விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/திசம்பர் 2017/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக

"மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்", டாக்டர். மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூலாகும்.

‘தமிழ்’ என்பதைப் பிறர் ‘திராவிடம்’ என்றனர்; தமிழ்மக்கள் அங்கங்கும் போக்குவரவின்றித் தங்கியகாலத்தில் அவர்கள் தமிழ்மொழியே பல்வேறு வகையான இந்திய மொழிகளாகத் திரிந்து நின்றன; ஒன்றோடொன்று கலந்து பின்னும் பலவாயின. மிகுதியாகத் திரிந்துவிட்டவை வங்காளம் முதலிய வட இந்திய மொழிகள்; ஒரளவில் திரிந்தவை தெலுங்கு முதலிய திராவிடமொழிகள்; மொழிதிரியவே தமிழ்மக்களும் அவ்வம் மொழிக் குரியவராய் வட இந்தியரும் தென்னிந்தியருமாகத் திரிந்து பல சாதியினராயினர்; இதனால் இந்தியர் யார் என்பதே தெரிந்து கொள்வது அரிதாயிற்று.

இத்தகைய உற்ற நேரத்திலேதான், இந்தியாவின் வடமேற்கே சிந்து ஆற்றின் கரைமருங்கு இற்றைக்கு 5000 ஆண்டுகட்குமுன் சிறந்த திராவிட நாகரிகத்தோடு விளங்கியிருந்து பின் மண்மூடுண்ட ‘மொஹெஞ்சொ-தரோ’ ‘ஹரப்பா’ முதலிய பெரு நகரங்கள், அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. தக்க நாகரிகச் சான்றுகள் அவற்றிலிருந்து நேரிற் கண்டெடுக்கப்பட்டுச் சிறந்த ஆராய்ச்சி யறிஞர்களால் நன்கு சோதனை செய்யப்பெற்றன: சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பது காண்டலளவையாலும் மலையிலக்காகத் துலங்குவதாயிற்று. இற்றைக்கு 4500 ஆண்டுகட்கு முன் இந்தியா முழுமையும் திராவிடமே யென்று விளக்கி, நிலப்படப் புத்தகத்திற் (Atlas) படமும் எழுதப்பெற்றிருக்கிறது.

திராவிடர் இப்போது எந்நிலையி லிருக்கின்றனர். தம் முன் நிலைகளைச் சிறிதேனும் எண்ணிப் பார்ப்பாராயின், இந்தியாவில் சாதியாலும் மொழியாலும் சமயத்தாலும் பல பிரிவினராய் ஒற்றுமையின்றி எழுச்சியின்றி மேலுமிருக்க ஒருப்படுவரோ! திராவிடர் தம் தொன்மையையும் வன்மையையும் உலகறிய வைத்து வாழவன்றோ முற்படுவர்! இவ் வுணர்ச்சியும் முயற்சியும் உண்டாகும் பொருட்டே இம் மொஹஞ்சொ-தரோ ஆராய்ச்சிகளை விளக்கமாகத் தமிழ்மொழியில் எழுதுவித்து வெளியிடுகின்றோம்.

புதைபொருள் ஆராய்ச்சி

மிகப் பழைய மனிதன் வீடு கட்ட அறியாது மலை முழைகளில் வாழ்ந்து வந்தான். அப்போது அவன் இயல்பாகக் கிடைத்த கற்களையே தன் கருவிகளாகக் கொண்டான். அவன் நாளடைவில் உலக இயல்பை கூறுபாட்டை அறிந்து, செம்பு, வெண்கலம், இரும்பு முதலிய உலோகங்களைக் கண்டான்: அவற்றைக் கொண்டு தனக்குவேண்டிய பலவகைப்பொருள்களைச் செய்து கொண்டான். ஆற்றங்கரைகளிலும் சமவெளிகளிலும் இயல்பாகக் கிடைத்த களிமண்ணைக் கொண்டு வீடுகளை அமைத்தான். ஆற்று ஓரங்களில் ஓங்கி வளர்ந்த கோரைப் புல்லைக்கொண்டு கூரைகளை அமைத்தான் தன் வாழ்விற்கேற்ற பாண்டங்களை மண்ணாலேயே செய்து கொண்டான்; தன். அறிவுக்கு எட்டிய அளவில், தான். பேசிவந்த மொழியைப் புலப்படுத்தச் சித்திர எழுத்துக்களைப் பயன்படுத்தினான்; அவ் வெழுத்துக்களைப் பண்படுத்தப்பட்ட களிமண் தட்டுகள் மீதும்


(மேலும் படிக்க...)