விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூன் 2016/05
"அசோகர் கதைகள்" 1956ஆம் ஆண்டு திரு. நாரா நாச்சியப்பன் எழுதியது.
மாமன்னர் அசோகரின் குணப்பண்பை அடிப்படையாகக் கொண்டு புனைந்துள்ள இந்தக் கற்பனைக் கதைகள் சுவைமிக்கவை. இளஞ் சிறுவர்களுக்கு நல்ல படிப்பினைக் கதைகளாகவும், பெரியவர்களுக்குச் சிறந்த இலக்கியமாகவும் விளங்குகிறது. Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறிய பின் அவர் இவ்வாறு உறுதி செய்துகொண்டார். இந்தச் செய்தி பரத கண்டம் முழுவதும் பரவியது. ஒரு சிற்றுாரிலே இருந்த பெரியவர்கள் ஒருநாள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். "துன்பம் அடைந்தவர்களைக் கண்டால் அரசர் அப்படியே கண்ணிர் விட்டுவிடுகிறாராம்! யாராவது ஏதாவது கவலை என்று சொன்னல் அதை உடனே தீர்ப்பதற்கு வழி செய்கிறாராம்!அரசர் அடியோடு மாறிவிட்டார்" என்றார் ஒரு பெரியார். "உண்மைதான். மற்ற உயிர்களைத் தம் உயிர்போல் மதிக்கும் மனப்பான்மை ஒருவருக்கு வந்துவிட்டால், அவர் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே பாடுபடுவார். |