வருங்கால மானிட சமுதாயம்/பொதுவுடைமையும் அறிவியலும்
பொதுவுடைமையும் அறிவியலும்
கடலுக்குள் சென்று விழவேண்டுமென்று
ஆறுகளுக்கு எப்படித் தெரியும் ?
அவற்றுக்கு தெரியாதுதான். அவை வெறுமனே சென்று விழுகின்றன. வோல்கா காசுபியன் கடலிலும், நைல் நடுநிலக் கட்டலிலும், இலேனா ஆறு ஆர்க்டிக் கடலிலும், அமெஸான் ஆறு அட்லாண்டிக் ஆழியிலும் சென்று விழுகின்றன. கங்கை, காவிரி, வங்கக் கடலிலும் அவை வெறுமனே விழுகின்றன; விழாமல் இருக்க அவற்றால் முடியாது.
ஏன் அப்படி? ஏனெனில் இயற்கையில் தென்படும் எல்லாப் பொருள்களும் தத்தம் தன்மைகளை-இயல்பு, இயற்பியல்,வேதியல், உயிரியல் தன்மைகளை, தமக்குரிய உறவுகளை, முறைகளைப் பெற்றுள்ளன. அவற்றை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை மாந்த உணர்வுக்கும் மனத்துக்கும் அப்பாற் பட்டுச் தன்னிச்சையாக இருந்து வருகின்றன. வேண்டுமானால், கிரேக்க நாட்டுப் பைரசும் அல்லது உரோமானிய நாட்டு செக்சுடசு எம்பிரிக்கசும் கூறியதுபோல், தான் அவற்றைச் சற்றேனும் பொருட்படுத்தவில்லை என்று யாரும் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் அவ்வாறு சொல்வதால் எதையும் மாற்றி விட முடியாது. முறைகளும் தன்மைகளும் உறவுகளும் என்றும் இருந்து வந்ததைப் போலவே இன்றும் இருந்து வரும். மக்கள் இயற்கை முறைகளைப் புறக்கணித்து விட முடியாது; மேலும் அவர்கள் அவற்றுடன் முற்றிலும் பொருந்தித் தான் செயல்பட வேண்டும். அப்போது தான் அவர்கள் தமது குறிக்கோள்களை விரைவாகவும் முழு உறுதியாகவும் எய்த முடியும்.
புராதன காலக் கிரேக்கர்களின் அரிய வியப்பான கதையொன்றை நினைவு கூர்வோம். துரோஜன் போரின் மாபெரும் வீரனான அக்கிலசிஸ் மீது கோபம் கொண்ட அப்பாலோ, அக்கிலஸின் குதியங்காலில் தைக்குமாறு பாரீசின் அம்பை ஏவச் செய்தான் அந்தக் குதியங்கால்தான் அக்கிலசின் உடம்பில் காயப்படக் கூடிய ஒரே இடமாகும்.
கிரேக்கர்கள் தலைவிதியையும் தெய்வத் தீர்ப்பையும் நம்பினர். எனினும் அவர்களது பல தொன்மக் கற்பனை களிலும் கதைகளிலும், மனிதர்கள் மட்டுமல்லாமல் கடவுளர்களும் கூடச் சமயங்களில் புற நிலைத்தன்மை களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது என்ற கருத்தும் தலை காட்டுகிறது. கற்பனவுவுலகில் கூறப்படும்போது, இயல்பான தொடர்புகளும் தன்மைகளும் பெரும்பாலும்"அக்கிலசின் குதியங்கால்" வடிவத்தையே பெற்று விடுகின்றன.
இயல்பு முறைகளை அடக்கியாளவும் அவற்றை மாந்தனுக்குப் பணியாற்றச் செய்யவும் வேண்டுபென்றால், முதலில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதைத்தான் அறிவியல் செய்கிறது.
கருத்துகள், ஊகங்கள், கொள்கைகள் ஆகியவை யெல்லாம் இயற்கை முறைகளோடு பொருந்தியிருந்தால் தான் அறிவியலில் இடம் பெறுகின்றன. ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன் உலகைப்பற்றிய பருதி மண்டலக் கருத்தை வகுத்துக் கூறிய கோப்பர்னிக்கஸின் நூலை வாட்டிகன் திருச்சபை தடை செய்து விட்டது. கோப்பர்னிக்கசின் தெய்வப் பழிப்பான கொள்கையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க மாட்டோம் என்று வானியல் பேராசியர்கள் வாக்குறுதி கொடுக்க நேர்ந்தது. அந்தப் புத்தகம் படிக்கப்படவில்லை; எடுத்துக் கூறப்படவில்லை; அத எரிக்கவும் பட்டது. ஆனால் கோப்பர்னிக்கசின் கொள்கை சரியானதன்று என்று இன்று யார்தான் மறுக்க முடியும்?
ஒரு கருத்தோ கொள்கையோ தவறானால், இயற்கை முறைகளுக்கு முரண்பட்டதனால், அதற்கு எவ்வளவுதான் வலுவான காவலும் தடுத்து நிறுத்த முடியாது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் எந்திரத்தை உருவாக்க எண்ணுவது மிகவும் கவர்ச்சியான ஆசை தான். இன்றும் கூட இந்த எண்ணத்தைக் கைவிடாதவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சிலரோ அப்படிப்பட்ட எந்திரத்தைத் தாம் உண்மையிலேயே கண்டு பிடித்து விட்டதாகக் கூட நம்புகின்றனர். ஆனால் என்றென்றும் இயங்கிக் கொண்டிருக்கும் எந்திரங்களைப் பற்றிய திட்டங்களை, எந்த ஒரு நாட்டிலுள்ள எந்தவொரு வணிக நிலையமும் ஏறிட்டுப்பார்க்கக்கூடத் அணியமாய் இராது. அவற்றை உருவாக்க முடியாது; ஏனெனில் அவை இயற்கை நியதிகளுக்கு மாறானவை.
சமுதாயத்தையும் கூட, இயல்பு முறைகள் ஆண்டு வரக்கூடுமோ? ஒருவேளை எவரது விருப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு பொருங்கடலுக்குள் "அதுவும் சென்று விடுகின்றதோ?"அவ்வாறு விழுவதுதான் அதன் வளர்சியின் நடைமுறைப் போக்கோ?
மூரிலிருந்து ஓவென் வரையிலும் கடந்த காலத்தின் அனைத்து கருத்தியல் உலகம் சமன்மையாளர்களும் அந்தப் " பெருங்கடலை" - அறமும் சமன்மையும் நிலவும் வருங்கால சமுதாயத்தை - தேடியலைந்தனர்; ஆராய்ந்தனர். ஆனால் அந்தக் கடலின் அடியாழத்துக் குள் நடத்திய ஆராய்சி பெரும்பாலும் பிழையாகவே முடிந்தது; அது நடைமுறைக்குகந்ததாக இல்லாதிருந்தது; போதுமான அளவுக்குத் "தகுதி" பெற்றிருக்கவும் இல்லை. அந்த ஆராச்சியாளர்கள் பொதுவுடைமைக்குச் செல்லும் நடைமுறைக்குகந்த வழியைக் காணவில்லை; உண்மையில் அவர்களால் காண முடியவில்லை.
"நடைமுறைக்குகந்தம்" என்று சொன்னால் அது மாந்தர்களின் சித்தத்தையோ, அறிவையோ, விருப்பையோ பொருட்படுத்தாது தானே நிலவிவரும் ஒன்றாகும். அறிவியலின் நிலையை வளர்த்துச் செல்ல, பொதுவுடைமைக் கொள்கையானது வரலாற்று நியதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். இந்த நியதிகளை சிறப்புமிக்க மெய்மைவாணர்களும் புரட்சிவாணர்ளும் ஆன காரல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கெல்சும் சென்ற நூற்றாண்டின் 40ஆம் ஆண்டுகளின் போது கண்டு பிடித்த போதுதான் இந்த ஆதரவு கிட்டியது.
மார்க்சும், ஏங்கெல்சும், லெனினும் இவர்களது சீடர்களும் சமுதாய வளர்ச்சியின் எதார்த்த பூர்வமான நியதிகளை ஆராய்ந்தனர்; கம்யூனிசக் கொள்கையை உட்டோப்பியாவிலிருந்து விஞ்ஞான நிலைக்கு உயர்த்தினார்.
கனவுலக
அறிவியலுக்கு
18ஆம் நூற்றாண்டிலேயே வரலாற்றை ஓர் எதார்த்தபூர்வான வளர்ச்சிப் போக்காக பொருள்படுத்தும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். அம் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின. ஏனெனில் அவை அனைத்தும் வரலாற்று வளர்ச்சியை மாந்த அறிவின் வளர்ச்சியாகவும் முழுநிறைவாகவும் கருதின; இந்தக் கருத்தினால் அதனை நன்மை தீமை பற்றிய கருத்துகளின் வளர்ச்சியாகவும் கருதின; இந்தக் கருத்து வளர்ச்சியே அனைத்து வரலாற்று மாற்றங்களிலும் தீர்மானக் அம்சமாகும் என்ற கருத்தின் மூலமே அணுகித் தோற்றுப் போயின. ஆனால் அந்த அணுகல் முறையில், அறிவும் நல்லொழுக்கமும் வளர்ச்சி பெறுவதற்கான அடிப்படையைப் பற்றிய வினாக்களுக்கோ, அவை பல்வேறு காலங்களில் பல்வேறு வகையாக இருந்ததன் காரணத்துக்கோ விடை கிட்டவில்லை.
மார்க்சு இந்தக் வினாவை எழுப்பி அவற்றுக்கு விடையும் அளித்தார். மாந்தனின் வாழ்விலும், சமுதாய வளர்ச்சியிலும் அறிவுக்கும் நல்லொழுக்கத்துக்கும் உள்ள பங்கு உறுதியாய் மிகச் சிறப்பானது தான். வீட்டைக் கட்டுவதற்கு முன்னால் அதனைத் தாளில் வரைந்து பார்த்துக் கொள்ளும் நிலைகளில் இழிவான மனைச் சிற்பிகட சிறந்த தேனியைக் காட்டிலும் மேம்பட்டவன் தான், ஆனால் அவன் தனது வரைபடங்களில் புறநிலை இயல்புச் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் அவனது திட்டம் தாள் நிலைக்கு அப்பால் சிறிதும் முன்னேறப் போவதில்லை. அடிப்படையின் உறுதிப்பாடு அல்லது அந்த உறுதிப்பாட்டை உண்டாக்கும் பொருள், கட்டுமானப் பொருள்களின் தன்மை, கட்டுமானமுறை முதலிய பலவற்றையும் அவன் கருத்தில் கொள்ள வேண்டும்.
சமுதாயத்திலும் கூட, கருத்துக்களும் நல்லொழுக்கக் கோட்பாடுகளும் கொள்கைகளும் சமுதாய அமைப்பின் கட்டுமானத்தை அல்லது புனர்நிர்மாணத்தை ஊங்குவிக்க முடியும்; எனினும் அவை அதன் இருப்பு, வளர்ச்சி ஆகியவற்றின் முறைகளோடும் நடைமுறைக்குகந்த பாடுகளோடும் இணைந்து பொருந்தியிருக்கவேண்டும். சமுதாய வாழ்க்கையின் உண்மை நிலைமைகளைக் கருத்தில் கொள்வதே பொருள் முதலியல் வரலாற்று விளக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இது மிகவும் எளிதாகத் தோன்றலாம். உண்மையில் பொருள் முதலியல் வரலாற்று விளக்கமானது முதன் முதலாக மக்கள் எல்லோருக்கும் உண்ண உணவும் உடுத்தத் துணியும் கிட்டவேண்டும், எல்லோரும் வாழ்வின் பொருளியல் தேவைகளைப் பெற்றாக வேண்டும் என்ற எளிய உண்மையைத்தான் கூறுகிறது. பொருளியல் தேவைகளைப் பெற்றாக வேண்டும் என்ற எளிய உண்மையைத்தான் கூறுகிறது. பொருளியல் செல்வங்களின் ஆக்கத்தையும் பகிர்வையும் முறைப்படுத்தும் பொருளியல் உறவுகளில்தான் வாழ்க்கையின் அடிப்படை அமைந்திருக்கிறது. இந்த உறவுகளே சமுதாயத்தில் வகுப்புகள் இருப்பதையும் இல்லாதிருப்பதையும் உறுதி செய்கிறது. பொருளியல் உறவுகள் சகல அரசாங்க, சட்ட உறவுகளையும், அதே போல் ஒவ்வொரு வரலாற்றுச் காலத்தில் மெய்யியல், சமய நல்லொழுக்கக் கருத்துகளையும், பிற கருத்துகளையும் உருவாக்கும் கூறாக உண்மையில் விளங்குகின்றன. மனிதரின் மனவுணர்வு அவர்களின் வாழ்க்கையை உறுதிசெய்யவில்லை; மாறாக, அவர்களது வாழ்க்கையை உறுதி செய்கின்றது. காட்டாக, ஆண்டானுக்கு முற்றிலும் உரிமையான உடைமைப் பொருளாக மாந்தனை மாற்றும் அடிமைமுறையை நமது காலத்தில் மாந்த வகுப்பில் மிகப் பெரும்பாலோர் , மேல் வர்க்கங்களை சேர்ந்தவர்களும் கூட , மனித இயல்புக்கே மாறானது என்று கருதுகின்றனர் : அடிமை முறைக்கு ஆதரவான பேச்சுரையே தாழ்வானது என்று கருதப்படுகிறது. எனினும் அடிமை கருதப்படுகிறது. எனினும் அடிமைகளை வைத்திருக்கும் சமுதாய அமைப்பில் அடிமைத்தனத்தின் "இயல்புத் தன்மை" முற்போக் கானவர்கள் இடையிலும் கூட எந்தச் சிக்கலையும் எழுப்பவில்லை; அடிமைகளை வைத்திருப்பது அப்போதைய வாழ்க்கை முறையாக இருந்தது.
மக்கள் எந்தக் கருவிகளைக் கொண்டு இயற்கையின்மீது செல்வாக்கைப் பயன்படுத்து கின்றார்களோ, அதனை மாற்றியமைக்கின்றார்களோ, அதன் மூலம் தமது வாழ்க்கையின் பொருளியல் நிலைமைகளை உருவாக்குகின்றார்களோ, அந்தச் கருவிகளின் இயல்பு, வளர்ச்சிநிலை ஆகியவற்றைத் தான். அதாவது சமுதாயத்தின் விளவு ஆற்றல்களைத் தான் பொருளியல் உறவுகளும் சார்ந்து நிற்கின்றன. எடுத்துக் காட்டாக, கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தமது உயிர் வாழ்க்கைக்குத் தேவையான எளிய உணவைக் கூடக் கருவிகளைக் கொண்டே பெற்றுவந்த காலத்தில் (அதுவும் கூட சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்கள் சேர்ந்து உழைத்தால் தான் வெற்றியாயிருந்த காலத்தில்), அவர்கள் தம்மிடம் கைதியாகி விட்ட ஒருவனை அடமையாக்க வேண்டும் என்று முயன்றிருந்தால், அந்த அடிமை ஐந்து நாள்கள் கூட உயிர் வாழ்ந்திருக்க மாட்டான். ஏனெனில் சமுதாய உறவின் அடிப்படை வடிவமாக அடிமைமுறை மாறுவதற்கு, உயிர்வாழ்க்கைக்குத் தேவையான பயன்பட்டுப் பண்டங்களின் குறைந்த அளவு தேவைக்குமேல் குறைந்த அளவு உபரிப் பண்டங்களையேனும் சமுதாயம் வழங்க வேண்டிருந்தது; இல்லையெனில் அந்த அடிமை பட்டினியால் மாண்டிருப்பான். சமுதாய உறவுகள், அவை எந்த வகையைச் சேர்ந்தனவாயினும், எப்போதும் ஆக்கத்தியின் நிலையையே சார்ந்திருக்கின்றன.
சமுதாய வளர்ச்சி அதனை உருவாக்கும் கூறுகளின் செயலெதிர்ச் செயலில்தான் அடங்கியுள்ளது. வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஆன்மிக கூறும் பொருளியல் பங்கைக் காட்டிலும் முதன்மை நிலை குறைந்ததன்று. ஆனால் அவற்றின் செயலெதிர்ச் செயல் பொருளியல் வளர்ச்சியின் அடிப்படையில் தான்் அமைந்துள்ளது. இங்கு தான் அனைத்துச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் மாறுதல்களுக்கும் உரிய காரணங்களின் இறுதியான விளக்கம் அடங்கியுள்ளது. நடப்பில் இருந்து வரும் சமுதாய உறவுகளின் அறிவுக் கொவ்வாத் தன்மையையும் முறைகேட்டை உணர்ந்தறிவது என்பதே, பழைய பொருளியல் "அளவு கோலால்" அளந்து பார்க்கப்பட்ட சமுதாய அமைப்போடு, இனியும் பொருந்தி வராது போகும் அத்தகைய படைப்பு முறை மாற்றங்களின் விளைவாகத் தான் தோன்றுகின்றது.
சமுதாய வளர்ச்சியில் ஒவ்வொரு சமுதாயமும் ஒன்றையடுத்து ஒன்றாய்த் திட்வட்டமான வரிசை முறையில் உண்மையாக இடம்பெற்று வந்த முதன்மைக் காலகட்டங்களை இனங்கண்டு தெளிவதை, பொருள் முதலியல் வரலாற்று விளக்கம் உறுதியாக்கிற்று. அந்தக் காலப் பகுதிகள் சமுதாய -பொருளியல் அமைப்புகள் எனக் கூறப்படுகினறன. அவற்றில் ஐந்து வகையுண்டு. அவை: தொல்பழங்காலக் கூட்டுக் குடும்ப அமைப்பு; அடிமைச் சமுதாய அமைப்பு: பெருநிலக்கிழமை; முதலாளியம்; பொதுவுடைமை.
அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அமைப்பும் ஆக்க வளர்ச்சிக்கு மேலும் வாய்ப்பான ஆக்கப் பாடுகளை வழங்குகின்றது, மேலும் உயர்நிலையான உழைப்பின் விளைவாற்றலைப் பெறவும், சமுதாயத்தை மேலும் வளம் பெறச் செய்யவும் ஆற்றல் படைத்துள்ளது என்ற காரணத்தால் தான் ஒரு சமுதாய - பொருளியல் அமைப்பை நீக்கி விட்டு, அதன் இடத்தில் புதிய அமைப்பு இடம் பெற நேர்கிறது. சான்றாக, புற நிலை உண்மை முறைகளுக் கேற்பவே ஒரு நிலக்கிழமையை நீக்கி விட்டு முதலாளியம் இடம் பெற்றது. ஏனெனில் நிலக்கிழமையின் கீழிருந்த அங்காடிப் பொருள் உறவுகளின் வளர்ச்சி கூட்டுறவையும், பெருவாரி விளைவையும் தோற்றுவித்தது. இதனால் உரிமை மிக்க உழைப்பாளிகளுக்கான தேவை பிறந்தது; அதே நேரத்திலோ நிலமும், அதன் இயற்கைச் செல்வமும், நிலத்தை உழுது பயிரிடுவோர் கூட்டமும்கூட நிலக்கிழார்களின் உடைமையாகவே இருந்தன. எனவே நிலத்தின் மீதிருந்த நில மேலாண்மைச் சொத்துரிமையை ஒழிப்பதும், அடிப்படைப் பொருள்களின் பெருக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்காகப் பண்ணையடிமையை ஒழிப்பதும் இன்றியமையாததாயிற்று. வெகு மக்களின் ஆதரவோடு முதலாளிகள் பண்ணையடிமையத்தை ஒழித்தனர்; இதனால் உரிமைமிக்க தொழில் வளர்ச்சியும் உழைப்பாளிகளைக் கூலிக்கமர்த்தும் முறையும் தோன்றின. முதலாளிகள் வெற்றி பெற்றனர்; ஏனெனில் அந்தக் காலத்தில் அவர்களது குறிக்கோள்கள் புறநிலை நடப்போடும், வரலாற்று வளர்ச்சியின் நடைமுறைப் போக்கோடும் ஒத்திருந்தன.
எந்த ஒரு புதிய அமைப்பும் பழைய அமைப்பைத் தானே நீக்கிவிட்டு வந்து விடுவதில்லை, ஆனால், அந்தப் புதிய அமைப்பின் தோற்றமே படைப்பாற்றல்களின் குணத்தாலும் வளர்ச்சி நிலையாலும் தான் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். சமுதாய வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கான நிலைமைகள் முந்திய அமைப்பின் வரம்புக்குள்ளேயே தோன்றி விடுகின்றன.
சமுதாய - பொருளியல் அமைப்புகளின் வளர்ச்சியைப் புரிந்து கொண்டதான்து, வரலாற்று வளர்ச்சிப் போக்கின் ஒருமைத் தன்மையைப் புலப்படுத்துவதை முடிவாக்கிற்று, எந்த மக்களின் வரலாறும் பெருமளவுக்குத் தனித் தன்மை வாய்ந்தது என்பது உண்மையே. சான்றாக, பல்வேறு நாடுகளின் முதலாளிய அமைப்பை அலசிப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியவரும். ஆனால் அந்த நாடுகளின் அடிப்படையான நிலைமைகள் முதலாளியத்தையும் அதன் பொருளியல் உறவுகளையும்தான் முகவாண்மைப் - படுத்துகின்றன; அவற்றின் சிறப்புத் தன்மைகளான ஆக்கக் கருவிகளின் உடைமை, பகிர்வு, வகுப்பு உறவுகள் ஆகியவற்றின் வடிவங்கள் திட்டவட்டமாக முதலாளியக் குணத்தையே பெற்றிருக்கின்றன. அமெரிக்க ஒன்றிய நாடுகள்,செருமனி கூட்டுக் குடியரசு, பிரிட்டன், இசுபெயின், சப்பான் அல்லது தென் ஆப்பிரிக்கக் குடியரசு முதலிய எந்தவொரு முதலாளிய நாட்டிலும் ஆக்கக் கருவிகள் முதலாளிகளுக்கே உரிமையாக உள்ளன; பகிர்வு, எல்லாவற்றுக்கும் மேலாக முதலீடு செய்யப்பட்ட முதலீட்டின் அளவையே சார்ந்துள்ளது; முதலளிகளுக்கெதிரான பாட்டாளிகளின் போராட்டம் அங்கு என்றும் ஓய்வதில்லை.
அனைத்து முதலாளிய நாடுகளிலும் வளர்ச்சியின் நடைமுறையிலான முடிவுகளை தீர்மானிக்கும் பொருளியல் நிலைமைகள் ஒன்று போலவே இருப்பதால், இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எந்தவொரு முதலாளிய நாட்டின் உடனடியான எதிர்காலமும்கூட அடிப்படையில் ஒன்று போலத்தான் இருக்கின்றது.
ஒரு நாட்டு மக்களின் அடிப்படையான வரலாறு எண்ணிறந்த கூறுகளைச் சார்ந்ததாகும் என்பது சொல்லாமலே விளங்கும். நிலவியல் நிலைமைகள், வண்ண இன தேசிய இன உறவுகள், சமைய ஆட்சியின் அளவு, வரலாற்று வகையான பல்வேறு செல்வாக்குகள் ஆகியவற்றோடு, பல்வேறு பொதுமக்கள் இயக்கங்களை முன்னின்று நடத்துவோரின் குணக்கூறுகள் ஆகியவையும் அந்த உரிமைப்பங்காகும். எனவே பல்வேறு மக்களின் வரலாற்ற வளர்ச்சியில் முழுநிறை ஒருமைத் தன்மை என்பது இருக்க முடியாது.
எவ்வாறாயினும், ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் நுணுக்க விளக்கங்களிலும் போக்குகளிலும் எவ்வளவு சிறப்புத் தன்மை பெற்றிருந்தபோதிலும், வரலாற்று வளர்ச்சியின் திசைவழியானது மனிதகுலம் முழுமைக்கும் பொதுவானதேயாகும்.
ஆக்க வளர்ச்சியிலும், ஒரு வகை படைப்பு முறைக்கு வேறாக மறுவகை படைப்புமுறை நடைமுறையில் இடம் பெறுவதிலும்தான் வரலாற்று வளர்ச்சியின் மிக ஆழமான சாறாம் அடங்கியுள்ளது.
மார்க்சு கூறிய மிகை மதிப்பின் முறைமை முதலாளிய சுரண்டலின் திறமையை வெளிப்படுத்தியது: முதலாளிய ஆக்க முறையில், படைப்புக் கருவிகளின் உடைமை யாளனான முதலாளி தொழிலாளியின் உழைப்பில் ஒரு பங்கை, அதற்கு எந்தவிதக் கூலியும் கொடுக்காமலே, தனக்கு உரிமையாக்கிக் கொள்கிறான். என்றென்றும் வளர்ந்தோங்கும் தனது ஆக்க வேட்கையைத் தணித்துக் கொள்ள முதலாளி எந்த வழியைக் கடைப்பிடிக்கிறான் என்பதை மிகை மதிப்பின் முறை புரிய வைத்தது. ஊதியம் அளிக்காத மிகை உழைப்பின் அளவை அதிகரித்துக் கொண்டு போவதே அந்த வழியாகும்.
முதலாளியத்தின் கீழ் சுரண்டலை ஒழித்துக் கட்டுவதென்பது இயலாத செயல். மேன்மேலும் ஊதியம் பெறுவதற்கு நிரந்தமாகப் பாடுபடுவதை முதலாளியம் தோற்றுவிக்கிறது. இது நிலையான முயற்சிதான். ஏனெனில் மேலும் மேலும் ஊதியத்தைப் பெருக்கிக் கொண்டு போனால்தான் முதலாளி எதிர்நிலையைச் எதிர்த்து நிற்க முடியும். மேலும் முதலாளியம் சுரண்டலுக்கான "நாட்டு எல்லைகளையும்" தவிர்க்கொணாத வண்ணம் விரிக்கின்றது. பிற தேயங்களை, வலுவற்ற நாடுகளை அடிமைப் படுத்தும் போக்கு, அதாவது உலக ஆதிக்கத்துக்குப் பாடது அதனுள் உள்ளார்ந்து உறைந்திருக்கிறது.
எனவேதான் படைப்புக் கருவிகளில் தனியார் உடைமையைக் கட்டிக் காத்துவரும் நிலைமைகளின் கீழ் சமன்மை குறிக்கோள்களை நனவாக்குவதற்கான திட்டங்கள் நடைமுறைக்குப் புறம்பானவையாயுள்ளன.
பாட்டாளி இனமும் அவர்களோடு ஒன்றுபட்டி ருக்கும் அனைத்து உழைக்கும் மக்களும் தமது வகுப்புப் போராட்டப் போக்கின்போது, தமது வர்த்த நலம்களுக்கும் நடப்பில் இருந்துவரும் சமுதாய உறவுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை மேன்மேலும் தெள்ளத் தெளிவாகக் கண்டுணர்கின்றனர். இதன் விளைவாக, மனிதனை மனிதன் சுரண்டும் சரண்டலையும் ஒடுக்குமுறையையும் ஒழித்துக் கட்டும் திசை வழியில் அவர்கள் தமது முயற்சிகளைச் செலுத்துகின்றனர்.
பொருள் முதல் வரலாற்று விளக்கமும், வெளியாகி விட்ட முதலாளிய விளைவு முறையின் சாறம் தான் பொதுவுடைமையை அறிவியல் ஆக்குவதற்கு உதவின.
அறிவியல் பொதுவுடைமையின் வரலாற்றுக் குணமே, அதற்கும் அதற்கு முந்திய ஏனைய எல்லா சமன்மைக் கொள்கைகளுக்கும் இடையே தென்படும் முதல் வேறு பாடாகும். சமுதாயம் பொதுவுடைமைக்கு மாறுவது ஒரு தருக்கமுறையான வளர்ச்சிப் போக்கு என்ற, அத்தகைய மாற்றத்துக்கான ஆக்கப்படம் இன்றியமையாமும் அதற்கு முந்திய சமுதாய அமைப்பிலேயே உருவாகி விடுகின்றன என்ற மறுக்க முடியாத உண்மையோடுதான், கனவுலகை அறிவியலாக மாற்றும் பணி தொடங்கியது. உண்மையில் பொதுவுடைமையை நிறுவுவதென்பது பொருளியல் தன்மை கொண்டதே. கம்யூனிச சமுதாயம் முதலாளியம் உண்டாக்கிவிட்ட நிலைமைகளால் தான் உருவாகிறது.
முதலாளியத்தை நீக்கிவிட்டுக் பொதுவுடைமை இடம் பெறுவதன் தவிர்க்கொணாத பொருளியல்த் தன்மையானது, முதலாளிய விளைவாக்க திட்ட வட்டமான சமுதாயத் தன்மையைப் பெற்றிருக்கும் உண்மையில்தான் முதன் முதலாக அடங்கியுள்ளது. உண்மையில் முதலாளியத்தின் கீழ் உழைப்பால் உருவான எந்த ஆக்கம் செய்யப்பட்டதாயினும் கூட, கூட்டு உழைப்பின் மூலம் விளைவாக்கம் செய்த பொருளாகத்தான் உள்ளது -அதாவது அந்தப் பொருள் ஏனைய தொழிலாளர்கள் அல்லது உழவர்கள் படைத்துத் தந்த மூலப் பொருளிலிருந்து, ஏனையோர் கட்டி முடித்த எந்திரத்தின் உதவியினாலும், இன்னும் பலர் விளைவு செய்து தரும் மின்விசையாலும் ஆக்கமாகும் பண்டமாகவே உள்ளது. சிதைக்க முடியாத, கண்கண்ட, காண்காணாத பிணைப்புகளால் பல்வேறு தொழில்களும் அதில் ஒன்றோடான்று பிணைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான விளைவாக்க ஆற்றல் களையும் பயன் படுத்தி, சமுதாய ஆக்கத்தை இயல்பாக நடைபெறச் செய்வது, அதனை வளர்ப்பது, நெருக்கடிகளும் தேக்கமும் இல்லாதிருப்பது என்பவை யெல்லாம், முதலாளியத்தின் கீழ் சாத்தியமே இல்லை; ஏனெனில் அதில் உழைப்பின் பயன்களை படைப்புக் கருவிகளின் உடைமையாளர்கள் தனிப்படத் தமக்கு உரிமையாக்கிக் கொள்கின்றனர். எனவே தனியார் உடைமையை அகற்றிச் சமுதாய உமைமையைக் கொண்டு வருவது தான் உற்பத்தியின் சகஜமான வளர்ச்சிக்கான ஆரம்பத் தேவைக் கூறுகளை உறுதி செய்ய முடியும்.
சமுதாய உடைமையை நிறுவுவதான்து முதலீட்டை ஒன்று குவிப்பதையும் நடுமைப்படுத்துவதையும் நிறைவு பெறச் செய்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இந்த வளர்ச்சிப் போக்கு முதலாளிய வளர்ச்சியின் ஏரணவகையின் விளைவாகவே, முதன்மையாக முதலாளியப் போட்டி முறையின் விளைவாகவே, முதலாளிய ஆக்க முறைக்குள்ளேயே பொங்கிவந்து கொண்டிருந்த ஒரு போக்குத்தான். விளைவாகக் கருவி களின் தனியார் உடைமையை அகற்றிச் சமுதாய உடைமையை ஏற்படுத்துவது சமுதாய வளர்ச்சியில் ஒரு பண்பு மாற்றத்தைக் குறிக்கின்றது; அதன்முன், பரந்துபட்ட வரலாற்று வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கிறது.
கருத்தியல் நாடுகள் முட்டி மோதி நிலைகுத்தி நின்றுவிட்ட இடத்தில், அறிவியல் பொதுவுடைமை வெற்றி பெற்றுவிட்டது. கனவுலகுகளெல்லாம் முதலாளிய உறவுகளை ஆய்வு செய்தன; ஆனால் அவற்றைப் புரிந்து கொள்ளவோ, அல்லது முறையான சமுதாய மொன்றை உருவாக்கும் நடைமுறை சார்ந்த வழிகளைக் கண்டறியவோ அவற்றால் இயலவில்லை. சமுதாய அமைப்பைப் பொறுத்தவரையிலும் நன்னெறி அறிவுரை செய்வதை அறிவியல் பொதுவுடைமைக் கோட்பாடு தீர்த்துக் கட்டிவிட்டது. குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டம் வரையிலும் முதலாளியம் இருந்தே தீரும் என்பதையும், எனவே அதனை மிகவும் முற்போக் கானதொரு சமுதாய - பொருளியல் அமைப்பினால் அகற்றுவதும் தவிர்க்கொணாதது என்பதையும் அது மெய்ப்பித்தது.
முதலாளியம் பொதுவுடைமைக்கான அடிப் படையை நிறுவியது; ஏனெனில் விளைவாக்கத்தை வளர்ப்பதன் மூலம், அது உரிமைக்கும் சமன்மைக்குமான பொருளியல்த் தேவைக் கூறுகளை உருவாக்கியது. வகுப்புகள் ஒழிக்கப்பட வேண்டும்; அப்போதுதான்் சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம் என்பது வெறும் ஒப்புக்கென்று இல்லாமல், உண்மையான சமன்மையாக மாறும். இதற்கு, தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளிக்க உதவும் வகையில், பொருளியல் உயிர்வாழ்வுச் செல்வங்களின் மிகப்பெரு வளமும் இன்றியமையாததாகும். முதலாளியத் தின் கீழ் தொழில் நுட்ப முன்னேற்றம் பொங்கிப் பிரவகிக்காது போயிருக்குமானால் என்றுமே பொதுவுடைமையை எய்தியிருக்க முடியாது.
அறிவியல் பொதுவுடைமைக் கொள்கையின் வரலாற்றுக் பண்பானது, அது முதலாளியத்தின் கீழ் மக்களுக்கிடையே நிலவும் உறவுகளை ஒழிப்பதன் இன்றியமையாமையை மெய்ப்பித்துக் காட்டிய உண்மையிலும் அடங்கியுள்ளது. உருவாக்க கருவிகளின் தனியார் உடைமையையும், உழைக்கம் மக்களைச் சுரண்டும் வகுப்புகள் அடக்கியெடுக்குவதையும் ஒழிப்பதே. "பொற்கால"த்தைக் கொண்டுவரக்கூடிய பங்காகும்; இதனை செயின்ட் - சைமனும் கூட, கதைகள் கூறிவந்ததைப் போல் கடந்த கால பொருளாகக் கருதாமல், வருங்காலத்தில் வரப்போகும் நிகழ்ச்சி என்று சரியாகத் தான் கூறினார்.
நிலக்கிழமையை அகற்றிவிட்டு எவ்வாறு முதலாளியம் வந்ததோ, அதேபோல் முதலாளியத் திலிருந்து பொதுவுடைமைக்கு மாறுவதும் அத்தனை தேவையானதும் தருக்க முறைமையானதும் ஆகும். முதலாளிய முறை, தான்ே தோற்றுவிக்கும் விளைவாக்க ஆற்றல்களோடு, தனியார் - உடைமை பகிர்வின் குறுகிய வரம்புக்குள் இனியும் பொருந்தியிருக்க முடியாத விளைவாக்க ஆற்றல்களோடு மோதுகிறது.
எனினும் புத்தம்புதிய முதலாளித்துவம் தனது ஆக்க ஆற்றலை யெல்லாம் தீர்த்து விட்டது என்று கருதுவது தவறாகும், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பல முதலாளிய நாடுகளில் கணிசமான விளைவாக்க வளர்ச்சி தென்பட்டுள்ளது; அத்துடன் உழைப்பின்விளைவுகளும் உழைப்பு முறைகளும், ஆக்கத்தின் தொழில் நுட்பச் செய்முறைகளும், கருவிகளும் அங்கு புதுமை மயமாக்கப் பட்டுள்ளன. இதனைப் பல்வேறு சூழ்நிலைகளின் மூலம் விளக்கவேண்டும்; உலக அங்காடியில் தனித்தோங்கிய முதலாளிகளுக்கிடையே நடைபெறும் கடுமையான எதிர்நிலை, தன்னிச்சையான பொருளியல் வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்துள்ள புதிதாக வளர்ந்து வரும் இளம் நாடுகளின் மீது பொருளியல், அரசியல் செல்வாக்கைச் செலுத்த அவர்கள் நடத்தும் போராட்டம், தொடர்ச்சியான படைப்பெருக்கப் போட்டி ஆகியவையே அச் சூழ்நிலைகளாகும்.
எனினும், இவையெல்லாம் தாற்காலிகமான தன்மைகள் தாம். ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் உள்ள இளம் நாடுகள் எய்தியுள்ள பொருளியல் முன்னேற்றமானது உலக அங்காடியில் முதலாளியத்தின் முடிக்கத்தக்கத் தீவிரமாகக் குறைக்கும். சமன்மைக் கூட்டுக் குடும்பம் வளர வளர, அது தன்னிச்சையான இளம் அரசுகளுக்குத் தான் அளித்துவரும் உதவியை அமைதியாக அதிகரிக்கும்; இது தனி வல்லாட்சி அரசுகளுக்கு இன்னும் பெரிய தொல்லைகளை விளைவிக்கும்.
தொகுத்துச் சொல்வோம்; உழைப்பின் விளைவாக்க ஆற்றல் குறைவாக இருந்து, அது உயிர் வாழ்க்கைகுத் தேவையான பொருள்களை மிகமிகக் குறைந்த அளவில் மிகுதியாக விளைவு செய்து வந்தபோது, மாந்தனை மனிதன் சுரண்டும் சுரண்டல் இருந்தால் தான் பொருளியலை வளர்க்க முடிந்தது. முதலாளியத்திலோ, பொருளியல் வளர்ச்சி ஒரு கட்டத்தை எய்துகிறது. முதலாவதாக, அதில் உழைக்கும் மக்கள் ஆலைகளிலும் தொழிற் சாலைகளிலும் வேலை பார்ப்பதோடு, அரசியல் நடைமுறைகளிலும் பங்கெடுக்க முடிகிறது; இரண்டாவதாக, சமுதாயத்தின், அனைத்து மக்களின் நிலையான வளர்ந்தோங்கும் தேவைகளைப் நிறைவு செய்யும் நோக்கத்தைப் பெற்றிராத முதலாளிய விளைவாக்கம், தான்் தோற்றுவிக்கும் விளைவாக்க ஆற்றலையே தவிர்க்கொணாத வண்ணம் கட்டுப்படுத் துகிறது. மூன்றாவதாக, ஆக்கத்தின் சமுதாயத் தன்மைக்கும், தனியாரின் செல்வச் சேமிப்புக்கும் இடையே முதலாளியத்தின் கீழ் முற்றி வரும் மோதலை, அதைக் காட்டிலும் மேம்பட்ட சமுதாய அமைப்புக்கு மாறுவதன் மூலமே தீர்க்க முடியும்.
நிலவுக் கோள்மறைப்பின் வருகையைத் விரைவு
படுத்துவதற்கென்று எவரும் ஏன் ஒரு கட்சியைத் தோற்றுவிப்பதில்லை?
19ஆம் நூற்றாண்டில் மெய்யியல் வாணரும் அறநூலாசிரியருமான உருடால்ப் இசுடாம்லெர் இந்த வினாவை மார்க்சியத்துக்கு எதிரான கருத்தாகவே பயன்படத்தினார். பொருள் முதல் வரலாற்று விளக்க நிலையிலிருந்து பொருளாயமும் சட்டமும் என்ற தமது நூலில், பொதுவுடைமைக்கு மாறும் மாற்றம் தவிர்க்க முடியாதது எனக் கூறும் மார்க்சியவாதிகள், அந்த மாற்றத்தைத் விரைவுப் படுத்துவதும் தேவை என்று கருதுவதன் பொருளைப் புரியமாட்டாது திகைத்தார் இசுடாம்லெர். வானவியலின்படி தவிர்க்கொணத வண்ணம் நிகழும் நிலவுக்கோள் மறைப்பை விரைவுபடுத்த ஒரு கட்சியை உருவாக்கத் துணிவதுபோல், இதுவும் அத்தனை வியப்பானதொரு செய்கைதான் என்று அவர் கூறுகிறார்.
அன்று தொட்டு இது பலருக்குப் பிடித்தமான கருத்தாக இருந்து வந்துள்ளது. இன்றும் கூட அறிவியல் பொதுவுடைமைக் கொள்கையை திறனாய்பவர்கள், இந்தக் கொள்கையின் ஏரணவகையில் "பொருந்தாத் தன்மை"யை மெய்ப்பிக்கும் முயற்சிகளில் இந்த கருத்தைப் பயன்படுத்துகின்றனர். வரலாறு பொருள் முதல் முறையில் தீர்மானிக்கப்படுகிறது. (அதாவது வரலாறு நடைமுறை முறைகளுக் கேற்ப வளர்ச்சி பெறுகிறது) என்ற கொள்கை, புரட்சிமீது வைக்கும் நம்பிக்கையோடு பொருந்திப் போகவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பொதுவுடைமை உண்மையிலேயே வெற்றி பெறுமானால், நிலவுக்கோள் மறைப்பு வருவதைப் போல், இரவை அடுத்துப் பகல் வருவதைப்போல், வேனிலுக்குப் பின் கோடை வருவதைப்போல் அதுவும் எந்தவொரு புரட்சியோ போராட்டமோ இல்லாமலே நிறுவப்படும் என்று அந்த திறனிகள் கூறுகின்றனர். .
சமுதாயம் பொதுவுடைமைக்கு மாறிச் செல்லும் இன்றியமையாமையை மறுப்பதற்காகவே இக் கருத்து கூறப்படுகிறது என்பது சொல்லாமலே விளங்கும். மேலும் இதன்பின் அடங்கியுள்ள பொருள் இதுதான்: மார்க்சிய வாதிகளே பொதுவுடைமையின் நடப்பியல் தேவையை நம்பவில்லை; அவர்கள் அதனை வகுப்புப் போராட்டத்தோடும் புரட்சியோடும், அதாவது மாந்த இனச் செயலாற்றலோடும் தொடர்புபடுத்துவதற்கு இதுதான்் காரணம்.இத்தகைய சிந்தனையைப் பின்பற்றிச் சென்றால், மூரையும் காம்பனெல்லாவின் பயணியர் களையும் போன்று மார்க்சியவாணர்களும் கருத்தியல்வாணர்கள்தான் என்றும், அவர்களும் கற்பனை நலத்தில்தான் ஈடுபட்டுள்ளனர் என்றும் முடிவுக்கு வருவது மிகவும் எளிது. இறுதியாக, மார்க்சியத்துக்குத் தொளைநோக்குக் கூடக் கிடையாது என மறுப்பதும், வருங்கால அறிவியலை உருவாக்க முயலும் எந்தவொரு முயற்சியையும் கற்பமனை கருத்தென ஒதுக்கித் தள்ளுவதும் எளிதாகிவிடும். உண்மையில் இந்தக் பொதுவுடைமை பகைமை கோட்பாட்டினர்கள் மிகவும் விரைபட்டு விடுகிறார்கள்!
இருநூறு ஆண்டகட்குமுன் பிரித்தான்ிய மெய்யியல் வாணியும் வேதியல் அறிஞருமான சோசப் பிரீசுட்லி தவிர்க்க முடியாது நிகழும் சில நிகழ்ச்சிகள், அவற்றில் மாந்தனும் பங்குபெறும் முயற்சிநிலை முற்றிலும் விலக்கி விடுவதில்லை என்று எழுதினார். கவனியுங்கள் - இது பொதுவுடைமைக் கருத்தைச் சிறிதும் கருதிப் பார்க்காது எழுதியதாகும்; அக் கருத்தை நிறை வேற்றுவதற்கான உண்மையான முயற்சிநிலை தோன்றுவதற்கு நெடுங் காலத்துக்கு முன்பே எழுதியதாகும். காரண காரியச் சங்கிலித்தொடரில் மனித நடவடிக்கைகள் ஒர் இன்றியமையாத வளையமாக விளங்குகின்றன; இந்தக் காரணத்தால் நிகழ்வுகளின் விளைவுகள் பெரும்பாலும் மாந்தர்களையே சார்ந்துள்ளன.
நிலவின் இடத்தையும் இயக்கத்தையும் பொறுத்த நிலவுக் கோள்மறைவு, இரவும் பகலும் மாறி மாறி வருந் தோற்றம், ஆண்டுதோறும் வரும் பருவங்கள் முதலிய நிகழ்ச்சிப் போக்குகளும் காட்சி உண்மைகளும் இயல்பாகவே மாந்தர்களைச் சார்ந்திருக்க வில்லை; அவற்றை விரைவுப் படுத்தவதற்குக் கட்சிகள் நிறுவுவது. அறியாமையேயாகும்.
எனினும் இயற்கையின் நிகழ்ச்சிப் போக்குகளைப் புரிந்து கொள்ளும்போதே, மக்கள் பெரும்பாலும் அவற்றைக் கட்டுப் படுத்துகிறார்கள் என்பதும், அதன் மூலம் நல்ல பலனை அதிகரிக்கவும் கெட்ட விளைவைக் கூடியவரையில் குறைக்கவும் செய்கிறார்கள் என்பதும் உண்மை.
சமுதாய நிகழ்ச்சிப் போக்குகளோ முற்றிலும் வேறு வகையானவை. மக்கள் இல்லாது எந்தச் சமுதாயமும் கிடையாது. மக்களோ மன உணர்வு படைத்த பிறவிகள்; செயலாற்றும் திறமை கொண்டவர்கள். மாந்த இன மன உணர்வும் மக்களது நடவடிக்கைகளின் தன்மையும் அவர்களது சமுதாய வாழ்க்கையின் விளைவுதான்் என்றாலும், வரலாற்று முறைமைகளை எய்தும் வளர்ச்சிப் போக்கில் மக்களும் ஒர் இன்றியமையாத கூறாகத் திகழ்கின்றனர். உண்மையில் மக்கள் கருத்துகளையும் செயல்களையும் வளர்க்கின்றனர்; ஏனெனில் அவர்களின்றி எந்த வரலாற்று வளர்ச்சிப் போக்கும் இருக்கமுடியாது. வரலாற்று முறைமைகள் ஒரே சமயத்தில் மாந்தர்களின் சமுதாய நடவடிக்கையின் முறைமைகளாகவும் இருக்கின்றன.
ஏதோ மறைபுதிரான விதிவசமான ஆற்றல்களால் அல்லது தனி ஆள்களால் ஆட்டி வைக்கப்பெறும் பொம்மைகளைப்போல் தோற்றுமாறு மாந்தர்களை ஆக்க விரும்பும் இந்த வேட்கைக்கு, ஒருவேளை அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றிய அச்சமே காரணம் என்றும் சொல்லலாம்.
வரலாற்றில் பொது மக்களே சிறப்பான உந்தாற்றலாக விளங்குகின்றனர் என்பதை எண்ணற்ற சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. இந்தக் கருத்து தனி ஆள்களின் பங்கை, பெரிய புகழாளர்களின் பங்கை மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனி ஆளின் பங்கையும் கூட, விலக்கி விடவில்லை. எனினும் தனி ஆள்களின் முயற்சிகள் வெள்ளம்போல் ஒன்று திரண்டால் மட்டுமே, சமுதாய முறையில் முதன்மை வாய்ந்த பலன் விளைகின்றது. மேலும் இவ்வாறு ஒன்று திரளும் சாத்தியப்பாட்டை வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் நடைமுறைகள் தான்் உறுதி செய்கின்றன.
எப்போது வகுப்புகள் தோன்றியதோ அப்போது முதற்கொண்டே வகுப்புப்போராட்டம் பொதுமக்கள் நடவடிக்கையின் மிக முதன்மையான வடிவமாக இருந்து வந்திருக்கிறது. பொதுவுடைமையின் கண்கண்ட தோற்றம் அதற்கு முந்திய முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியிலிருந்து தோன்றியபோதிலும், முதலாளி களுக்கு எதிராக பொது மக்களும் நடத்தும் வகுப்புப் போராட்டத்தை வளர்த்துச் செல்வதன் மூலமே அதனை எய்த முடியும்.
கம்யூனிச சமுதாயத்தின் அமைப்பாளராக விளங்கும் பாட்டாளி வகுப்பின் வரலாற்றுப் பங்கை நிறுவிக் காட்டியது அறிவியல் பொதுவுடைமையின் இரண்டாவது பெருங் கண்டுபிடிப்பாகும். இந்தக் கொள்கையின் படி, உழைப்பாளி வகுப்பின் விடுதலையை உழைப்பாளி வகுப்பேதான்் செயல்படுத்த முடியும்.
பாட்டாளி வகுப்பு தன்னைத் தான்ே விடுவித்துக் கொள்ளும் போதே சமுதாயம் முழுவதையும் விடுதலை பெறச் செய்கிறது. ஏனெனில் அந்த விடுதலை சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவதாகும்; எனவே விளைவாக்கக் கருவிகளின் தனியார் உடைமையிலிருந்தும் விடுபடுவதாகும். இது மாந்தனை அடிமைப்படுத்தும் சமுதாய நிலைமைகளை ஒழித்து விடுகிறது. எனவேதான்் புதிய சமுதாய அமைப்பின் வெற்றியைக் கொண்டு வருவதற்கு, முதலாளிகளாலும் நிலக் கிழார்களாலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, சீரழியப் பெற்ற சகல மக்களும்-வேளார்களும், கைவினைத் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும் பாட்டாளி இனத்தோடு நிலையான உறுதியான கூட்டுறவோடு ஒன்றுபட வேண்டும். -
இந்தக் கூட்டுறவின் வலத்தின்மீதும், இது எந்த
அளவுக்கு பொது மக்களைத் தழுவி நிற்கிறதோ அந்த அளவின் மீதும்தான், மிகவும் முற்போக்கான சமுதாயத்தின் வெற்றி சார்ந்து நிற்கிறது.
முதலாளியத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களைக் கிளர்ந்தெழச்செய்வதற்கும், உழைக்கும்
வ. மா 5 வகுப்பை, அனைத்து ஒடுக்கப்பட்ட பாடு படும் மக்களை ஒன்று படுத்துவதற்கும், அவர்களது நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கும், அவர்களை மேலும் காரிய வீரர்களாக்குவதற்கும், பாட்டாளி வகுப்பு தனது அரசியல் கட்சியை - முன்னேறிய சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, உணர்வு மிக்க உழைப்பாளி வகுப்புப் பகுதியை நிறுவுகின்றது
பொதுவுடைமை இன்றுள்ள நிலையும்
எதிர்கால நிலையும்
பொதுவுடைமை பற்றிய மார்க்சியக் கொள்கையானது சமுதாயத்தையும் அதன் வளர்ச்சியை யையும் பற்றிய அறிவியல் பொதுவுடைமைக் முதன்மையாளர்களால் வரைந்து காட்டப்பெற்ற வருங்கால சமுதாயச் ஒவியமாகும் பொதுவுடைமை மாற்றத்துக்கான தேவைக் கூறுகளைத் தோற்றுவிக்கும் நடைமுறை வகையிலான தற்கால வளர்ச்சிப்போக்குகளின் ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்ததாகும்
ஆனால் அது கற்பனை வாழ்வியல் ஆயிற்றே! - என்று அறிவியல் பொதுவுடைமையின் இன்றைய விரோதிகள் கூறுகின்றனர் எதிர்காலம் அறிவியலுக்குரிய செய்தியாக முடியாது என்பது அவர்கள் கருத்து
ஏன் முடியாது என்று நாம் வினவுவோமா? வானியலில் யாரேனும் எந்தக் கற்பனைக்கோட்பாட்டையேனும் காண்கிறார்களா? வானியல் வானமண்டலத்திலுள்ள கோள்களும் விண்மீன்களும் பல்லாண்டுகளுக்கு, ஏன் நூற்றாண்டுகளுக்கு அப்பாலும் எந்தெந்த இடத்தில் இருக்கும் என்று முன் கூட்டியே கூறும்போது, அதுவும்கூட எதிர்காலத்தை ஆராய்கிறது என்பது தானே உண்மை. இவ்வாறு கூறக்கூடிய இயற் பாடும், நடைமுறையில் இறும்புதுடன் மெய்மையாகியுள்ள அதன் வரலாற்றுத்தன்மையும், விண்மீன்களும் கோள்களும் இயங்கும் இயக்கத்தின் நடைமுறையிலான முறைகளைப்பற்றிய அறிவிலிருந்துதான் தோன்றுகின்றன
அறிவியல் பொதுவுடைமைக் கொள்கையும் சமுதாய வளர்ச்சி முறைகளின் அடப்படையில்தான்் பொதுவுடைமை எதிர்காலத்தை விளக்குகின்றது இயல்பாகவே இந்தக் கொள்கை அந்த எதிர்காலத்தின் அனைத்து துணுக்கங்களையும் முன் கூட்டியே காண முடியாது என்பது உண்மைதான்் அது அந்த எதிர்காலத்தின் பொதுவான சித்திரத்தையும் பொதுத் தன்மைகளையும்தான்் சித்திரிக்கின்றது. ஆனால் அந்தச் சித்திரம் வியக்கத் தக்க வகையில் மிகவும் திட்பமாகக் காட்சியளிக்கின்றது இதற்குப் பதினான்கு நாடுகளின் சமன்மை அமைப்பு பட்டறிவை ஆய்ந்தாலே போதும்
தேவைக்கேற்ப பகிர்வு என்பது மக்களது மன உணர்வில், மனாப்பொங்கில் ஒரு மாறுதலை ஏற்படுத்த முனைகிறது பொதுவுடைமையின் கீழ் மக்களது உழைப்பின் அளவும் நிலையும் எவ்வாறிருந்தபோதிலும், அனைத்து மக்களும் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் முடிக்கத் தக்கதனைப் பெறுகின்றனர் அதில் உழைப்பு மேன்மை மிக்க அடிப்படையான தேவையாக மாறி விடுகிறது; சமுதாயம் முழுவதன் நலனுக்காகவும் தன்னால் முடிந்த மட்டிலும் நன்கு உழைக்கும் மனிதனின் இயல்பான வேட்கையை அது புலப்படுத்துகிறது
சமன்மையின் கீழும் கூட, உழைப்பின் நல்லொழுக்க் உள்ளோட்டமும், சமுதாயம் முழுவதற்கும் கிட்டிய வெற்றிகள் ஒவ்வொரு தனிஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றன என்ற திடமான நம்பிக்கையும் ஒரு தன்மையான பங்கினை வகிக்கின்றன
இந்த அடிப்படையின் மீதுதான் உழைப்பைப் பற்றிய-பொதுவுடைமைக் கண்ணோட்டம் உருவாகிறது; அத்துடன் அவரவர் திறமைக்கேற்ப உழைப்பு, அவரவர் தேவைக்கேற்ற ஊதியம் என்ற சிறப்பான பொதுவுடைமைக்கோட்பாட்டின் வெற்றிக்கான முக்கிய தேவைக் கூறுகளம் தோன்றி விடுகின்றன.
இவ்வாறாக, பொதுவுடைமை தனது உரிய அடிப்படையில், சமன்மை அடிப்படையில் தோன்றிவிடுகிறது
அறிவியல் பொதுவுடைமைக் கொள்கை பொதுவுடைமை சமுதாய வளர்ச்சியின் இரு கட்டங்களை சமன்மை அடுத்து பொதுவுடைமை என்பனவற்றை வரையறுத்துக் கூறியது; இந்தக கட்டங்களின் தவிர்க்கொணாத தன்மையை நுகர்வறிவு மெய்பித்துள்ளது.
சமன்மையும் பொதுவுடைமையும் ஒரே அமைப்பின் இரு கட்டங்களாக இருப்பதால், இரண்டும் சில பொதுத் தன்மைகளைப் பெற்றுள்ளன. அவை: விளைவாக்க கருவிகளின் சமுதாய உடைமை; சுரண்டும் வகுப்புகளைப் போக்குதல் (எனவே அனைத்து வகையான வகுப்பு, வண்ண இன, தேசிய இன ஒடுக்குமுறையையும் போக்குதல்; ஏனெனில் சுரண்டும் வகுப்புகள் தான்் ஏதாவதொரு வடிவில் ஒடுக்கு முறைக்குக் காரணமாகின்றன); ஆக்க வளர்ச்சியில் தோழமையான கூட்டுறவு, நட்பு முறையான எதிரிடை ஒருவர்க்கொருவர் ஒத்துழைப்பு முதலிய உறவுகள் நிலவுதல்; ஆக்க வளர்ச்சியில் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சரிசமமான அக்கறை, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் என்றென்றும் வளர்ந்தோங்கும் பொருளியல், பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே பெருக்கத்தைப் பயன்படுத்துவது இந்த நிலைமை தொழில் நுட்ப முன்னேற்ற அடிப்படையில் படைப்பை பெருக்கச் செய்து வளர்ப்பதன் விளைவாய் எய்தப்படுகின்றது; மக்கள் தமக்குத் தாமே புதிய சமூக உறவுகளை உணர்வு முறையில் வளர்த்துக் கொள்வது - இது சமுதாய வளர்ச்சியின் நியதி முறைமைகளை அவர்கள் கண்டுணர்வதிலிருந்து தோன்றுகிறது; பண்பாடு, மார்க்சிய - இலெனினிய கோட்பாட்டின் தலைமை ஆகியவையாகும்.
தனக்கும் சமன்மைக்கும் பொதுவாகவுள்ள தன்மைகளைக் பொதுவுடைமை கணிசமான அளவுக்கு உருமாற்றுகிறது அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றம், என்றென்றும் வளர்ந்தோங்கும் உழைப்பின் விளைவாக்க ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் பொதுவுடைமையின் கீழ் மிகுதியான பொருளியல்ச் செல்வ வளம் உருவாக்கப்படும். இதன் விளைவாக, சமுதாய உறவுகளை மேலும் பெருக்கச் செய்வதற்கான நிலைமகள் வளர்ச்சி பெறும்.
பொதுவுடைமை விளைவாக்க கருவிகளின் உடைமையின் ஒரே வடிவத்தை, அதாவது அனைத்து மக்களுக்கும் உடைமையான ஒரே வடிவத்தைப் பெற்றிருக்கும் சமுதாயமாகும். இந்த வடிவம் உழவர்கள், கைவினைத் தொழிலாளர்கள் முதலிய பெரும் மக்கட் பகுதிகளைக் கொண்ட நாடுகளில் சமன்மையின் கீழ் நிலவிவரும் குழு அல்லது கூட்டுறவு உடைமையையும், போக்கி அதனிடத்தில் இடம் பெறுவதாகும்
சமன்மை ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமுதாய குழுக்களோ, வகுப்புகளோ இல்லாத சமுதாயமும் ஆகும். கூட்டுடைமை பொது உடைமையின் அடிப்படையில் நகர்ப் புறத்துக்கும் சிற்றுர்ப் புறத்துக்கும் இடையேயுள்ள முதல் வேற்றுமைகளைப் போக்கிவிடும் சமுதாயமாகும்; இதன் விளைவாக, அங்கு வேளாண்மை எந்திரத் தொழில் உழைப்பின் வடிவத்தைப் பெற்று விடும். வரையில் சமுதாயத்தின் பண்பாட்டு வளர்ச்சியும் கிகுந்த்தன்மை வாய்ந்ததாகும்
பொதுவுடைமை விளைவாக்கத்தை ஒழுங்குபடுத்தும் கட்டுப்படுத்தும் செயல்களாக உடலுழைப்பை மாற்றி விடும் சமுதாயமாகும் அதில் தொழில் நுட்ப முன்னேற்றம், கல்வி பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக, உடல் உழைப்பிலும் மூளை உழைப்பிலும் ஈடுபட்டிருக்கும் மககளுக்கிடையேயுள்ள அடிப்படையான வேற்றுமைகள் மறைந்துவிடும்
பொதுவுடைமை சமுதாயத்தில் உழைப்பு ஒரு சுமையாக இருக்காது, மாறாக, அது மேன்மையான, உயிர்ப்பு மிக்க அவசியாக மாறி விடும்
பொதுவுடைமையில் ஆக்கப் பொருள் அங்காடிச் சரக்குகளாகவும் இருக்காது; எனவே வாணிப உறவுகளும் மறைந்து போய் விடும் ஒரு பொருள் எந்த அளவுககு மக்களின் தேவைகளைப் நிறைவு செய்கிறதோ அந்த அளவே அதன் மதிப்பை அளக்கும் ஒரே அளவுகோலாக விளங்கும் "அவர்தம் திறமைக்கேற்ற உழைப்பு, தேவைக் கேற்ற ஊதியம்" என்ற கோட்பாட்டைக் பொதுவுடைமை நிறைவேற்றும்
பொதுவுடைமை உரிமையும் சமன்மையும் நிலவும் சமுதாயமாகும், அதில் மாந்தன் முழுமையாகவும் இசைவாகவும் வளர்ச்சி பெறவும், தனது தொழிலைச் உரிமையாக மாற்றிக் கொள்ளவும், விளைவாக்கத்தில் ஈடுபடவும் இயலும்
பொதுவுடைமை உலகம் முழுவதிலும் வெற்றி பெறும் போது அரசு வாடி வதங்கி மறைந்து விடும்: அதனிடத்தில் மக்களது பொதுவுடைமை தன்னாட்சி ஏற்படும்; அதாவது "மக்களின் மீது அரசாட்சி" என்ற நிலையைப் "பொருள்களின் மீது அரசாட்சி" என்ற நிலை முற்றிலும் போக்கி விடும்,
பொதுவுடைமை உணர்வும் பொது மக்கள் அபிப்பிராயமுமே மக்களின் நடத்தையை முறைப்படுத்தும் அடிப்படை கூறுகளாகத் திகழும்
பொதுவுடைமையின் கீழ் மாந்தனது என்றும் வளர்ந்தோங்கும் தேவைகளைப் நிறைவு செய்வதே ஆக்கத்தின் நோக்கமாக இருக்கும் காரணத்தால், மேலும் இந்தத் தேவைகள் நிறைவு செய்யப்படும்போது, இவை மேன்மேலும் பல தேவைகளைத் தோற்றுவிக்கும் என்ற காரணத்தால், பொதுவுடைமை விளைவாற்றலின் எல்லையற்ற வளர்ச்சிக்கும், பொதுவுடைமை சமுதாயம் முழுமையின் வளர்ச்சிக்கும் தேவையான நிலைமைகளை உருவாக்கும் மேலும், விளைவாக்கம் வளர வளர, உழைப்பின் ஆக்க ஆற்றல் பெருகப் பெருக, பொருளியல்ச் செல்வத்தை விளைவு செய்வதற்குத் தேவைப்படும் கால அளவும் குறையும்; அதன் மூலம் மனிதனின் அனைத்து படைப்பாற்றல்களும், உண்மையிலேயே உரிமை வளர்ச்சி பெறுவதற்கான நிலைமைகள் உண்டாகும் இதனால், பொதுவுடைமையின் கீழ் சமுதாயச் செல்வம் அதற்குத் தேவையான வேலை நேரத்தின் அளவைக் கொண்டு மதிப்பிடப் பெறமாட்டாது, மாறாக, ஓய்வுக் காலத்தின் நீளத்தைக் கொண்டு - தாமசு மூர் சிந்தித்ததுபோல், மனசு வளர்ச்சிக்கான நேரத்தைக் கொண்டு-மதிப்பிடப் பெறும்
பொதுவுடைமை மக்களுக்கான சமுதாயமாகும்; மேலோர்களுக்கான சமுதாயமன்று,எல்லொருக்குமான சமுதாயமாகும் ஒவ்வொரு தனி ஆளின் உரிமை வளர்ச்சியும் அனைத்து மக்களின் வளர்ச்சிக்கான தேவைக் கூறாகும்
சுருங்கச் சொன்னால் பொதுவுடைமை வகுப்புகளற்ற சமுதாயமாக இருக்கும், அனைவருக்கும் மிகு வளம் வழங்கும் சமுதாயமாக, புதிய ஒழுக்க நெறியாலும் கூட்டுறவு நிலையாலும் ஆளப்படும் சமுதாயமாக, ஒவ்வொருவரின் எல்லையற்ற முன்முயற்சியை உறுதிப்படுத்தும் சமுதாயமாக இருக்கும் இதுதான் பொதுவுடைமை பற்றிய பொதுவான ணணையாகும்; இதற்கு மேலும் அதன் நுணுக்க வரங்களை முன்கூட்டியே சொல்லப் புகுவது கற்பனை பாத்திரமாகவே முடியும்