உள்ளடக்கத்துக்குச் செல்

வருங்கால மானிட சமுதாயம்/பொதுவுடைமையும் வரலாறும்

விக்கிமூலம் இலிருந்து



(நிகழ்காலம் பற்றி)

பொதுவுடைமையும் வரலாறும்


வ்வொரு அறிவியல் கொள்கையும் அத்தகைய கொள்கைக்குச் சமுதாயத்தில் நெருக்கடியான தேவை இருக்கும் காலத்திலேயே தோன்றுகிறது சமுதாயத்தினுள் நுழைகின்றது என்பதை வரலாறு மெய்பித்துள்ளது இதில் அறிவியல் பொதுவுடைமைக் கொள்கையும் விதி விலக்கில்லை அது தொழிலாளி இயக்கம் எழுப்பிய வினாகட்கு விடையாக உதித்தது

19ஆம் நூற்றாண்டில் முதலாளியம் மிகவும் வலிமை மிக்கதாகத்தான் இருந்து வந்தது அது தனது தொடக்க கால கட்டத்தை - மாந்தனை வியந்து போற்றும் உந்தாற்றலைக் கலைஞர்களுக்கும் பாவலர்களுக்கும் ஊட்டி, மாந்தனை ஏற்றிப் போற்றிப் பெருமைப் படுத்துமாறு அவர்களைத் துண்டிவிட்ட காலத்தை வெகு காலத்துக்கு முன்பே கடந்துவிட்டது என்பது உண்மைதான் அதன் கோட்பாட்டுவாணர்கள் உரிமை, சமன்மை, உடன்பிறப்பாண்மை ஆகியவற்றை நேர்மையோடு விளக்கி வந்த காலத்திய முதலாளியமாக அது இருக்கவில்லை; அது முதிர முதிர, அதன் முன்னாள் கொள்கைளெல்லாம் கடந்த கால இருளில் மங்கி மறைந்து போயின செல்வம் ஒன்று மட்டுமே போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியதாக இருந்தது

19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தொழிலாளி வகுப்பு இயக்கம் தனது தன்னிச்சையான முதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட காலத்தில், முதலாளியத்துக்கு முதன் முதலாக இடுக்கன் படலங்கள் சூழத் தொடங்கின. இந்தப் படலங்கள் பலமுறை கறுத்துத் திரண்டு கணத்து வந்த போதிலும்கூட, முதலாளிகளும் அவர்களின் கோட்பாட்டாளர்களும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவை எதையும் காணவில்லை; அவர்களுக்கு எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாகவே தோன்றியது

இதன் பின் 20ஆம் நூற்றாண்டு வந்தது அது பொருளியல் நெருக்கடிகளுக்கு முடிவு கட்டும் ஒரு புது ஊழியாக இருந்தது விளைவாக்கம் மேலோங்கி வளர்ந்தது; ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்ப வெற்றிகள் தோன்றி வந்தன; வளர்ச்சி பெற்ற முதலாளிய நாடுகளின் வாழ்க்கைத் தரம் ஒப்பு நோக்கில் உயர்ந்த தரத்தை எய்தியது ஆனால் இவையனைத்தும் முதலாளி வகுப்பு விரும்பித் தவம் கிடந்த பாதுகாப்பைக் கொண்டு வரவில்லை

கூர்மையான வகுப்புப் போராட்டம், குடியேற்ற வல்லாட்சி முறையின் வீழ்ச்சி, தன்னிச்சையான அரசியல் பொருளியல் வளர்ச்சிக்காகப் பற்பல மக்களும் நடத்திய போராட்டம் - ஆகிய அம்சங்கள் அனைத்தும் தனிகொடுங்கோன்மையின் அடிப்படையையே தகர்த்துக் கொண்டிருக்கின்றன

தனிக் கொடுங்கோன்மையும் எதிர்த்துத் தாக்குகிறது தடியேற்றங்களும் அரைக் குடியேற்றங்களும் அரசியல் விடுதலைக்குச் செல்லும் வழியை அடைத்துத் தடுக்க அது முழு மூச்சோடு போராடுகிறது மேலும் தேய விடுதலைப் புரட்சிப் பேரலைகளால் அது தூக்கி யெறியப்பட்டுத் தோல்வியுறும்போது, புதிய குடியேற்றத்தின் பல்வேறு வடிவங்களைக் கண்டறிந்து அவற்றின் மூலம் புதிதாகத் தோன்றிய அரசுகளில் தனது பொருளியல் வலிமையை நிலைப்படுத்திக் கொள்ள முனைகிறது தனிக் கொடுங்கோன்மையும் தொழிலாளி வகுப்பு இயக்கத்தைப் பிளவுபடுத்தச் சூழ்ச்சி செய்கிறது, ஒரு "வலுவான இட"த்திலிருந்து கொண்டு, தனது ஆணையைக் கொண்டு செலுத்துவதற்காக, படைக் கூட்டுக்களை விரைவாக ஏற்படுத்துகிறது நேரடியான வலிந்து கவர்வதிலும் இறங்குகிறது

கம்யூனிச வழியில்

புதிய சமுதாயத்துக்குச் செல்லும் முதல் நடவடிக்கைகள் எளிதான்வையாக இருக்கவில்லை வருங்காலத்துக்குச் செல்லும் வழியை வகுக்க நேர்ந்த நாடான உருசியா மிகமிகக் குறைந்த பொருளியல் ஆற்றல் வளத்தையே பெற்றிருந்தது மேலும், முதல் முதல் உலகப் போர், சோவியத்துக் குடியரசின் உள்நாட்டு எதிரிகளுக்கும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராக நடத்திய உள்நாட்டுப் போர் ஆகியவை நடந்த ஆண்டுகள் அந் நாட்டைப் பொருளியல் வீழ்ச்சி நிலைக்கே கொண்டு சென்று விட்டன. இரும்பை உருவாக்கும் தொழில் போன்ற சில தொழில்களை அந் நாடு 18ஆம் நூற்றாண்டின் நிலையிலிருந்தே புத்துயிர் வேண்டியிருந்தது மக்கட் தொகுதியிலும் பெரும் பாலோர் கல்வி அறிவற்றோராக அல்லது அரை குறைக் கல்வி பெற்றோராக இருந்தனர் எஞ்சியிருந்த முதலாளிகளும் அனைத்து சமுதாயப் புத்துயிர்களுக்கும் எதிராகப் போராடினர்

பகைமை பாராட்டும் முதலாளிய உலகின் முற்றுகைக்கு ஆளாகியிருந்த சோவியத்து உருசியா அயல் நாட்டுப் பொருளியல் உதவியையும் எதிர்பார்க்க முடியவில்லை மேலும் அது வலிந்து கவர்தலுக்குளாகக் கூடிய அச்சுறுத்தலையும் நிலையாக எதிர்நோக்க நேர்ந்தது

இத்தகைய சூழ்நிலையில் அந்நாடு தனது பொருளியலுக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் மாறாக, தனது மிகக் குறைவான போரை முன்னிட்டு பிற்காலச் செல்வ அடிப்படைகளில் ஒர் அளவான பகுதியைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கும் நெருக்கடிக்கும் ஆளாயிற்று.

இறுதியாக, முற்றிலும் புதியதான் ஒரு சமுதாயத்தைக் கட்டியமைப்பதில் அதற்கு முன் பட்டறிவும் இருக்கவில்லை

எனினும் அதன்முன் உந்தாற்றல் ஊட்டும் ஒரு குறிக்கோள் இருந்தது; இந்தக் குறிக்கோளை எய்தும் வழியினைத் திறந்துவிடும் முறைகளைப் பற்றிய அறிவும் அதனிடம் இருந்தது; மேலும் இந்தக் குறிக்கோளை எட்டிப் பிடிப்பதற்கு அதனிடம் ஈடிணையற்ற ஆற்றலும் இருந்தது தன்னிடம் இல்லாதனவற்றை யெல்லாம் அந்த வழியில் செல்லும் போதே அது சம்பாதித்துக் கொண்டது; கற்றுத் தேற வேண்டியவற்றை யெல்லாம் வாழ்க்கையிலிருந்தே கற்றுக் கொண்டது.

முன்னாள் உருசிய பேரரசின் இடிபாடுகளின் மீது நவீன தொழில் நிலையங்களும் புதிய தொழில் துட்பங்களும் உதித்தெழுந்தன.

வாழ்க்கை நிலையில் செங்குத்தான் வளர்ச்சி ஏற்பட்டது; இன்று அதன் நிலை புரட்சிக்கு முந்திய காலத்தில் இருந்ததைக் காட்டிலும் ஆறுமடங்கு அதிகமாகும்.

சோவியத்து ஒன்றியம் தனது நாட்டில் நூற்றுக்கு இாறு கல்வியறிவு பெற்றவர்கள் உள்ளனர் எனப்பெருமைப்பட்டுக் கொள்ள முடியும் கல்வித் தரத்தில் அது அனைத்து முதலாளிய நாடுகளையும் விஞ்சியுள்ளது.

சோவியத்து ஒன்றியத்திலுள்ள எண்ணற்ற மக்களும் தேசிய இனங்களும் தமது பொருளியல் அரசியல் பண்பாடு வளர்ச்சியில் மிகப் பெரும் முன்னேற்றத்தை எய்தியுள்ளனர். அவர்களெல்லாம் ஓர் உண்மையான உடன்பிறப்பாண்மை ஒன்றியமாக மாறியுள்ளனர்.

ஆயினும் இந்த வளர்ச்சிகள் அமைத்தின் முக்கிய விளைவு சமுதாய உறவுகளின் மாற்றம்தான்; சமன்மை அமைப்புத்தான். விளைவாக்க கருவிகளின் சமுதாய உடைமை எல்லா நகரங்களிலும் சிற்றுரர்களிலும் நிலவியது; மாந்தனை மனிதன் சுரண்டும் சுரண்டல் முற்றிலும் ஒழித்துக் கட்டப்பட்டது:"அவரவர் திறமைக் கேற்ற உழைப்பு, அவரவர் உழைப்புக்கேற்ற ஊதியம்" என்ற கோட்பாடு உறுதியோடு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

இவையனைத்தும் உள்நாட்டுப் போரையடுத்த 10-15 ஆண்டுகளில் செயல் பெற்றன.

இவற்றை செயல்படுத்த மிகப் பெரும் ஈகங்களும் ஏராளமான தொல்லைகளும் ஏற்பட்டன என்பது உண்மை. எனினும் அரும் பெரும் பலன்களும் கிட்டின; புதிய வாழ்க்கை பிறந்தது; புதிய மக்கள் தோன்றினர்.

1941-ஆம் ஆண்டுத் தொடக்கத்திலேயே பொதுவுடைமையைக் கட்டியமைப்பதற்கான திட்டத்தை உருவாக்க முனையும் நிலையில் சோவியத்து மக்கள் இருந்தனர். ஆனால் போர் மூண்டது. ஆதனால் சோவியத்து மக்கள் மிகவும் உடனடியான பணியை - கடுங்கோண்மை (பாசிஸ்டு) ஆக்கிரமிப்பை வலிந்துகவர்தலை முறியடிக்கும் பணியை நிறைவேற்றி முடிக்க வேண்டியிருந்தது.

போரில் பெற்ற வெற்றியின் பயனாய் ஒர் உலக சோஷலிச அமைப்பு உருவாகியுள்ளது. பல மக்கள் மக்களாட்சி நாடுகள் சமுதாய உறவுகளில் தீவிரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன; சமன்மையைக் கட்டியமைப்பதைப் நிறைவு செய்து வருகின்றன. அவை நடந்து சென்ற பதை சோவியத்து மக்கள் மேற் கொண்ட பாதையின் எந்திரிகமான மறுபதிப்பு அன்று. புதிய சமுதாயத்தின் பொதுவான முன்னேற்றத்தில், ஒவ்வொரு நாட்டு மக்களும் தனது வரலாறு, தேசியத் தன்மைகளையும் பிற தன்மைகளையும் தக்கபடி மதித்துணர்ந்து தத்தம் புதிய பாதையை வகுத்துச் செல்கின்றனர்; எனினும் இந்த வளர்ச்சியின் பொதுவான திசைவழியும் அதன் பொதுவான முறைகளும் அனைத்து சமன்மை நாடுகளுக்கும் இயல்பாகவே ஒரே சீராக உள்ளன. மேலும் சோவியத்து ஒன்றியப் பட்டறிவும் அவர்களுக்குப் பயன்பட்டது. சமன்மை நாடுகள் பெரும்பாலும் தமது முயற்சிகளை ஒன்றிணைக்கின்றன; புதிய சமுதாயத்தைக் கட்டுவதில் ஒன்றுக் கொன்று நட்புறவோடு உதவிக்கொள்கின்றன. அவற்றின் கூட்டு முயற்சிகளின் பயன்களே அவற்றின் சிறப்பை எடுத்துக் கூறும்.

தமது பொருளியலை வெகு விரைவில் வளர்த்துக் கொண்டு விட்ட சமன்மை நாடுகள் , இன்று உலகின் மொத்தத் தொழில் துறை ஆக்க அளவில் ஏறத்தாழ ஐந்தில் மூன்று பங்கை நிறைவு செய்கின்றன. இந் நாடுகளில் பலவும் கடந்த காலத்தில் தொழில் வளர்ச்சி மிகுந்த முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின் தங்கிக் கிடந்தன.

சமன்மை பொதுவுடைமை சமுதாயத்தின் முழுமையான சித்திரத்தைத் தந்துவிட முடியாது. ஏனெனில் பொதுவுடைமை சமுதாயம் ஈடிணையில்லாத உயர்ந்த வளர்ச்சி நிலையைத் தனது பண்பாகப் பெற்றதாகும். அது பலவகைகளில் சமன்மையைக் காட்டிலும் தனிச் சிறப்புகள் மிக்க சமுதாயமாகும்; உரிய காலத்தில் அவை உண்மையில் மிகப்பெரும் சிறப்புக்களாகவும் திகழும்.

பொதுவுடைமை அமைப்பு ஒரு மும்முனைப் சிக்கலுக்கான தீர்வைத் திட்டமிடுகின்றது. அவையாவன: பொதுவுடைமையின் பொருளாயத, தொழில் நுட்ப அடிப்புடையை உருவாக்குதல் பொதுவுடைமை சமுதாய உறவுகளை உருவாக்குதல்; புதிய மாந்த அறிவு பெறச் செய்தல் ஆகியனவையாம். இவையனைத்தும் ஒரே காலத்தில் தீர்க்கப்படவேண்டும். சான்றாக, பொதுவுடைமையின் பொருளியல், தொழில் நுட்ப அடிப்படையின் தன்மை மிகப்பெரும் பொருளியல் செல்வத்தை அடையும் முடிக்கத்தக்கது மட்டுமல்லாமல் வேலை நேரத்தைக் குறைப்பதையும் தீர்மானிக்கின்றது. இது மக்களின் முழுமுதல் வளர்ச்சிக் கான முதற்பெறும் முன்தேவையாகும். ஏனெனில் வேலைக்குப் பின்னர் ஒருவருக்குக் கிட்டும் அமையத் தோடு இது நெருங்கிப் பிணைக்கப்பட்டதாகும். எனவே பொதுவுடைமையின் விளைவாக்க ஆற்றல்கள் வெறுமனே ஒர் உயர் நிலையை எட்டிப்பிடித்து வளர்ந்துள்ள பொதுவுடைமையின் விளைவாக்க ஆற்றல்கள் அல்ல; அவற்றின் புதிய குணத் தன்மைகள் உழைப்பின் ஆக்க ஆற்றலின் மிகப்பெரிய பேரெழுச்சியை உறுதி செய்ய வேண்டும்; அத்துடன் முதன்முதலில் அனைத்து சுமையான, திறமைக் குறைவான உடலுழைப்பையும் முற்றிலும் போக்குவது, வேளாண்மை உழைப்புக்கும் எந்திரத் தொழில் உழைப்புக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் கூடிய குறைந்த அளவுக்குக் குறுகச் செய்வது ஆகியவற்றோடு, தனது தன்மையிலும் ஒரு அளவான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

மற்றொரு பக்கத்தில், பொதுவுடைமையின் பொருளியல், தொழில் நுட்ப அடிப்படையானது உழைப்பாளியின் தொழில் முறைப் பின்னணி, பண்பாட்டுப் பின்னணி ஆகிய இரண்டையும் பொறுத்தவரை அவரிடமிருந்து ஒப்புயர்வற்ற உயர்தரமான புதிய பண்புகளையும் கோருகின்றது.

சோவியத்து பொதுவுடைமைக் கட்சியின் 23வது பேராயத்தால் ஏற்கப்பெற்ற 1966-70 ஆண்டுக் காலத்தில் சோவியத்து ஒன்றியத்தின் பொருளியல் வளர்ச்சிக்கான ஐந்தாண்டுத் திட்டத்தின் தாக்கீதுகள் நகர்ப்புறத்துக்கும் சிற்றுார் புறத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் களையும் நோக்கத்தோடு பற்பல நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது; அதாவது வேளாண்த்துறையில் விரைவான தொழில் நுட்ப முன்னேற்றத்தை எய்துவது; சிற்றுார்புற மக்களின் கலாசாரத் தரத்தை உயர்த்துவது; சிற்றுார்புற மக்களுக்கும் நகரப்புற மக்களுக்கும் இடையே வாழ்க்கைத் நிலைகளில் நிலவும் இடைவெளியைக் குறைப்பது முதலியனவாம். மக்களின் பொதுக் கல்வி நிலையும் தொழில் நுட்பக் கல்வித் தரமும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும்: உடலுழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையேயுள்ள சிறப்பான வேறுபாடுகள் போக்கப்படும்.தலைமையாக, இளம் மக்களுக்குப் பொது உயர் நிலைக் கல்வி புகுத்தப்படும்; மேற் கல்வி அல்லது தனித் தேர்ச்சி உயர் நிலைக் கல்வி பெற்ற மக்களின் தொகை முந்திய ஐந்தாண்டுக் காலத்தோடு ஒப்பிடும்போது, 65 விழுக்காடு அதிகரிக்கப்படும். புத்தகங்கள், தாளிகைகள், ஏடுகள் ஆகியவற்றின் வெளியீடுகளும் புதிய நாடக அரங்குகள்,மன்றங்கள், திரைப்பட அரங்குகள் ஆகியவற்றின் நிர்மாணம் முதலியனவும் கணிசமான அளவிக்கு விஸ்தரிக்கப்படும். நகர்ப்புற, கிராமப்புற மக்களின் கலாசாரத் தரங்களில் நிலவும் இடை வெளியைப் போக்குவதில், தொலைக்காட்சி பணி நிலைகளில் ஏற்படும் பெருக்கமும் ஒரு முதன்மை பாங்கினை வகிக்கும். எனினும் பொதுவுடைமையின் பொருளியல், தொழில் முனைப் சிக்கலின் அடிப்படையாகவும் விளங்குகின்றது.

விளைவாக்கத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பரவலாகப் பயன்படுத்துவது,மேலும் மின்மயமாக்குவது, அனைத்தையும் எல்லாவற்றையும் எந்திரமய மாக்குவது, வேதியல் தொழில்நுட்பலியலை மேன் மேலும் அதிகமாகப் பயன்படுத்துவது, விரிவான முறையில் தானியங்கி கருவிகளை பெருக்கச் செய்வது, தொழில்நுட்ப அழகியலையும் படைப்பாக்க அழகியலையும் உயர்த்துவது ஆகிய இவை அனைத்தும் ஆக்க அளவைப் பெரிதும் அதிகரிக்கும்; ஆக்கத்தின் குணத்திலும் ஒரளவு மாறுதல்களைத் தோற்றுவிக்கும். உழைப்பின் உற்பத்தியாற்றல் வளர்ச்சி வேலை நேரத்தைக் குறைக்கும்: ஒவ்வொரு மனிதரின் எல்லாவற்றின், இசைவான வளர்ச்சிக்குரிய கருவி நிலைமைகளை உருவாக்கும்; அவரவர் தேவைக்கேற்ப வினியோகம் என்பதைச் செயற்படுத்தும் நாளைச் சமீபித்து வரச் செய்யும்.

மான்செசுட்டர் என்று எழுத்துக் கூட்டி
லிவர்பூல் என்று ஒலிக்கும் அழகு.

கடந்த பத்தாண்டுகளில் முதலாளிய கோட்பாட்டில் ஒரு நிலைமாற்ற மாறுதல் ஏற்பட்டுள்ளது. வரலாற்று வளர்ச்சியைப் பொறுத்தவரை அதன் முக்காலச் கோட்பாடுவாணர்கள் கூறிவந்த பற்பல கருத்துக்களை அது உதறித் தள்ளிவிட்டது.

18-ஆம் நூற்றாண்டில் ஒரு சமுதாய அமைப்பை நீக்கிவிட்டு மற்றொரு சமுதாய அமைப்பு இடம் பெறுவதை, அதாவது நிலக்கிழார் அமைப்பைப் போக்கி விட்டு முதலாளியம் இடம் பெறுவதைக் குறிக்கும் சமுதாய முன்னேற்றக் கருத்தை தர்காட்டும் கொன்டார்செட்டும். புகுத்தினர். எனினும் 19-ஆம் நூற்றாண்டிலேயே, முதலாளியக் கோட்பாடுவாணர்கள் முன்னேற்றத்தைத் தனியார்-உடைமை உறவுகளின் முழுமையாகக் கருதிவிட்டனர். 19-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், "முன்னேற்றம் என்பது ஒழுங்கின் வளர்ச்சி" என்று அகசுடி காம்ட்டி அறிவித்தார். இங்கு "ஒழுங்கு" என்பது விளைவாக்க கருவிகளின் தனியார் உடைமையையும் அதன் ஏனைய எல்லா உள்ளார்ந்த தன்மைகளையுமே குறித்து நின்றது.

இப்போதோ, இந்த இருபதாம் நூற்றாண்டிலோ அவர்கள் "முன்னேற்றம்" என்ற சொல்லையே ஒரு மாயச் சொல் எனக்கூறுகின்றனர். (1963-ல் மெக்சிகோவில் நடந்த மெய்மைவாணர்களின் 13-வது பேராயத்தில் அமெரிக்கச் சமூகவியலாளர் சனிடெர் அளித்த அறிக்கையின் கூற்று இது). இந்தச் சொல்லுக்கு மாற்றாக "சமுதாய மாற்றங்கள்" எனக் கூற வேண்டுமெனச் சொல்கின்றனர். (அமெரிக்கச் சமூகவியலாளர் தபிள்யு. ஆக்பர்ன் கூற்று இது). இதேபோல் வளர்ச்சி பற்றிய கருத்தும் புறக்கணிக்கப் பட்டுள்ளது.

"சமுதாய மாற்றங்கள்" பற்றிய அவர்களது கருத்து ஆரவாரமாகக் கொட்டி முழக்கப் படுகின்றது. இதன் சித்தாந்தங்களைப் பரவலாகப் பரப்புரை செய்யப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. அக் கோட்பாடு கள் வருமாறு:

1. "மக்கள் முதலாளியம்". இதில் உழைக்கும் மக்களில் சில பகுதியினர் பல்வேறு குழுமங்களில் பங்குதாரர்கள் ஆகின்றனர்; அதன் மூலம் குழுமங்களின் ஆக்கத்தில் " பங்கு பெறுகின்றனர்." இதன் மூலம் தொழிலாளர்களுக்கும் கோடிக்குரியவரர்களுக்கும் இடையே வகுப்பு வேற்றுமைகள் எதுவும் இருக்கவில்லை என்று "மக்கள் முதலாளிய" ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இரு சாராரும் ஆக்கத்தை பெறுவதால் இரு சாராரும் ஒரே காலத்தில் தொழில் நிலையத்தின் முதலளிகளாகவும் தொழிலாளிகளாகவும் உள்ளனர். பல இலக்கக் கணக்கான தொழிலாளர்களின் வருமானம் அவர்களுக்கு அரைவயிற்று உணவுக்குத்தான் காண்கின்ற அதே நேரத்தில், சில நூறு தனிஒரு முதலாளிகளும், கொள்ளையாகச் சம்பளம் வாங்கும் அவர்களின் அடிமைக் கூட்டங்களும் கோடானு கோடிக்கணக்கில் பணங்களைச் சுருட்டிக் கொள்கின்ற உண்மைநிலை புறக்கணிக்கப் படுகிறது. அவர்களோ, இது வெறுமனே அளவு ரீதியான வேற்றுமையே தவிர, அடிப்படையில் வேறுபட்ட பொருளில்லை எனக் கூறுகின்றனர்.

2. "அடுக்குகளாக்கல்" இந்தக் கோட்பாடு"மக்கள் முதலாளியம்" பற்றிய "ஆய்வுரை"யிலிருந்து தோன்றுகிறது, ஆக்கமும் கூலியும் பொதுவான ஒருமித்த வருமான மூலங்களாக மாறிவிட்டன என்று கூறப்படுகின்றது. இதன் விளைவாய், வகுப்புகளும் வகுப்புப் போராட்டமும் மறக்கப்பட்டுப் போயின என்றும், சமுதாய அமைப்பின் தன்மையைக் குறித்துச் சொனனால், வகுப்புகளுக்குப் மாறாக அவற்றின் இத்தைப் பெற்றுள்ள இந்தச் சமுதாய "அடுக்குகள்" ஒன்றும் முதன்மை வாய்ந்தவை அன்று என்றும் கூறப்படுகின்றது.

3. "முதலாளியத்தின் நாகரிகப் படுத்தும் தொண்டு." இந்தக் கோட்பாட்டின் கண்டுபிடிப்பாளர்கள் முதலாளியம் குடியேற்ற நாட்டு மக்களுக்கு நாகரிகம் எய்துவதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது என்றும், அதன்பின் அது அவர்களுக்குச் உரிமையும் வழங்கியது என்றும் கூறுகின்றனர்.

4. இந்தக் கோட்பாடு "சேம நல அரசு", சம வாய்ப்புகள் உள்ள சமுதாயம்" என்று என்னென்னவோ தடபுடலான பல சொற்களைக் கொண்டுள்ளது. ஆனால் எல்லா விளக்கமும் ஒரே காரியத்துக்குத்தான் வளர்ச்சியானது "பகுத்தளிப்பதில் ஒரு புரட்சியை", அதாவது பயன்பாடும், சமுதாய வளம் ஆகியவற்றின் உயர்நிலையை நோக்கிச் செல்லும் நிலையான விரைவுபடுத்தப்பட்ட இயக்கத்தை உறுதிப் படுத்துகிறது என்று மெய்பிக்கவே பயன்படுகிறது. இக் "கொள்கை"யின் ஆதரவாளர்கள் பின்வருவன போன்ற சான்றுகளைக் கூற முனைகின்றனர்; பெருஞ்செல்வரான துப்போன்ட்டின் மனைவியும் தொழிலாளர்கள் - எடுத்துக்காட்டாக சிகாகோ நகரத்து புலால் கடைத் தொழிலாளர்கள் - அருந்துகின்ற அதேவகையான பாலையே அருந்துகிறார்; அந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு பாலைக் குடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு அதிகமாகவும் அவர் குடிப்பதில்லை; பெருஞ்செல்வரான இராக்பெல்லரும் கூட அவரது தொழில் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களைப் போலவே ஒரே வகையான கடற்கரை இருக்கையில் படுத்துத்தான் செங்கதிர் குளிப்பு செய்கிறார்; குடியரசுத் தலைவரும் எளிய அமெரிக்கனும் ஆலிவுட் புகழ் நடிகர்கள் நடிக்கும் ஒரே தொலைக் காட்சியைத்தான் கண்டு களிக்கின்றனர். வையால். வையால்.

இத்தகைய கோட்பாடுகளை விளக்குவதன் மூலம் முதலாளியச் கோட்பாட்டினர்கள் மிகவும் மிகுதியான அரசியல் முடிவுகளுக்கும் கொள்கை முடிவுகளுக்கும் வந்து விடுகின்றனர். அதாவது மார்க்சிய பொருள் நிலையில் கூறப்படும் முதலாளியம் அமெரிக்க நாட்டில் இப்போது இருந்து வரவில்லை யென்றும் ஏனெனில் வெற்றி என்பது தனியார் உடைமை, முன் முயற்சி, எதிரிடை ஆகியவற்றின் விளைவாக ஏற்படுவதாகும் என்பதை எடுத்துக் காட்டும் ஓர் எடுத்துக் காட்டாகவே அமெரிக்கா விளங்குகின்றது என்றும் முடிவு கட்டுகின்றனர்.

இவையனைத்தும் "முதலாளியத்தின் உரு மாற்றம்" பற்றிய சிற்றுார்த்தனமான புனைவுச் சித்திரமேயாகும். பொதுவுடைமைக் கருத்துகளையும் சரிகட்டி நிற்பதற்காகவே இதனைத் தோற்று வித்துள்ளனர்.

முதலாளியத்தின் இந்தக் "புனைவுச் சித்திர"த் தன்மையையும், "சமுதாய மாற்றங்"களின் போக்குகளையும் பற்றி ஏற்படக் கூடிய அனைத்து ஐயப்பாடுகளையும் அகற்றுவதற்காக, புதிய தனியரசாட்சி கோட்பாட்டு வாணர்கள் இன்னொரு கருத்தையும் - "தனிமய தொழில் மய சமுதாயம்" என்ற கருத்தையும் - தோற்றுவிக்கின்றனர். முதலாளியத்தின் கீழ் ஏற்படும் "சமுதாய மாற்றங்கள்" பற்றிய "தெள்ளத் தெளிவான" சித்திரங்களை வழங்குவதோடு, இந்தப் புதிய கருத்தைக் கொண்டு, பொதுவுடைமை மாந்த இயல்போடும் மானிட நலன்களோடும் மோதிக் கொண்டதால் அது தோல்வி கண்டு விட்டது என்றும், பொதுவுடைமை "சமுதாய மாற்றங்க"ளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்றும், அந்த மாற்றங்கள் அதனுள் தனியார் நலனையும் விளைவாக்க கருவிகளின் தனியார் உடைமையையும் "திரும்பவும கொண்டு வருகின்றன" என்றும், இதன் விளைவாக, (சாராம்சத்தில்) முதலாளித்துவத்தின் தன்மைக்ளையும் (சில குறிப்பிட்ட புறத் தன்மைகளில்) பொதுவுடைமைத் தன்மைகளையும் ஒரு சேரத் தன்னுட்கொண்ட ஒரு புதிய சமுதாயத்தின் தோற்றத்துக்கு இது வழி வகுக்கின்றது என்றும் மெய்பிக்கப் பார்க்கின்றனர்.

"முதலாளியமும் பொதுவுடைமையும் தாமாகவே ஒன்றிவிடுமா?" - இந்தக் வினாவையும் "ஒருமித்த தொழில்மய சமுதாயத்தின்" கோட்பாடு வாணர்கள் கேட்டுக் கொள்கின்றனர். இறுதிக் கட்டத்தில் அவை சங்கமித்தே தீரும் என்பதே அவர்களது ஒரே பதில். கம்யூனிசம் கூறுகின்ற திட்டமிடுதல், நல்வாழ்வு ஆகியவை யெல்லாம் "மக்கள் முதலாளியத்தின் ஆரம்பக் கட்டத்துக்கு மாறிச் செல்லும் மாற்றத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படும். மக்கள் முதலாளியமோ "பகிர்ந்தளிப்பில் புரட்சி"யை உண்டு பண்ணும்; இவ்வாறாக, அது "சம வாய்ப்புகள் கொண்ட சமுதாயமாக" மாறிவிடும் இதனால் "சமன்மையும் முதலாளியமும் ஒரே பொருளின் இரு வடிவங்களே"யாகும்.

மார்க்சியப் பகைவர்கள் அறிவியல் பொதுவுடைமையை அதனுள்ளிருந்து தகர்க்கவே எப்போதும் முனைகின்றனர். அதாவது மார்க்சின் கருத்துகளை இலெனினது நடவடிக்கைகளுக்கு எதிராகக் காட்டித் தகர்க்க முனைகின்றனர். மார்க்சின் "பொருளியல் ஆய்வுறுதி" 20ஆம் நூற்றாண்டு பட்டறிவால் மறுக்கப்பட்டதைக் கண்டறிந்த இலெனின் தன்னிச்சைத் தருக்கத்துக்குத் தாவி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மை இதுதானா?

முதலாவதாக, "மார்க்சின் பொருளியல் ஆய்வுறுதி" மார்க்சியத்தை திறனாய்வு செய்தவர்களின் கண்டபிடிப்பேயாகும். சமுதாய வளர்ச்சி அதன் பொருளாதார, ஆக்க வளர்ச்சியால் உறுதி செய்யப் படுகின்றது. என்று மார்க்சுமெய்ப்பித்தார். ஆனால் இந்த வளர்ச்சி தான்ாகவே, தன்னிச்சையாகவே நிகழ்ந்து விடுவதில்லை. இதற்க மாறாக, பொருளாயம் முழுவதும், சமுதாயம் முழுவதும் எய்துகின்ற முன்னேற்றமானது மக்களின், தேயத்தின் வகுப்புகளின் செயல்பாட்டினால் ஏற்படும் விளைவாகும். இந்தச் செயற்பாடும் அந்த மக்களின் உணர்வு, அவர்களது மன உறுதி, சமுதாய நடவடிக்கைகள் முதலிய கூறுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

இலெனினது "தன்னிச்சத்த்ருக்கமும்" இதே போன்ற இன்னொரு கண்டுபிடிப்புத்தான். வெகு மக்களின் ஆக்க மிக்க அரசியல் நடவடிக்கைகளைப், புரட்சிகரமான ஆக்க ஆற்றல்களை ஊக்குவிக்கக் கூடிய நிலைமைகளை எண்ணி ஆராய்வதில் இலெனின் பெருங்கருத்து செலுத்தினார். இது முற்றிலும் இயல்பானதே. ஏனெனில் தனியதிகார ஆட்சி ஊழி சமன்மைப் புரட்சி சிக்கலினை உண்மையில் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டது. இதனை தனியதிகார ஆட்சியின் பொருளியல் முறைகளைத் துருவி ஆராய்வதன் மூலம் இலெனின் நிரூபித்தும் காட்டினார். இந் நிலையில் மார்க்சுக்கு எதிராக இலெனினை நிறுத்திக் காட்டுவதற்கு ஆதாரங்கள் ஏது?

தனிவல்லாட்சிக் காலத்தின் வரலாற்றுப் பட்டறிவையும் சமன்மை அமைப்பையும் கருத்தில் கொண்டு, இலெனின் மார்க்சின் கருத்துாற்றை வளர்க்கத்தான் செய்தார்; அவர் மார்க்சியத்தைப் புதிய கருத்துகளால் செழுமையுறச் செய்தார்.

முதலாளியமும் பொதுவுடைமையும் தம்முள் ஒன்றுமிக்கின்ற திசை வழியில் என்றுமே வளர்ந்ததுமில்லை; வளரப் போவதும் இல்லை. அவை என்றுமே தனித்த "ஒன்றிணைந்த தொழில்மய சமுதாயமாக" ஒன்றுமிக்கப் போவதில்லை.

முதலாளியக் கோட்பாட்டாளர்கள் இப்போது சோவியத்து ஒன்றியத்திலும் பிற சமன்மை நாடுகளிலும் நடை பெற்று வரும் பொருளியல்ச் சீர்திருத்தங்களை குறிப்பாகச் சுட்டிக் காட்டி, இந்தச் "சங்கம"த்தை மெய்பிக்க முனைகின்றனர். இந்தச் சீர்திருத்தங்கள் அங்காடி சரக்கு விளைவாக்க முறைகளை ஆக்கம், விலை கடன் முதலிய பொருளியல் உந்துகோள்களின் பொருளியல் உறுதியோடு பயன்படுத்தும் அடிப்படையில் அமைந்தனவாகும். இத்தகைய பொருளியல் உந்து ஆற்றல்களிடம் செலுத்தப்படும் கவனத்தை, சமன்மை சமுதாயம் தனியார் உடைமை அடிப்படையில் அமைநத விளைவாக்கக் கோட்பாடுகளுக்குத் திசைதிரும்புகின்றது என்று குற்றம் சாட்ட "ஒன்றான தொழில் மய சமுதாயத்தை"ப்பற்றிப் பேசும் கோட்பாட்டினர் பயன்படுத்துகின்றனர்.

எனினும் சோவியத்து ஒன்றியத்திலும் வேறுபல சமன்மை நாடுகளிலும் ஏற்பட்டுவரும் பொருளியல் மாற்றங்கள், பொதுவுடைமை அமைப்பின் பொருளியல் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான, பொதுவுடைமை அமைப்பு. அனைத்து மக்களின் தேவைகளையும் முழுமையாக நிறைவு செய்தல் ஆகிய நடுமையான குறிக்கோளை மிகத் விரைவாக எய்துவதற்கான மிகவும் ஒத்ததான் நிலைமைகளை உருவாக்கும் கருவியேயன்றி வேறில்லை.

பொதுவுடைமை முழுமையாக வெற்றி பெறும்போதுதான் அங்காடிச் சரக்கு ஆக்கமும், சந்தைக்சரக்கு - பண உறவுகளும் போக்கப்படும். அவை சமன்மையின் கீழ் இன்னும் இருந்தே வருகின்றன. பயன்பாட்டுப் பண்டங்களை உழைப்புக்கேற்றபடி பகிர்ந்த்ளிப்பதன் மூலம்(சமன்மையின் கீழ் பண்டங்களின் பகிர்வு உழைப்பின் நிலைக்கும் அளவுக்கும் ஏற்பவே நடைபெறுகின்றது) குறிப்பிட்ட அளவு உழைப்பைத் தன்னுள் கொண்டஒரு விற்பனைப்பொருள் அதே அளவு உழைப்பைத் தன்னுட் கொண்ட மற்றொரு விற்பனைப் பொருளுக்குப் பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது.

சமன்மை சமுதாயத்தில் நிலவும் அங்காடிச் சரக்கு - பண உறவுகளின் தன்மை முதலாளியத்தின் கீழுள்ள இதே வகையான உறவுகளிலிருந்து அடிப்படையிலேயே மாறுபடுகிறது. முதலாளியத்திலோ சமன்மை பகிர்வை உழைப்புக்கு ஏற்ப மட்டுமே வழங்குகின்றது. (முதலீடு செய்யப்பட்ட மூலமுதலுக்கு ஏற்ப ஊதியங்கள் பகிர்கிக்கப் படுவதில்லை; ஏனெனில் அதில் முதலாளிகளே இல்லை. சமன்மையின் ஊதியம் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கே செல்கிறது). இரண்டாவதாக, உரிய பயன்பாட்டுக்கான பொருள்கள் மட்டுமே பகிர்கிக்கப்படுகின்றன. இதனால் விளைவாக்கக் கருவிகளின் தனியார் உடைமையைப் புதுப்பிக்கும் அனைத்து வழிவகைகளும் தவிர்க்கப்படுகின்றன. மூன்றாவதாக, ஆக்கம், பகிர்வு ஆகிய இரண்டுமே தானாக நிகழ்ந்து விடுவதில்லை; அவை மக்கள் அனைவரின் நல்வாழ்வை நோக்கி முன்னேறும் குறிக்கோளைக் கொண்ட ஒரு திட்டமிட்ட பொருளியலின் விளைவாகவே நிகழ்கின்றன.

எனவே அங்காடிச் சரக்கு - பண உறவுகளை முதலாளியச் சுரண்டல் நலன்களுக்காகப் பயன்படுத்தும் சாத்தியப்பாட்டுக்கே சமன்மையின் கீழ் இடமில்லை. அவை மக்கள் அனைவரின் நல்வாழ்வையும் மேம்படுத்தப் பயன்படுகின்றன; அதன்மூலம் வெகு மக்களின் வளர்ந்தோங்கும் முன் முயற்சியையும் படைப்பாற்றல் நடவடிக்கையையும் ஊக்குவிக்கின்றன; உழைப்பின் விளைவாக்க ஆற்றலை உயர்த்துவதிலும், விளைவாகும் பொருளின் படிநிலை விருத்தி செய்வதிலும், தேயப் பொருளியலில் மிக விரைவான வளர்ச்சியை எய்துவதிலும் ஒவ்வொரு தொழிலாளியையும் தொழில் நிலையத்தையும் அக்கறை கொள்ளச் செய்கின்றன.

சோவியத் ஒன்றியத்திலும் வேறு சில சமன்மை நாடுகளிலும் செயலாக்கப்பட்டுவரும் பொருளியல் சீர்திருத்தங்கள் அவற்றின் பொருளியல் வளர்ச்சியில் ஒரு புதிய முதன்மை வாய்ந்த நடவடிக்கையாகும். முதலாளியத்தின் கீழ் ஏற்படும் "சமுதாய மாற்றங்களை"ப் பற்றி முதலாளியக் கொள்கைகள் தீட்டித் தந்துள்ள சித்திரம் முழுவதும் உண்மைக்குப் பெரிதும் புறம்பான வண்ணங்களாலேயே தீட்டப்பட்டுள்ளது.

பயனீட்டாளரின் நலன்களுக்கு முற்றிலும் பொருந்திய படைப்பு வளர்ச்சியில் அடிப்படையில், இக்கால முதலாளியம் ஒரு "சேமநல அரசா"க மாறியுள்ளது என்று இக்கால முதலாளியத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும் வளர்ச்சி பெற்ற, முதலாளிய நாடுகளில் உழைக்கும் மக்களின் குறிப்பிட்ட பகுதியினரது வாழ்க்கை நிலை மிகவும் உயர்வாக இருக்கிறது என்பதும் அவர்களது முதன்மையான கருத்தோட்டமாகும்.

முதலாளிய சமுதாயத்தில் பல இலகக்கணக்கானவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் வறுமைக்கும் ஆளாகி நிற்பதை அவாகள் பொருட்படுத்துவதில்லை; அங்கு வேலையில் இருப்பவர்களும் கூட வேலையில்லாத் திண்டாட்ட அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். 1965இல் அமெரிக்க தனி நிலை முதலாளிகள் 4,500 கோடி தாலர்களை நிகர ஆதாயமாகப் பெற்றுக் கொண்டனர்; இது இரண்டாம் உலகப் போர் ஆண்டுகளின்போது கிட்டிய ஆண்டுச் சராசரி ஆதாயத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக மாகும். இதே சமயத்தில் மொத்த மக்கள்தொகையில் 15 விழுக்காட்டுக்கு மேற்பட்ட, 32 கோடி அமெரிக்கர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதனை அமெரிக்க அரசாங்கம்ே ஒப்புக்கொண்டுள்ளது.

"பயனிட்டாளரின் நலன்களுக்கு முற்றிலும் பொருந்திய அந்த விளைவாக்கம் என்னவாயிற்று? பயனிட்டாளரைப் பற்றிய சிந்தனையெல்லாம்,அவர் வாங்கும் ஆற்றல் படைத்தவராக இருக்கின்ற வரையில்தாதன். மற்றவற்றைப் பொறுத்தவரையிலோ, முதலாளிய வணிகர்களுக்கு மாந்தன் ஒரு பொருட்டே அன்று. நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போலவே இன்றும் பகிர்வு முதலீட்டின் அடிப்படையில்தான் இருக்கிறது; வருவாயே ஆக்கத்தின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.

முதலாளியத்தின் "நாகரிகப்படுத்தும் கடப்பாடு" பற்றி என்ன சொல்கிறீர்கள்! - என்று முதலாளிய ஒத்துழைப்பாளர்கள் கூக்குரலிடுகிறார்கள். முதலாளியம் பிற்பட்ட மக்களுக்கு நாகரிகத்தைக் கொண்டு வருகிறதாம்.

ஆனால் தனி வல்லாட்சி அளித்த "கொடை வளங்கள்" என்ன? இந்தக் "கடப்பாட்டின்" "பலன்கள்" யாவை? வறுமையும், கல்லாமையும், குடியேற்ற நாட்டு மக்களுக்குத் "நிலை கெட்டவர்கள்" என்று சூட்டிய பட்டமும்தான் கண்ட பயன். நியூ கினியா விலுள்ள பாப்புவன் மக்கள் இன்னும் கற்காலத்திலேயே வாழ்கின்றனர்; தாசுமேனியர்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். வட அமெரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் மிஞ்சியுள்ள பழங்குடிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க தனி வல்லாட்சி கடுமையாகப் போராடுகிறது. மொசாம்பிக்கிலும் அங்கோலாவிலும் ஏனைய குடியேற்ற நாடுகளிலுமுள்ள 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் பேருக்குக்கூடச் உரிமையைப் பெற்றுவிடவில்லை. அரசியல் விடுதலை யைப் பெற்றுவிட்ட மக்களும் கூட (அவர்கள் பெற்ற இந்த வெற்றிகளே மிகவும் அரும்பாடுபட்டுப் பெற்றவைதான்!) முற்றிலும் நம்பற்கரிய பொருளியல் தொல்லைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர், இதுதான் குடியேற்றவல்லாண்மையர் செய்த தொண்டு. ஆசியஆப்பிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேய வருமானமோ அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு செருமனி வேறு பிற தொழில் வளர்ச்சி மிக்க முதலாளிய நாடுகள் ஆகியவற்றின் வருமானத்தைக் காட்டிலும் நம்புதற்கரிய வகையில் மிகமிகக் குறைவாக உள்ளது. இந்த தனி வல்லாதிக்க நாடுகளோ, குடியேற்ற, அடிமை நாடு மக்களைக் கொள்ளையடித்துத்தான்் தமது செல்வங்கள் பலவற்றையும் திரட்டிக் கொண்டுள்ளன.

"அடுக்குகளாக்கல்" என்னவாயிற்று? மக்களை அவரவர்தம் வருமானம், கல்வி, பிற தன்மைகள் முதலியவற்றுக் கேற்பப் பகுதி பகுதியாகப் பிரிக்கலாம் என்பது உண்மைதான்். இந்த வேறுபாடுகள் அனைத்துக்கும் குறிப்பிட்ட பொருள் உண்டு. ஆனால் விளைவாக்கக் கருவிகளின் உடைமையோடுள்ள பல்வேறு உறவுகளாலும், உற்பத்தி வளர்ச்சிப் போக்கில் சமுதாய குழுக்களுக்குள்ள பல்வேறு பங்கினாலும் உறுதி செய்யப்படும் சமுதாயத்தின் வகுப்புப் பிரிவினையை அவை மாற்றிவிட முடியாது. இந்த கூறுகளை ஒருவர் எவ்வளவு இடர்ப்பட்டு புறக்கணிப்பு செய்துவிட முயன்றாலும், உண்மை நிலைமை அவற்றை முன்னணிக்குக் கொண்டுவரத் தான்் செய்யும்: அந்த "இல்லாத"வர்க்கப் போராட்டம் நாள்தோறும் இருந்து கொண்டுதான்் வருகிறது. ஆண்டு தோறும் வேலை நிறுத்தம் செய்பவர்களின் தொகை 5.5 முதல் 5.7 கோடிவரை இருந்து வருகிறது - இது சென்ற பத்தாண்டுகட்குமுன் இருந்ததைக் காட்டிலும் 100 விழுக்காடு அதிகமாகும்.

"மக்கள் முதலாளியவம்" என்னவாயிற்று? எடுத்த எடுப்பில் சொன்னால், பொருளியல் முறையாக வளர்ச்சிபெற்ற நாடுகளிலும் கூட, தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் ஐந்து அல்லது ஆறு விழுக்காட்டுக்கு மேற்படாத "மக்கள் முதலாளிகளே" உள்ளனர். ஆனால் சிறப்பான செய்தி இதுவன்று. உண்மையில் கவனத்துக்குரிய செய்தி வேறு. சான்றாக, திருவாளர் போர்டுக்கு அவரது சம்பளம் கொடுக்கப்படாது போனால், அவர் தமக்குக் கிடைக்கும் ஆதாயப் பங்குகளைக் கொண்டு வாழ்வதால், ஒன்றும் குறைந்துபோய்விடமாட்டார். ஆனால் இதே நிலைமை ஒரு தொழிலாளிக்கு ஏற்படுமானால், அவருக்குக் கிடைக்கக்கூடிய பங்குத் தொகை அவரது சாவுச் செலவுக்குக்குகூடக் கட்டிவராது. இவைதாம் "சம வாய்ப்புகள்" ஆகும்!

ஒரு சொல் எவ்வாறு எழுத்துக் கூட்டிச் சொல்லப்படுகிறதோ, அவ்வாறே அது ஒலிக்கப்படாமல் போவது பல மொழிகளுக்குரிய தனித்தொரு தன்மையாகும். ஆங்கிலம் படிப்பவர்கள் இவ்வாறு அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வார்க்கள்: "நீங்கள் 'மான்செசுடர்' என்று எழுத்துக் கூடடி, 'இலிவர்பூல்' என்று ஒலிக்க வேண்டும்." -

இக்கால முதலாளிய சார்பாளர்கள் முதலாளியத்தையும் அதன் சமுதாய அமைப்பையும் பற்றிய கருத்தை, எழுத்துக் கூட்டுவதில் திருத்தங்கள் செய்வதன் மூலம் "மாற்று"த் தீர்மானித்தபோது அவர்கள் ஒன்றும் . அதனை வேடிக்கையாகச் செய்யவில்லை. ஆனால் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். "மக்கள் முதலாளியம்" என்றால் "வல்லாதிக்கம்" என்றும், "அடுக்குகளாக்கல்," என்றால் "வகுப்புப் போராட்டம்' என்றும், "சேமநல அரசு" என்றால் "வேலையில்லாத் திண்டாட்டம், பிரிவினை, வறுமை" என்றும்தான்் பொருள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

இத்தகைய புதிய தலைப்புகளெல்லாம் முதலாளியத்தின் பொருள்தன்மையையோ அதன் கொள்ளைக் காரக் குணத்தையோ மாற்றிவிட முடியாது. தனிவல்லாதிக்கம் இருக்கின்ற வரையிலும் அதன் முறைகளும் தொடர்ந்து செயல்பட்டு வரத்தான்் செய்யும்.

சமுதாய வளர்ச்சி ஒரு தாழ்ந்த கட்டத்திலிருந்து உயர்ந்த கட்டத்துக்கு, முதலாளியத்திலிருந்து பொதுவடைமைக்குச் செல்லும் இயல்பான தேவையை வரலாறு அழிக்கவும் இல்லை; அதனால் அழிக்கவும் (ԼՔւգ-Ամո Փ1. மேலும் கடந்த பல ஆண்டுகள் தனிவல்லாதிக்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்துள்ளன; இந்த மாற்ற முடியாத நிகழ்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளன. உண்மையான உரிமையையும், நட்பமைதியையும், சமுதாய சமத்துவத்தையும், வளமான வாழ்வையும் உறுதி செய்யும் ஒரு புதிய சமுதாயத்தை - பொதுவுடைமை சமுதாயத்தை - கட்டியமைப்பதற்காக துன்ப துயரம் மலிந்த வறுமைப் படுகுழியிலிருந்து மாந்தகுலம் கரையேறி வந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய மேம்பாடு

போர்ப் பிற்கால ஐம்பதாண்டுகள் 75 புதிய தனியாட்சி அரசுகளின் தோற்றத்தைக் கண்டுள்ளன. குடியேற்ற ஆட்சியிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக் கொண்டுவரும் மக்கள் புதிய புதிய வெற்றிகளை ஈட்டி வருகின்றனர்.

விடுதலைவாழ்வு பெற்ற முதல் மாதங்களும் ஆண்டுகளும் செல்ல செல்ல, தனிவல்லாண்மை வாணர்கள் தமக்கு விட்டுச் சென்றுள்ள பொருளியல், பண்பாட்டு மரபு தமது தேயம் செம்மைபெற ஒரு தடையாக உள்ளது என்பது அந் நாடுகட்கு மேன்மேலும் தெளிவாகின்றது. பெற்ற விடுதலை வெறும் மாயைத் தோற்றம்போல் கரைந்து மறைந்து போகாது தடுக்கவும், குடியேற்றவல்லாண்மை புதியதொரு வடிவில் குடிபுகுந்துவிடக் கூடிய ஒவ்வொரு ஆகும் நிலையையும் தடுத்து நிறுத்தவும், அந் நாடுகள் அரசியல் உரிமைப் பொருளாதார உரிமையின் மூலம் வலிமைபெறச் செய்தாக வேண்டும்.

தமது தேயப் பொருளாயலைக் கட்டி யமைப்பதில், தாம் எந்தப் பாதையில் செல்வது, முதலாளியப் பாதையிலா அல்லது சமன்மைக்கு வழி வகுக்கும் முதலாளியமற்ற பாதையிலா என்ற சிக்கல் புதிதாக விடுதலையடைந்த மக்களின் முன் தவிர்க் கொணாத வண்ணம் எதிர்ப்படுகிறது. எனினும் சில மக்கள் மூன்றாவது பாதை ஒன்றும் இருப்பதாகவும், உரிமை, செல்வவளம், பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றுக்கு அதுவே வெகுவிரைவாகச் செல்லும் பாதை எனவும் நம்புகின்றனர். ஆனால் விரைவிலேயே அவர்கள் அதில் நம்பிக்கை இழந்து விடுகின்றனர். ஏனெனில் அதில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளும் அந்தப் பாதையுமே போலியானவை.

வரலாற்றின் முறைகளை மீறுவதில் இதுவரை எவரும் வெற்றியடைந்ததில்லை. ஒவ்வொரு மக்களது வளர்ச்சியின் தனிப்பட்ட தன்மைகளை இங்குக் குறிக்கவில்லை - இந்த வளர்ச்சி அந்தந்த நாட்டின் பிரத்தியேகமான வரலாற்றுத் தன்மைகளையும் பிற தன்மைகளையும் பொறுத்ததாகும். செய்தி என்னவெனில், ஒவ்வொரு நாட்டு மக்களது வளர்ச்சியின் வேறுபட்ட போக்கானது உண்மையான வளர்ச்சி முறைகளை நடைமுறையில் கொண்டு வருவதில் ஒரு தனித் தன்மையான தேசிய வடிவமாக உள்ளது. வரலாற்றின் போக்கைப் பின் வாங்கச் செய்ய இயலாது. இறந்த காலம் என்றும் எதிர்காலம் ஆக முடியாது.

இது தொல்லுயிரியல் மூலம் தெரிய வந்துள்ளது; உலகில் ஒரு காலத்தில் தினோசார் என்ற மாபெரும் விலங்குகள் வாழ்ந்து வந்தன; மாந்தனின் உயிரியல் படிமுறை வளர்ச்சிக் கட்டங்களில் இவையும் ஒன்றாக இருந்தன. ஆனால் அவை அழிந்து மறைந்து போயின; இனி எதுவும் அவற்றைத் திரும்பக் கொண்டு வர இயலாது.

எனவே மாந்த குலம் முன்னோக்கிச் செல்லும் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. மனித வரலாற்றின் தொல்லைப் பழங்காலத் தொடக்கத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட மிகவும் பெருமை பாராட்டப் பெற்ற, அந்தப் "பொற்காலம்" ஒரு கட்டுக் கதையைத் தவிர வேறில்லை, அதனைக் கற்காலம் என்றுதான்் சொல்ல வேண்டும்; அக் காலம் மனிதனுக்குப் போதுமான உணவைக் கூட வழங்க முடியவில்லை. அதன்பின் அடிமைக் காலம் இருந்தது; நிலக்கிழமை இருந்தது; அதன்பின் முதலாளியம் இருந்தது; இப்போதும் இருக்கின்றது; பொதுவுடைமையும் இருக்கிறது; இருக்கவும் செய்யும்.

புதிதாக விடுதலை பெற்ற அரசுகள் முதலாளிய வளர்ச்சிப் பாதையை மேற்கொள்வதன் மூலம் என்ன எதிர்பார்க்க முடியும்? சிலருக்கே செல்வம்; வெகுமக்களுக்கோ ஈவிரக்கமற்ற சுரண்டல்; கொடிய வறுமை - அவ்வளவுதான்். தேசிய முதலாளிகள் அயல்நாட்டு முதலாளிகளைக் காட்டிலும் எந்த வகையிலும் குறைவிாக உழைக்கும் மக்களை ஒடுக்க வில்லை. தனது கொள்ளைக்கார நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அந்த முதலாளி வகுப்பு, நாட்டுக்கிரண்டகம் புரியக்கூடத் துணிந்து விடுகின்றது. காங்கோவில் அண்மையில் நடந்த நிகழ்ச்சிகள் இதற்கு ஒரு தகுந்த எடுத்துக்காட்டாகும். மேலும் இதைப்போல் வேறுபல சான்றுகளும் கூறலாம்.

சமுதாய அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், முதலாளிய வளர்ச்சிப் பாதை உண்மையில் குடியேற்ற வல்லாண்மையே புதிய பெயரில் திரும்பக் கொண்டு வருகின்றது. 

18, 19ஆம் நூற்றாண்டுகளில் முதலாளியம் வளர்ச்சி பெற்று வந்தபோது நிலவிய நிலைமைகளிலிருந்து, அடிப்படையிலேயே வேறுபட்ட நிலைமைகளின் கீழ்தான்் புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் வளர்ச்சி பெறுகின்றன. அவை முழு நிறை முதலாளிகளோடு எதிரிடை முடிவதல்லை அவை ஏனைய மக்களை அடிமை கொண்டும் முதலாளியத்தை வளர்த்துக் கொள்ள முடியாது, இறுதியில் "தேசிய முதலாளியவம்" தனியதிகாரத்தின் ஆதரவையே நாட நேர்ந்து விடும்.

முதலாளியமற்ற வளர்ச்சிப் பாதையை, சமன்மைப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள மக்களுக்கு வருங்காலம் வழங்க இருப்பவை என்ன?

சமுதாய உரிமை
பொருளியல் பெருவளர்ச்சி
தேசியச் செல்வ வளம்

சமன்மை மாந்தனை மாந்தன் சுரண்டும் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளிவைப்பதன் மூலம், சுரண்டும் வகுப்புகள் என்றென்றும் கடைப்பிடித்து வந்த வண்ண இன அல்லது தேசிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் ஒழித்துக் கட்டி விடுகிறது, அது மக்களுக்கு உண்மையான உரிமையை உறுதி செய்கிறது; மேலும் உறவுற்ற உரிமையும் சமன்மையும் உண்மையில் கண் கண்ட உரிமையாக மாறச் செய்கிறது. அது அவர்களின் அரசியல், பொருளியல், பண்பாட்டு வளர்ச்சியை உறுதி செய்கிறது பொருளியல் பண்பாட்டு வளர்ச்சியின் வளர்ந்தோங்கும் நிலையும், அரசை ஆட்சி செய்யக் கூடிய தேசிய வல்லுனர்களைப் பயிற்றுவிப்பதும், உண்மையான உரிமையையும் தன்னிச்சையுைம் எய்துவதை எளிதாக்குகின்றன.

செழித்தோங்கும் பொருளியல், பண்பாடு ஆகியவற்றோடு, தேசிய மரபைப் பாதுகாக்கவும், மக்களுக்கு வளமான வாழவைக் கொண்டு வரவும், இணக்கமான ஒத்துழைப்பின் அடிப்படையில் தேயங்களுக்கிடையே நட்புறவான உறவுகளை உறுதிப்படுத்தவும் தேவையான நிலைமைகளும் உருவாக்கப்படுகின்றன.

இவையனைத்தும் ஏற்கெனவே சோவியத்து ஒன்றியத்தில் எய்தப் பெற்றுவிட்டன. இதனை அறிய, உருசிய மக்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் போதும். புரட்சிக்கு முந்திய காலத்தில் நடு ஆசியா, தூர. வடக்கு, சைபீரியா, தூரக் கிழக்கு முதலிய பகுதிகளில் வாழ்ந்த பல மக்களும் தொன்மையான வளர்ச்சிக் கட்டத்தில்தான்் இருந்து வந்தனர்

நாம் நடு ஆசியாவிலுள்ள உசுபெக், கிர்கீசு, தாசிக், துருக்மென் ஆகிய மக்களை மட்டும் பார்ப்போம். அக்டோபர் புரட்சிக்கு முன்னர் அவர்கள் பெற்றிருந்தது என்ன? தொழில் வளர்ச்சி முற்றிலும் இல்லை; அதனால் தேசியத் தொழிலாளி வகுப்பும் இல்லை நிலக் கிழார் ஆட்சியும், முழுமையான கல்லாமையும் இருந்தன. பல மக்கள் தமது மொழியின் எழுத்து வடிவத்தைக் கூடப் பெற்றிருக்கவில்லை.

இன்றோ நடு ஆசியக் குடியரசுகள் தமது மிகு வளச்சி பெற்ற தொழில் துறைக்கும், அனைத்து மக்கள் கல்வியறிவுக்கும், பள்ளிப் பிள்ளைகள் மாணவர்கள் ஆகியோரின் பெருந்தொகைக்கும், தேசிய விஞ்ஞானப் பேரவைக்கும், செழித்தோங்கும் தேசியக் கலை இலக்கியத்துக்கம் பேர்பெற்றவையாக விளங்குகின்றன.

பிற்பட்ட மக்களால் தனித்து வாழவே முடியாது எனக் கூறும் தனிவல்லாதிக்க "ஆய்வுரை"யைத் பொதுவுடைமையைக் கட்டியமைக்கும் மக்களது வாழ்க்கை முழுமையாக அழித்தொழித்து விடுகிறது

வ. மா- 7 ஏனைய தேயங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் தலைவிதியை எந்த வொரு நாடும் வரலாற்று முறையில் பெற்றிருக்கவில்லை என்பதற்கோர் கண் கண்ட சான்றினை பொதுவுடைமை வழங்குகின்றது

ஆனால், முதலாளியக் கால கட்டத்தை இன்னும் கடக்காத நாட்டு மக்களுக்கு முதலாளியமற்ற வளர்ச்சிப் பாதை வழி திறந்திருக்கிறதா?

மங்கோலிய மக்கள் குடியரசின் பட்டறிவும் சோவியத்து நடு ஆசிய மக்களின் நுகர்வறிவும் அந்த வழிதிறந்திருப்பது நடக்கக் கூடியதே என்பதைக் காட்கின்றன.

புதிய வளர்ச்சிப் பாதையை மேற்கொண்டுள்ள மக்களுக்கு உலக சமன்மை அமைப்பு கணிசமாக உதவி வருகிறது; அந்த மக்கள் தெள்ளத் தெளிவான குறிக்கோளைப் பெற்றிருந்தால், ஒரு சிறந்த எதிர் காலத்தை உருவாக்க முழுமூச்சோடுபாடுபட அணியமாக இருந்தால், அவர்கள் பொதுவுடைமையை நோக்கிச் செல்லும் தமது பாதையில் முதலாளியக் கால கட்டத்தை எய்தாமலே அதனைத் தாண்டி முன்னேறுவதற்கு உலக சமன்மை அமைப்பு அவர்களுக்கு உதவுகின்றது.

பெருவலிமை படைத்த சமன்மைக் கூட்டுக் குடும்பம் விடுதலைக்காகப் போராடும் அனைத்து மக்களின் நலன்களையும் பாதுகாத்து நிற்கிறது;அந்த குறிக்கோள் உறுதியாய் எய்தப்படும் என்பதற்கோர் உண்மையான நம்பிக்கையாகத் திகழ்கிறது.