விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2019-07-09

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"கலிங்கம் கண்ட காவலர்" புலவர் கா. கோவிந்தன் அவர்கள் எழுதியது.

கலிங்கம் கண்ட காவலர்-இருவர். வடகலிங்கத்தை வென்ற குலோத்துங்கனைப் பற்றியும், தென்கலிங்கம் வென்ற அசோகனைப் பற்றியும் இந்நூல் கூறுகின்றது. ஆராய்ச்சி முறையும், வரலாறு முறையும் தழுவ எழுதப்பட்டுள்ள இந்நூல் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை யுண்டாக்கும். பழங்கால வரலாற்று உண்மைகளில் பல இக்கால மக்கள் எழுச்சிக்கு எவ்வாறு துணைபுரிகின்றன என்பது இந்நூலைக் கற்பார்க்கு நன்கு விளங்கும்.

கலிங்கம் கண்ட காவலர்


தோற்றுவாய்

ந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்க இடங்கள் ஒரு சிலவே என்றால், அவற்றுள் கலிங்கம் தலையாய சிறப்பு வாய்ந்தது. கலிங்கம், ஒருபால், ஒர் அரிய இலக்கியம் தோன்றத் துணை புரிந்துள்ளது. மற்றொருபால், அன்பு நெறி வளர்த்து அறவழி காட்டும் ஒர் அரிய மதம் உலகெங்கும் பரவ உறுதுணை புரிந்துள்ளது. “பரணிக் கோர் சயங்கொண்டான்” என்ற பாராட்டிற்கு உரிய பெரியார், கலிங்கத்துப் பரணி என்ற பெயரால், உயர்ந்த செந்தமிழ் இலக்கியக் கருவுலம் ஒன்றை உருவாக்கக் காரணமாய் இருந்தது கலிங்கநாடு. பெரும் படை துணை செய்யப், போர் வெறி பிடித் தலைந்த அசோகன் உள்ளத்தில், அன்பும் அருளும் சுரக்கப்பண்ணி, அவன் துணையால் புத்தன் வகுத்த புது மதம் பாரெல்லாம் சென்று பரவப் பெருந்துணை புரிந்ததும் அக்கலிங்க நாடே.

கங்கைக்கும் கோதாவரிக்கும் இடையில், வங்கப் பெருங்கடலைச் சார்ந்திருக்கும் கடற்கரை நாடே, பண்டு கலிங்கம் எனும் பெயர் பூண்டுத் திகழ்ந்தது. அது, கலிங்கம் எனப் பொதுவாக அழைக்கப் பெறினும், கோதாவரிக்கும் மகாநதிக்கும் இடையில் கிடப்பதும் இன்றைய கஞ்சம் விசாகப்பட்டின மாவட்டங்களைக் கொண்டதுமாகிய ஆந்திர மாகாணப் பகுதி தென் கலிங்கம் எனவும், மகா நதிக்கும் கங்கைக்கும் இடையில் உள்ளதும், ஒரிசா மாகாணம் என வழங்கப் பெறுவது மாகிய பகுதி வட கலிங்கம் எனவும் இரு கூறாய்ப் பிரிந்து வழங்கப் பெற்றது.


(மேலும் படிக்க...)