வர்ணாஸ்ரமம்/பதிப்புரை
Appearance
பதிப்புரை
திராவிடப் பண்ணையின் மூன்றாவது மலர் இந்த வர்ணாஸ்ரமம். பேரறிஞர் சர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுக்கு தளபதி பதிலளித்திருப்பதே இந்தச் சிறு நூல்.
அண்ணாவின் பேச்சும் எழுத்தும் தனித்தியங்குகிறதென்பதுமட்டும் வெகு நிச்சயம். இதன் விளக்கமே 'வர்ணாஸ்ரமம்' 'விண்மீன் வானில் துள்ளுகிறது' என்ற கவிகளின் கனவை ஆசிரியரின் நடை இந்நூலில் நனவாக்குகிறதென்பதை ஒன்றிரண்டு பக்கங்கள் புகுந்ததுமே நேயர்கள் கண்டு மகிழலாம்.
திராவிடப் பண்ணையாளர்