மக்களின் பால், தொழிலாளி வகுப்பின்பால், இருந்தது என்பது உண்மை. எனினும் அவர்கள் அம் மக்களைச் சுரண்டலுக்குரிய பொருளாகத்தான் கருதினர்ர்களேயன்றி, வரலாற்றுக்குரியவர்களாகக் கருதவில்லை.

(காம்பனெல்லா தொடங்கி) சமன்மை எழுத்தாளர்கள் பலரும் தொழில் நுட்ப முன்னேற்றத்தையும் உயர்வான உற்பத்தித் தரத்தையும் பொதுவுடைமை யோடு சரியாகவே தொடர்புப் படுத்திக் கூறினர். அவர்களில் சிலர் (செயின்ட் - சைமன், போரியர்) நடைமுறை முன்னிட்டு வரலாற்று வளர்ச்சி கருத்துக்கள் மூலம் "மனித அறிவின் கோரிக்கைகளை" வரையறுக்கவும் கூட முயன்றனர்; சமன்மையை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில்தான் எய்த முடியும் என்றும் நம்பினர். ஆனாலும் 18-ஆம் நூற்றாண்டின் முதலாளிய அறிவியக்க வாணர்களைப் போலவே, புனைவியல் சமன்மைகளும் தக்கவகையான வரலாற்று வளர்ச்சி பற்றிய தமது முடிவை அதே "மாந்த அறிவின்" அடிப்படையில்தான்் அமைத்தனர். ஆனால் அறிவை எது பெருக்கமடையச் செய்தது? குறிப்பிட்ட திசை வழிகளில் வரலாற்றைச் செலுத்திச் செல்லுமாறு அறிவைத் துண்டியது எது?

வரலாறு அதன் உரிய முறைகளின்படியேதான் வளர்ச்சி பெறுகிறது என்று முதன் முதலில் கூறியவர்களில் விக்கோவும் ஒருவர். ஆனால் அறிவை இயக்கிச் செல்லும் முறைகளை அவரால் கண்டுணர முடியாதுபோன ஏதுவானால்,தெய்வ முடிவால் விதிக்கப் பெற்ற மாற்ற முடியாத முறைகளால்தான் அறிவு பெருக்கமடைகின்றது என்ற முடிவுக்கே விக்கோவும் வந்தார். வேறு வகையாகச் சொன்னால், கடவுள் வகுத்த மாபெரும் திட்டப்படி அமைந்த ஏதோ ஒரு "குறிக்கோள் வரலாறு" தான் இருந்தது. இந்தக் காரணத்தால், "தெய்வ முடிவின் அறிவுக்கொத்த திருத்தமான சமைய நூல்களை" விக்கோ ஒரு "புதிய அறிவியல்"மாகக் கருதினார்.

அறிவு வளாச்சியின் காரணங்களையும் போக்கு களையும் பற்றிச் சிந்தித்த சில கனவுலகவாணர்களும்கூட்டாக, போரியர் - இதே முடிவுக்கே வந்தனர்.

இவ்வாறாக, சமன்மை கம்யூனிச குறிக்கோள்களைச் செயலாக்கும் பொறுப்பு தெய்வ முடிவின் பால் சுமத்தப்பட்டு விட்டது. எனவே ஏழைகள் பணக்காரர்கள் என்று வேற்றுமை பாராட்டாமல், எல்லாச் சமுதாய ஆற்றல்களின், அனைத்து மக்களின் ஒற்றுமையின் மீது நம்பிக்கை வைப்பதும் தருக்கமுறையில் பொருத்தமாகவே இருந்தது. இந்தக் கருத்து நிலையிலிருந்து கவனித்தால், பொதுவுடைமை மாற்ற அடிப்படையில் அமையும் சமுதாய ஒற்றுமையை வகுப்புப் போராட்டம் குலைக்கத்தான் செய்யும். இந்தக் காரணத்தாலேயே பாட்டாளி இனம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தைத் தொடங்கியவுடனேயே, மாபெரும் உட்டோப்பியர்களின் தொண்டர் கோடிகள் அதற்கு எதிராகக் கிளம்பி விட்டனர்.

மாபெரும் கருத்தியல் வாணர்களின் திட்டங்கள் வரலாற்றின் உண்மையான உள்ளடக்கத்துக்கு மாறாகச் சென்றன. அவர்களது மாபெரும் குறிக்கோள்களை பொது மக்கள் ஆதரிக்கவில்லை; அவர்களது ஆய்வுகளும் படு தோல்வியடைந்தன.

அறிவினால் எவ்வளவோ நிறைவேற்ற முடியும்; ஆனால் அந்த அறிவு வெளியிடும் கருத்துக்கள் வாழ்க்கையின் எதார்த்தத் தேவைகளை உண்மையாக எதிரொலித்தால் தான் அவ்வாறு முடிக்க முடியும்.

பொதுவுடைமைக் கொள்கையை அறிவியலோடும், அறிவியலைத் தொழிலாளி வகுப்பு இயக்கத்தோடும் இணைப்பது அதற்கு தேவையமாயிற்று.