விக்கிமூலம்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிமூல நிர்வாகியாக்கும்படி (sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். விக்கிபீடியா பராமரிப்பு தொடர்பில் சில தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான வசதி நிர்வாகிகளுக்கு உண்டு. இங்கே விண்ணப்பிக்குமுன், தயவுசெய்து வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும்.

நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

விதிமுறைகள்[தொகு]

விக்கி கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிமூல சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிமூலம் மீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிமூலத் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும்போது நல்ல மதிப்பிடுதிறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்கவேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிமூலத்தில் இருந்திருக்கவேண்டும். பெரும்பாலான புதிய நிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்புச் செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாயும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக்கொள்ளலாம், ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புக்களை நீங்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.

மற்றப் பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை விடப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக் காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்துவரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக, முன்னரே நீக்கிவிடலாம், எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிபீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். வாக்களிக்கும்போது, தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும். வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு: (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை).

அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

வேறொருவரை நிர்வாகிதரத்துக்கு அனுமதிக்க நியமிக்கும் போது:

  1. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
  2. பின்வரும் உரையைப் பிரதி செய்யவும்:
     {{விக்கிமூலம்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பயனர் பெயர்}} 
  3. பக்கத்தின் மேற்பகுதியிலுள்ள "தொகு" பொத்தானைச் சொடுக்கித் தொகுத்தல்
   பக்கத்துக்குச் செல்லவும். உங்கள் உரையைக் கடைசி நியமனத்துக்கு மேல் 
   ஒட்டவும்.
  4. இதிலுள்ள பயனர் பெயருக்குப் பதிலாக நீங்கள் நியமிக்க விரும்புபவரின்  பயனர் 
   பெயரைப் பிரதியிடவும்.
  5. பக்கத்தைச் சேமிக்கவும். 
  6. விக்கிமூலம்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பயனர் பெயர் பக்கத்துக்கான 
   சிவப்பு இணைப்பைச் சொடுக்கிப் பின்வரும் பகுதியைச் சேர்க்கவும்: 

    ===
    [[பயனர்:பயனர்பெயர்|பயனர்பெயர்]]
    ===
    '''[http://ta.wikisource.org/w/wiki.phtml
    title=விக்கிமூலம்:நிர்வாகிகள்_தரத்துக்கான_வேண்டுகோள்/பயனர்பெயர்&action=edit 
    இங்கே வாக்களிக்கவும்] 
    (0/0/0) 
    00:00 00 மாதம் 
   0000 (UTC)''' முடிவு வரை 

  7. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் 
   என்பதை விளக்கவும். ~~~~ என்பதைப் பயன்படுத்தி ஒப்பமிடவும். 
  8. எல்லாம் சரியாக உள்ளன என்பதை உறுதிப்படுத்த முன்தோற்றம் பார்க்கவும். 
    00:00 00 மாதம் 0000 என்பதை உங்கள் ஒப்பத்திலுள்ள நேரப் பதிவினால் மாற்றீடு
   செய்யவும், ஆனால் திகதியை ''ஏழு நாட்களுக்குப் பின்வரும் திகதியாக்கவும்''.
  9. உங்கள் தொகுப்பைச் சேமிக்கவும். 

நடப்பு நியமனங்கள்[தொகு]

குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந் நியமனத்தை ஏற்றுக்கொண்டால் இப் பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளவும் .

தயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதியின் மேற்பக்கத்தில் எழுதவும். (and update the headers when voting)

தற்போதைய நேரம்01:17, 2 ஏப்ரல் 2020 (UTC)Request for sysop access[தொகு]

கோபி[தொகு]

I nominate gopi for sysop access. He is a well known contributor, sysop in tamil wikipedia and has worked there for more than a year. he is also involved in projects like http://www.noolaham.net similar to tamil wikisource and hence has the experience, motivation and right attitude to steer tamil wikisource in the right direction--ரவி 21:54, 11 மே 2007 (UTC)

(everyone please leave the comments in english as this election will have to be verified by wikimedia)

நன்றி ரவி, இந்த நியமனத்தை நியமனத்தை ஏற்கிறேன். Thanks for your nomination. I accept it. --கோபி 22:01, 11 மே 2007 (UTC)


support

 1. Gopi is a well known user in wikipedia. Technically sound person. I strongly support him.--Trengarasu 22:54, 11 மே 2007 (UTC)
 2. I strongly support Gopi.--Kanags 03:55, 12 மே 2007 (UTC)
 3. I support Gopi for his excellent job in wikipedia and the wikisource like Noolaham project--Sivakumar 07:38, 13 மே 2007 (UTC)
 4. Mayooranathan 16:32, 13 மே 2007 (UTC)
 5. I strongly support Gopi.--Natkeeran 04:45, 14 மே 2007 (UTC)

oppose

neutral

comments

Request posted at http://meta.wikimedia.org/wiki/Requests_for_permissions#Tamil_wikisource --ரவி 19:23, 19 மே 2007 (UTC)

Bureaucrat access had been denied citing very low number of members. So, i am changing this into a sysop election and filed the request again at http://meta.wikimedia.org/wiki/Requests_for_permissions#Tamil_wikisource_.28ta.wikisource.org.29 --ரவி 11:13, 21 மே 2007 (UTC)

கோபிக்கும் எனக்கும் நிர்வாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த பக்கங்களைப் பூட்டலாம் என்று ஒரு பக்கத்தில் தெரிவித்தால் பூட்டி வைப்பதற்கு வசதியாக இருக்கும்.--ரவி 15:41, 22 மே 2007 (UTC)

Ravidreams[தொகு]

I nominate Ravidreams for sypsop access. He is a well known contributor, sysop in Tamil Wikipedia and Tamil Wiktionary. Ravi has worked in wikipedia for more than three years and worked in wiktionary from the start of the project.He has the technical knowledge and motivation to take the Tamil Wikisource in it's early days. --Trengarasu 22:53, 11 மே 2007 (UTC)

(தமிழ் சாரம்சம்: ரவி அவர்களை டெரன்ஸ் நிர்வாகி தரத்துக்கு பரிந்துரை செய்கின்றார். ரவி மூன்று வருடங்களுக்கு மேலாகா விக்கிபீடியா, விக்சனரி, மற்றும் பிற விக்கிதிட்டங்களில் திறம்பட முன்மாதிரியாக செயலாற்றி வருகின்றார். அவருடைய ஆர்வமும் திறன்களும் மெச்சதக்கது. விக்கிமூலத்தை கட்டமைப்பதில் அவர் நன்றாக செயலாற்றுவார் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு.)

நன்றி, டெரன்ஸ். I accept the nomination--ரவி 08:16, 12 மே 2007 (UTC)

ஆதரவு / support

 1. கோபி 22:57, 11 மே 2007 (UTC)
 2. Natkeeran 14:59, 12 மே 2007 (UTC)
 3. Sivakumar 07:42, 13 மே 2007 (UTC)
 4. Mayooranathan 16:31, 13 மே 2007 (UTC)
 5. Kanags 12:23, 14 மே 2007 (UTC)

எதிர்ப்பு / oppose

நடுநிலை / neutral

கருத்து


தயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதியின் மேற்பக்கத்தில் எழுதவும் (and again, please update the headers when voting)

அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள்[தொகு]