விக்கிமூலம் பேச்சு:தானியக்கம்
தலைப்பைச் சேர்- விக்கிமூலம்:ஆலமரத்தடி#முன்பக்கம் அடுத்தப்பக்கம் என்ற மேம்பாட்டு வசதி மிதக்கும் பொத்தான்களில் வினவப்பட்டுள்ளது.
- பயனர் பேச்சு:Neechalkaran#துப்புரவு பொத்தான் என்பதில் ஒரு கோரிக்கை உள்ளது.-- த♥உழவன் (உரை) 07:03, 18 சூன் 2019 (UTC)
எழுத்துணரியாக்கத் தரவேற்றம் குறித்த சமூக எண்ணங்களைப் பெறல்
[தொகு]@TI Buhari தொடர்ந்து எழுத்துணரியாக்கத் தரவுகளை நீங்கள் பதிவேற்றுவதைக் கண்டேன். ஆனால், இத்தளத்தினை சுற்றுக்காவல் செய்வதற்கு அது இடையூறாக உள்ளது. ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாழ பத்து புதிய பக்கங்களை உருவாக்குகிறீர்கள். அவற்றைத் தானியங்கி கணக்கில் தான், இதுவரை செய்துள்ளோம். நீங்களும் அக்கணக்கில்தான் செய்ய வேண்டும். தானியங்கி கணக்கு, என்பது அண்மைய மாற்றங்களில் தெரியாதபடி வசதியுள்ள கணக்கு ஆகும். நான் ஏற்கனவே உங்களுக்கு உங்கள் பேச்சுப் பக்கத்தில் விளக்கியிருந்தேன். நீங்கள் அக்கணக்கினை தொடங்க இயலாது என்று மறுத்துள்ளீர்கள். தமிழ் விக்கிமீடிய நடைமுறைப்படி, நீங்கள் மறுத்தல் பொருத்தமன்று. நானும், நீங்களும் தமிழ் விக்கிமீடிய நடைமுறைகளப் பின்பற்றுதல் வேண்டும். எனவே, இது குறித்து ஒருமித்த சமூக எண்ணங்களைப் பெற, தமிழ் விக்கிமீடிய நடைமுறைப்படி, கட்டக அணுக்கர் (sysop) என்ற முறையில், இங்கு வாக்கெடுப்பு நடத்துகிறேன். உங்கள் எண்ணங்களை இங்குள்ள எண்ணங்கள் உட்பிரிவில் தெரிவிக்கலாம்.
தனிக்கணக்கில் செய்க
[தொகு]- ஆதரவு பிற பயனர்கள் பங்களிப்பை கண்காணிக்க எனக்கு இடராக உள்ளது. அதனால் அவர் தனிக்கணக்கில் தான் செய்தல் வேண்டும். நான் உட்பட பலர் அவ்விதமே செயற்பட்டுள்ளோம். --Info-farmer (பேச்சு) 04:40, 8 நவம்பர் 2024 (UTC)
நடுநிலை
[தொகு]மறுப்பு
[தொகு]- அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் வடிகட்டி இருக்கிறதே. அதைக் கொண்டு தான் நான் இப்போது பார்க்கிறேன். ஒருவர் வேகமாக எந்த வித தொகுப்புகளைத் தொடர்ச்சியாக செய்தாலும் அண்மைய மாற்றங்கள் பக்கம் நிறைந்து விடுமே. எழுத்துணரியாக்கத்தையும் அது போலத் தான் இதையும் கருதுகிறேன். எனவே சாதாரண தொகுப்புகளுக்காகத் தானியங்கி இயக்க விருப்பமில்லாதவரை அதை இயக்கச் சொல்லிக் கட்டாயமாக்குவது ஏற்றதாக இல்லை. குறிப்பாக, எளிதில் வடிகட்டக் கூடிய தொகுப்புகளுக்காக இதைச் செய்ய வேண்டாம். --Sodabottle (பேச்சு) 13:54, 8 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams:
ஒரே பக்கத்தை, பல முறை திருத்தங்கள் செய்து, அவ்வப்போது சேமித்தாலும், அண்மைய மாற்றங்கள் பக்கம் நிறைந்து விடுமே! சிலர் செய்வது போன்று, எழுத்துணரியாக்கம் செய்யக் காத்திருக்கும் நூற்களில், சில பக்கங்களை மட்டும் எழுத்துணரியாக்கம் செய்து விட்டு அகன்று விடுவதாலும், பக்கத்தை நிரப்பும் நோக்கம் நிறைவேறி விடுமே!
தேவையற்ற சிந்தனைகளை பயனர் நடுவே உருவாக்குதல் விக்கிமூலத தளத்துக்கு நன்மை பயக்காது.
—TI_Buhari (பேச்சு) 17:00, 8 நவம்பர் 2024 (UTC)
எண்ணங்கள்
[தொகு]- தகவல் உழவன், உங்களுக்கும் புகாரி அவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலை எங்கே காணலாம்? அவர் என்ன காரணத்திற்காக மறுக்கிறார்? ஒரு மனிதர் கைப்பட செய்யும் தொகுப்புகளைத் தானியங்கி என்று குறிப்பிடச் சொல்வதும் முறையாக இருக்காது. அவர் செய்யும் பணிகளைத் தானியாக்கமாகவே செய்ய வழி இருந்தால் அதைச் சுட்டிக் காட்டலாம். புதிய நூல்களுக்கு எது உகந்த OCR என்று பாலாஜியிடம் வினவிய போது அவரும் தொகுப்புப் பெட்டிக்குள் உள்ள OCR பொத்தானைக் கைப்பட அழுத்துவதே நல்ல வழி என்றார். ஒரு வேளை, அதனைத் தானியக்கமாகச் செய்ய வழி இருக்கிறதா? அண்மைய மாற்றங்களைக் கண்காணிப்பது தான் பிரச்சினை என்றால், அங்கே உள்ள வடிகட்டிகளைப் பயன்படுத்தி புதிய பக்கங்களைத் தவிர்த்து விட்டும் பார்க்கலாம். ஆலமரத்தடியிலும் இதை ஒத்த கருத்தை அருண் இட்டிருக்கிறார். ஒரு வேளை, விக்கிமேனியா போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களில் கணக்கில் கொள்ளப்படும் பயனர் தொகுப்பு எண்ணிக்கை, மற்ற விக்கிமூலம் தொடர்பான தொகுத்தல் போட்டிகளில் இது குழப்பத்தையோ முறையற்ற போட்டியையோ ஏற்படுத்துகிறது எனில், அதைத் தனியாக உரையாடுவோம். பொதுவாக, ஒரு கொள்கையை எவருடைய பெயரையும் குறிப்பிட்டு அல்லாமல் பொதுப்படவே உருவாக்க வேண்டும். இந்தச் சிக்கலைப் பொருத்த வரை, புகாரி அவர்களின் பங்களிக்கும் ஊக்கம் குன்றாதவாறு தீர்வு காண முயல்வோம். அவர் மிகச் சிறப்பான பங்களிப்புகளை அளித்து வருகிறார் என்று எண்ணுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:49, 8 நவம்பர் 2024 (UTC)
- அவரது பேச்சுபக்கத்தில் இங்கே தொடங்கினேன்.
- //தொடர்பான தொகுத்தல் போட்டிகளில் இது குழப்பத்தையோ முறையற்ற போட்டியையோ ஏற்படுத்துகிறது// ஆம், ஏற்படுத்தும். 2016 ஆம் ஆண்டு நீங்கள், நான் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தானியங்கி கணக்குகள் வழியே செய்ய வழி வகுத்தீர்கள். இங்கு தானியங்கி கணக்கு என்ற சொற்றொடரே தவறான புரிதலை உண்டாக்குகிறது. அண்மைய மாற்றங்களில் மறைமுகமாக செயற்படும் கணக்கு என்ற அடிப்படையில் தான் எண்ண வேண்டும். ஏனெனில் வடிகட்டி முறையில் ஒரு குறிப்பிட்ட பயனரின் புதிய உருவாக்குதல்களை மறைக்க இயலாது. ஒரே நேரத்தில் பலர் செய்தால் எப்படி கண்காணிப்பது?
- //ஒரு கொள்கையை எவருடைய பெயரையும் குறிப்பிட்டு அல்லாமல் பொதுப்படவே உருவாக்க வேண்டும்.// ஆம். தனிப்பட்ட முறையில் பலவற்றை அவர் எனக்கு அறிமுகம் செய்துள்ளார். அதே போல நானும் அவருக்கு அறிமுகப்படுத்தினேன். // எடுத்துக் காட்டாக இம்மாதம் 13 & 14 ஆகிய இரு தேதிகளில், நாள் ஒன்றுக்குச் சுமார் 2000 பக்கங்களுக்கும் மேல் OCR செய்துள்ளேன். இது தானியங்கியில் சாத்தியமா எனச் சிந்திக்க வேண்டுகிறேன்.// என்று அவரே கூறியுள்ளார். இவ்வளவு பதிவுகளை ஒருவர் கையடக்க முறையில் செய்ய முடியாது என்றே எண்ணுகிறேன். இதுபோல ஓரிரு நாட்களில் ஆயிரகணக்கான புதிய பக்கங்களை உருவாக்குதல் கூடாது என்று கூறவில்லை. நல்ல திறனுள்ள ஒருவர், மேம்பட்ட வசதியைப் பயன்படுத்த ஏன் மறுக்கிறார் எனப் புரியவில்லை.எனவே, meta:Bot policy படி, அனைவருக்குமான கொள்கையை நம் உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். கற்பேன்! கற்பிப்பேன்!! அவ்வளவே. அடித்தளமிடுக. உங்கள் நேரத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.
- Info-farmer (பேச்சு) 15:57, 8 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams: @Info-farmer:
ஐயா!
நான் என் தனிப்பட்ட கணக்கில், தானியங்கி மூலம் செயல்படுகிறேனோ என்பதே உங்கள் ஐயப்பாடு என எண்ணுகிறேன். தாங்களே நேரில் வந்து, என் செயல்பாட்டைக் காணுங்கள். நான் manual ஆகச் செயகிறேனா அல்லது தானியங்கி மூலம் செயகிறேனா என்பதை. இன் ஷா அல்லாஹ் [இறைவன் நாடினால்], சுமார் நூறு பக்கங்கள் உள்ள நூல் ஒன்றை, சோதனைக்காக, உங்கள் முன் எடுத்துச் செய்து காட்டுகிறேன். எவ்வளவு நேரத்தில் செயகிறேன் என்பதைக் காணுங்கள்.அதுவே உங்கள் குழப்பம் தீர வழி வகுக்கும். தாங்கள்தான் வர மறுக்கிறீர்கள்.
நான் 1979ல் இருந்து, சுமார் 45 ஆண்டுகளாகக் கணினித் துறையில் இயங்கி வருகிறேன். முதல் தலைமுறைக் கணினியில் [first generation IBM computer at DTE (department of Technical Education, Guindy) then IBM 1430 as well as ICL-1901-George V OS, then IBM-370 (Autocoder programming) as well as ICIM-2904] இருந்து தற்காலக் கணிப்பொறி வரை கண்டவன் என்ற முறையில், உங்கள் அனைவரை விடவும், எழுத்துணரியாக்கத்தைப் பொறுத்த மட்டில், இறையருளால், கணினியில் விரைவாக இயங்கும் ஆற்றல் பெற்றவன்.
அல்ஹம்துலில்லாஹ்! [புகழனைத்தும் வல்ல இறைவனுக்கே]
மேம்பட்ட வசதி என்று நீங்கள் எவ்வாறு அறுதியிட்டுக் கூற முடியும்? 3500 பக்கங்களை [31 அக்டோபர் 2024-UTC day], நீங்கள் தானியங்கியில் எழுத்துணரியாக்கம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் எனக் கூறுங்கள். பின், நீங்கள் பயன்படுத்தும் தானியக்க முறை மேம்பட்டதா, இல்லையா எனத் தீர்மானிக்கலாம்.
//எழுத்துணரியாக்கப் பணியை வழங்கியில் முடுக்கியுள்ளேன். 00:49, 5 செப்டெம்பர் 2024 (UTC)//
//எழுத்துணரியாக்கப் பதிவுகள் இனிதே முடிந்தது. வழு வரவில்லை. 07:43, 5 செப்டெம்பர் 2024 (UTC)//
உங்கள் கூற்றுப்படியே. தானியக்க முறையில், 274 பக்கங்களுக்குச் சுமார் 7 மணி நேரம் ஆகியுள்ளது. இத்தானியக்க முறை, நான் செயல்படும் முறையை விட, எவ்வாறு மேம்பட்டது எனக் கூறுகிறீர்கள்?
— TI Buhari (பேச்சு) 17:30, 8 நவம்பர் 2024 (UTC) - @Ravidreams: @Info-farmer:
- //தொடர்பான தொகுத்தல் போட்டிகளில் இது குழப்பத்தையோ முறையற்ற போட்டியையோ ஏற்படுத்துகிறது//
பொத்தாம் பொதுவாகக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறிச் செல்லுதல், உங்கள் கூற்றை வலுப்படுத்தாது. இது வரை நடந்த போட்டிகளில், ஒரு பயனரின், போட்டி வெளிக்கு அப்பால் (போட்டிக்கு முந்தைய), தொடர் பங்களிப்புக்கு ஏதேனும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளனவா அல்லது பரிசுத் தகுதிக்கு எனக் கருத்தில் கொள்ளப்பட்டனவா? ஆம் எனில் எந்தப் போட்டியில் என்று கூற இயலுமா? உங்கள் கூற்றுக்குச் சான்றாக, அந்தப் போட்டியின் விதிமுறைப் பக்கத்தின் இணைப்பையும் தரவும். நான் இது வரை இரு போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன். ஆனால், அந்தப் போட்டிகளில், போட்டிக்கு முன்பான தொடர் பங்களிப்புக்கு என மதிப்பெண்கள் எதுவும் வழங்கப் படவில்லை. போட்டியில் மெய்ப்புப் பார்க்கப்பட்ட பக்கங்களும், சரி பார்க்கப்பட்ட பக்கங்களும் மட்டிலுமே கருத்தில் கொள்ளப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. மேலும் விதிகளில் போட்டி நடைபெறும் “கால கட்டத்திற்கு இடையிலான தொகுப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். Only edits made during the set contest time will count for scoring.” எனத் தெளிவாக அறிவிக்கப்பட்டது. [முதல் இரு போட்டிகளில் விதி எண்: 2 & மூன்றாம் போட்டியில் விதி எண்: 3] - மெய்ப்புப் போட்டிகளின் விதிமுறைகள்
- போட்டி:1ன் விதிமுறைகள்
- போட்டி:2ன் விதிமுறைகள்
- போட்டி:3ன் விதிமுறைகள்
- Genral RUles
— TI Buhari (பேச்சு) 10:24, 9 நவம்பர் 2024 (UTC)- @Ravidreams: @Info-farmer: மேலான கவனத்திற்கு
- மெய்ப்புப் போட்டி ஒன்றில், பயனர்கள் உரையாடலில் பயனர் ஒருவர் தெரிவித்த கருத்தைக் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டுகிறேன். கருத்துத் தெரிவித்த ஐவரில் மூவர் இப்போது முனைப்புடன் செயல் படுவதில்லை [விபரம் கீழே]. ஏன் வெளியேறினர்? இவ்வாறு பயனர்களுக்குத் தொடர்ந்து விதிக்கப்படும் தேவையற்ற கட்டுப்பாடுகளினால்தான் என்பதே என் கருத்து. அவர் கூறிய கருத்து:
- //“தாய் மொழிக்காக தன்னார்வம் கொண்டு தன்னார்வலர்களாக செயல்படும் பொழுது, இக்களம் என்னைப் போன்றோர்களின் ஒரு பிறவிக் கடனாக எண்ணி பயணித்து கொண்டிருக்கிறோம். இதில் ஏன் இவ்வளவு சிக்கல்கள், ஏன் இவ்வளவு இடையூறுகள், ஏன் இவ்வளவு பதட்டம் அடைய வைத்தல்.//”
- கடைசிப் பங்களிப்பு-பயனர் பெயர்
- 27 திசம்பர் 2020 - வெற்றியரசன் [Victory-King]
- 20 மார்ச்சு 2023 - பிரபாகரன்_ம_வி
- 30 ஏப்பிரல் 2023 - Girijaanand
— TI Buhari (பேச்சு) 10:53, 9 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams: @Info-farmer: மேலான கவனத்திற்கு
- @Ravidreams: @Info-farmer:
- அவரது பேச்சுபக்கத்தில் இங்கே தொடங்கினேன்.
- தானியங்கி கணக்கு என்பது அண்மைய மாற்றங்களில் மறைமுகமாக செயற்படும் கணக்கு அன்று. மனிதனாக உட்கார்ந்து ஒவ்வொரு தொகுப்பாக அழுத்தி சேமித்துக் கொண்டிருக்காமல், கணினி scriptகள் தானியக்கமாகச் செய்யும் தொகுப்புகளே தானியங்கிக் கணக்குகளின் கீழ் வர வேண்டும். இங்கு மனிதன் செய்வதா, தானி செய்வதா, யார் வேகமாகச் செய்ய முடியும்/முடியாது என்பதனை விட, ஒரு தானியால் செய்யக்கூடிய பணிகளையும் தானிக் கணக்கின் கீழ் செய்து மனித உழைப்பைச் சேமித்து, தானி செய்ய இயலாத பணிகளுக்கோ நமது தனிப்பட்ட ஓய்வு அல்லது வேறு ஆர்வங்களுக்கோ பயன்படுத்திக் கொள்வது தான் பரிந்துரைக்கத்தக்கது. புகாரி அவர்களோ வேறு யாருமோ மிக வேகமாக அடுத்தடுத்த பக்கங்களில் OCR பொத்தானை அழுத்தி உடனுக்கு உடன் சேமிப்பதன் மூலம் ஓரிரு நாளில் ஆயிரக்கணக்கான பக்கங்களை உருவாக்க முடியும். எனவே, அவர் தானியங்கியைச் சொந்தக் கணக்கில் ஏவி விட்டு பணியாற்றுகிறார் என்று கருத இடம் இல்லை. ஆனால், என்னுடைய உண்மையான கவலை என்பது தானியங்கி செய்யக்கூடிய ஒரு வேலையை யாருமே தங்கள் மனித உழைப்பை வீணாக்கிச் செய்யக்கூடாது என்பதே. ஒரு வேளை, தானியங்கி OCR தரும் outputக்கும் விக்கிமூலத் தொகுப்புப் பெட்டியில் இருக்கும் outputக்கும் தர வேறுபாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தானியங்கி முறை மேம்பட்டதாக இருந்தால் அனைவரும் அதையே பயன்படுத்த பரிந்துரைக்கலாம். இது தொடர்பாக சில சோதனைகளை தகவல் உழவன் செய்து காட்டினால் உதவியாக இருக்கும். அதாவது, ஒரே பக்கத்தை தானியங்கி கொண்டு விக்கிமூல OCR பொத்தான் கொண்டும் சில பக்கங்களைச் செய்து காட்டினால், தர ஆய்வு செய்ய உதவும். நமக்கும் ஏற்படும் கருத்துமாறுபாடுகளைத் தேவைப்பட்டால் Google Meet போன்றவற்றில் screen share செய்தே உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதற்காக யாரும் ஊர் விட்டு ஊர் யார் வீட்டுக்கும் செல்லத் தேவையில்லை. ஒரு பயனர் தீங்கு இழைக்கும் நோக்கத்தோட்டு தவறான தொகுப்புகளைச் செய்யாத வரை, அவரை நெறிக்கும் வகையிலான கொள்கை முடிவுகளை எடுக்கத் தேவையில்லை. உலக விக்கிமூலங்களில் தமிழ் விக்கிமூலம் மிகச் சிறப்பாக, முனைப்பாகப் பங்காற்றுவதைக் கண்டு மகிழ்கிறேன். அந்தப் போக்கு மேலும் தொடர வேண்டும், வளர வேண்டும். நம் விக்கிமூலம் இப்போது இருப்பதை விட 10 அல்லது 100 மடங்கு வளர்ந்தாலும் அண்மைய மாற்றங்களைக் கவனிப்பதில் சிக்கல் எழும். அதை நுட்ப நோக்கில் களைய வேண்டும். இன்னும் பலரை சுற்றுக் காவல் பணியில் ஈடுபட வேண்டிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட ஒரே ஒரு பயனரின் பதிவுகளை மட்டும் அண்மைய மாற்றங்களில் மறைத்துப் பார்க்க முடியுமா என்பதை விக்கிநுட்பக் குழுவிடம் கேட்டுப் பார்க்கலாம். போட்டிகள், நல்கைகள் பெறுவதில் பக்கங்களின் தொகுப்பு எண்ணிக்கைக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதை மாற்றி அமைக்கக் கோரலாம். வெறும் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல் 1, 10, 100, 1000, 10000 என்று log முறையில் எண்ணிக்கை range களுக்கான மதிப்பை வழங்கலாம். இந்தப் பிரச்சினையில் உடனடித் தீவிரம் காட்டாமல், பொறுமையாகவே அணுகலாம் என்று தோன்றுகிறது. நன்றி. --இரவி (பேச்சு) 10:26, 9 நவம்பர் 2024 (UTC)
- நுட்ப அடிப்படையில் இந்த உரையாடலை நகர்த்தியமைக்கு அகமகிழ்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி, இரவி.
- //தானியங்கி OCR தரும் outputக்கும் விக்கிமூலத் தொகுப்புப் பெட்டியில் இருக்கும் outputக்கும் தர வேறுபாடு இருக்கிறதா //
- முன்றுவகையில் எழுத்துணரியாக்கம் செய்யலாம். அவர் பின்பற்றுவது பாடலகளுக்கு உரியது. எடுத்துக்காட்டாக. பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/489 என்ற பக்கத்தில் தற்போது உள்ள தரவு. ஆனால் பத்திகனாக அமையும் நூலுக்கு பாடல்களுக்கான் எழுத்துணரியாக்கம் ஒப்பிட்டளவில் பலன் தராது. பலன் என்று நான் இங்கு கூறுவது யாதெனில், அதே பக்கத்தின் வரலாற்றை பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
- முதலில் IndicOCR படி பத்திகளாக உள்ள பக்கங்களுக்கு தானியக்கமாக உரையை பத்திகளாக உருவாக்கிறேன். பிறகு மேலடியையும் தானியக்கமாக இட்டு, நடுப்பகுதியில் அதனை நீக்குகிறேன். மூன்றாவதாக பத்திகளுக்கு இடையை இடைவெளி இட்டும், உட்தலைப்புக்கு வார்ப்புருக்கள் இட்டும் ஒழுங்கு படுத்துகிறேன். இறுதியாக பக்கத்தில் மெய்ப்புப்பணியை செய்து மஞ்சள் நிலைக்கு தள்ளுகிறேன். இந்நூல் முழுவதும் பலருடன் இணைந்து செயற்படும்போது அதுவிரைவான பலனைத் தருகிறது. நூலுக்கு ஒப்ப செய்யும் எழுத்துணரியாக்கத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுதே விரைந்து பலனை பெறலாம்.
- //அண்மைய மாற்றங்களில் மறைத்துப் பார்க்க முடியுமா என்பதை விக்கிநுட்பக் குழுவிடம் கேட்டுப் பார்க்கலாம். // பல ஆண்டுகளுக்கு முன் சுந்தர் கூறியதாக நினைவு. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு பயனரின் பங்களிப்புகளை அண்மைய மாற்றங்கள் பகுதியில் மறைத்து வைக்கலாம் என்று கூறியதாக நினைவு.
- //தானியங்கி செய்யக்கூடிய ஒரு வேலையை யாருமே தங்கள் மனித உழைப்பை வீணாக்கிச் செய்யக்கூடாது என்பதே// பங்களிக்கும் அனைவரும் தன்னலமற்ற பதிவுகளையே செய்கின்றனர். என்னால் முடிந்தவரை விளக்கம் கொடுத்து விட்டேன். செய்தல் கூடாது என்று யாரையும் என்றும் நான் சொல்வதில்லை. பலருடன் இணைந்து செயற்படும் போது என்னென்ன நுட்பம் தேவை என்றே ஆய்கிறேன். எனது பின்புலம் உங்களுக்கு தெரிந்ததே. கணினியை பின்புலமாகக் கொண்ட பலர் தங்களது திறனைக் கொண்டு பலர் எளிமையாக செற்பட்டால் தான் புதிய நுட்பங்கள் தோன்றும் என்பதே எனது வேண்டுகோள். தவறாக புரிந்து கொண்டால் அதற்காக நானும் வருந்துகிறேன். அனைவரும் நுட்ப அளவில் வளர வேண்டும் என்பதே என் அவா. தற்போது 2016 ஆம் ஆண்டு நாம் பணியாற்றிய போது இருந்த நிரலானது பைத்தான்2 ஆகும். அது பல இடர்களை எனது கணினியில் தருவதால் பைத்தான்2 முறையை அழித்து விட்டேன். அதனை பைத்தான்3-க்கு மாற்ற சீனி மாற்றி வருகிறார்.
- போட்டிக்கான தரமதிப்பூடு செய்ய எம்மொழியிலும் (Wikisource ontributor metric tool) கருவி இல்லை. அது குறித்தும் உரையாடி வருகிறேன். அவற்றை உரிய பக்கம் உருவாக்கித் தெரிவிக்கிறேன்.
- //தானியங்கி OCR தரும் outputக்கும் விக்கிமூலத் தொகுப்புப் பெட்டியில் இருக்கும் outputக்கும் தர வேறுபாடு இருக்கிறதா //
- Info-farmer (பேச்சு) 11:49, 9 நவம்பர் 2024 (UTC)
- விவரமாக விளக்கியதற்கு நன்றி. எனக்கு நுட்ப அடிப்படையில் மேலும் சில தெளிவுகள் தேவைப்படுகின்றன. விரைவில் உங்களைத் தனிப்பட தொடர்பு கொண்டு அதைப் பற்றி புரிந்து கொண்டு தொடர்ந்து கருத்துகளைப் பகிர்கிறேன். நன்றி. இரவி (பேச்சு) 18:45, 11 நவம்பர் 2024 (UTC)
- நுட்ப அடிப்படையில் இந்த உரையாடலை நகர்த்தியமைக்கு அகமகிழ்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி, இரவி.
- தானியங்கி கணக்கு என்பது அண்மைய மாற்றங்களில் மறைமுகமாக செயற்படும் கணக்கு அன்று. மனிதனாக உட்கார்ந்து ஒவ்வொரு தொகுப்பாக அழுத்தி சேமித்துக் கொண்டிருக்காமல், கணினி scriptகள் தானியக்கமாகச் செய்யும் தொகுப்புகளே தானியங்கிக் கணக்குகளின் கீழ் வர வேண்டும். இங்கு மனிதன் செய்வதா, தானி செய்வதா, யார் வேகமாகச் செய்ய முடியும்/முடியாது என்பதனை விட, ஒரு தானியால் செய்யக்கூடிய பணிகளையும் தானிக் கணக்கின் கீழ் செய்து மனித உழைப்பைச் சேமித்து, தானி செய்ய இயலாத பணிகளுக்கோ நமது தனிப்பட்ட ஓய்வு அல்லது வேறு ஆர்வங்களுக்கோ பயன்படுத்திக் கொள்வது தான் பரிந்துரைக்கத்தக்கது. புகாரி அவர்களோ வேறு யாருமோ மிக வேகமாக அடுத்தடுத்த பக்கங்களில் OCR பொத்தானை அழுத்தி உடனுக்கு உடன் சேமிப்பதன் மூலம் ஓரிரு நாளில் ஆயிரக்கணக்கான பக்கங்களை உருவாக்க முடியும். எனவே, அவர் தானியங்கியைச் சொந்தக் கணக்கில் ஏவி விட்டு பணியாற்றுகிறார் என்று கருத இடம் இல்லை. ஆனால், என்னுடைய உண்மையான கவலை என்பது தானியங்கி செய்யக்கூடிய ஒரு வேலையை யாருமே தங்கள் மனித உழைப்பை வீணாக்கிச் செய்யக்கூடாது என்பதே. ஒரு வேளை, தானியங்கி OCR தரும் outputக்கும் விக்கிமூலத் தொகுப்புப் பெட்டியில் இருக்கும் outputக்கும் தர வேறுபாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தானியங்கி முறை மேம்பட்டதாக இருந்தால் அனைவரும் அதையே பயன்படுத்த பரிந்துரைக்கலாம். இது தொடர்பாக சில சோதனைகளை தகவல் உழவன் செய்து காட்டினால் உதவியாக இருக்கும். அதாவது, ஒரே பக்கத்தை தானியங்கி கொண்டு விக்கிமூல OCR பொத்தான் கொண்டும் சில பக்கங்களைச் செய்து காட்டினால், தர ஆய்வு செய்ய உதவும். நமக்கும் ஏற்படும் கருத்துமாறுபாடுகளைத் தேவைப்பட்டால் Google Meet போன்றவற்றில் screen share செய்தே உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதற்காக யாரும் ஊர் விட்டு ஊர் யார் வீட்டுக்கும் செல்லத் தேவையில்லை. ஒரு பயனர் தீங்கு இழைக்கும் நோக்கத்தோட்டு தவறான தொகுப்புகளைச் செய்யாத வரை, அவரை நெறிக்கும் வகையிலான கொள்கை முடிவுகளை எடுக்கத் தேவையில்லை. உலக விக்கிமூலங்களில் தமிழ் விக்கிமூலம் மிகச் சிறப்பாக, முனைப்பாகப் பங்காற்றுவதைக் கண்டு மகிழ்கிறேன். அந்தப் போக்கு மேலும் தொடர வேண்டும், வளர வேண்டும். நம் விக்கிமூலம் இப்போது இருப்பதை விட 10 அல்லது 100 மடங்கு வளர்ந்தாலும் அண்மைய மாற்றங்களைக் கவனிப்பதில் சிக்கல் எழும். அதை நுட்ப நோக்கில் களைய வேண்டும். இன்னும் பலரை சுற்றுக் காவல் பணியில் ஈடுபட வேண்டிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட ஒரே ஒரு பயனரின் பதிவுகளை மட்டும் அண்மைய மாற்றங்களில் மறைத்துப் பார்க்க முடியுமா என்பதை விக்கிநுட்பக் குழுவிடம் கேட்டுப் பார்க்கலாம். போட்டிகள், நல்கைகள் பெறுவதில் பக்கங்களின் தொகுப்பு எண்ணிக்கைக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதை மாற்றி அமைக்கக் கோரலாம். வெறும் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல் 1, 10, 100, 1000, 10000 என்று log முறையில் எண்ணிக்கை range களுக்கான மதிப்பை வழங்கலாம். இந்தப் பிரச்சினையில் உடனடித் தீவிரம் காட்டாமல், பொறுமையாகவே அணுகலாம் என்று தோன்றுகிறது. நன்றி. --இரவி (பேச்சு) 10:26, 9 நவம்பர் 2024 (UTC)
தன்னிலை விளக்கம்
[தொகு]@Ravidreams: @Info-farmer:
//நீங்கள் அக்கணக்கினை தொடங்க இயலாது என்று மறுத்துள்ளீர்கள். தமிழ் விக்கிமீடிய நடைமுறைப்படி, நீங்கள் மறுத்தல் பொருத்தமன்று. //
நான் தானியங்கிக் கணக்கில் செயல்பட மறுக்கிறேன் என்பது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு. திரு. தகவல் உழவன் அவர்களுக்கும், எனக்கும் இடையே நடந்த உரையாடலை இங்கு காணலாம். எங்காவது மறுத்திருக்கிறேனா? இணக்கமாகத்தான் பதில் இறுத்திருக்கிறேன். திரு. தகவல் உழவன் சென்னை வரும் போது, தானியங்கிச் செயல்பாட்டை எனக்கு விளக்கி, நான் செயல் படும் முறையையும் காண விருப்பம் தெரிவித்திருந்தார். இப்போது அவர் நிலைப்பாடு மாறியது ஏன் என எனக்குப் புலப்படவில்லை. சமீபத்தில் நான் கணியம் இணைய இதழுக்கு அளித்த பேட்டியிலும், நான் தானியங்கியில் எழுத்துணரியாக்கம் செய்யவே விரும்புகிறேன் எனவும் தெரிவித்திருந்தேன்.
தொகுப்பு எண்ணிக்கை மேம்படவே நான் இவ்வாறு செயல் படுகிறேன் என்று இப்பிரச்னையை எழுப்பிய மூலக் காரணகர்த்தாவுக்கு, இயேசு பிரான் கூறிய “பாவமே செய்யாதவர்கள் முதல் கல்லை எறியுங்கள்” என்ற சொல்லாடலையும், கீழ்க்கண்ட பாடலையும் நினைவுறுத்த விரும்புகிறேன்.
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக்
குற்றம் கூறுகையில் மற்றும்
மூன்று விரல்கள் உங்கள் மார்பினைக் காட்டுதடா
படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடல்: ஜெயகாந்தன்
முதல் விரல் : இவரது முதல் செயல்பாடு:
நூலின் மேலட்டை பக்கத்தில், தொகு என்பதை அழுத்தி, நூலின் பெயரை ஏற்றவாறு மாற்றி, {{raw_image|வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1}} என்ற இந்த ஒரே ஒரு வரியைப் போட வேண்டியது. சேமிக்க வேண்டியது. அடுத்த நூலுக்குச் செல்ல வேண்டியது. இவ்வாறாக 18 அக்டோபர் 2022 அன்றைக்கு நான் பார்த்த அந்த நாளின் சுமார் 50 நிமிடங்களில், 80 நூற்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
15 அக்டோபர் 2024 அன்று சுமார்20 நூற்களுக்கு இவ்வாறு நூலட்டை மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் விரல் : தனிக் கணக்கில் இருந்து எழுத்துணரியாக்கம்
இவர் தம் தானியங்கிக் கணக்கில் இருந்து இந்த எழுத்துணரியாக்கத்தைச் செய்யவில்லை. மாறாகத் தம் தனிக் கணக்கில் இருந்து, இதைச் செய்துள்ளார். இவர்தான் ஊருக்குத்தாண்டி உபதேசம்… என்று செயல்படுபவர். ரொம்ப நாட்கள் ஆகி விடவில்லை தோழர்களே, சுமார் 12 நாட்கள்தாம் ஆகியுள்ளன. மேலும் உற்று நோக்கினீர்கள் என்றால், என் பாணியைப் பின்பற்றி, ஒரு நிமிடத்திற்குச் சுமார் 12 பக்கங்களைச் சேமித்துள்ளார்.
இவர் தம் தனிக் கணக்கில் இருந்து எழுத்துணரியாக்கம் செய்த மேலும் சில நூற்கள்:
இன்பத் திராவிடம்
தமிழ்த்தாய்
ஆரியராவது திராவிடராவது
இதய ஒலி
கலைஞர் மேல் காதல் கொண்டேன்
அருவிகள் {06:52 to 07:20 சுமார் 28 நிமிடங்களில் 125 பக்கங்கள்}
மூன்றாம் விரல் : தனிக் கணக்கில் இருந்து சில பக்கங்களுக்கு மட்டிலுமே எழுத்துணரியாக்கம் செய்தல்
எழுத்துணரியாக்கம் செய்ய இருக்கும் நூற்களில், சில பக்கங்களுக்கு மட்டிலுமே எழுத்துணரியாக்கம் செய்வது. பின், சில நாடகள் கழித்து வேறொரு நூல்…
எடுத்துக்காட்டாகச் சில நூற்கள்:
நபியே எங்கள் நாயகமே [சில பக்கங்கள்]
பெரியாரும் சமதர்மமும் [56-61 5 பக்கங்கள்]
கதை சொன்னவர் கதை [2-5 4 பக்கங்கள்]
இதுதான் திராவிடநாடு [2-10 9 பக்கங்கள்]
நான் பாட்டுக்கு, எந்தப் பிரச்னையும் எழுப்பாமல், என் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன். ஏற்கனவே, இவர் என் மேல் இதே போன்று ஒரு தேவையற்ற பிரச்னையைக் கிளப்பி, நான் பதில் சொல்லிய பின், அமைதி ஆகி விட்டார். இவருக்கு ஏன் என் மேல் தேவையற்ற காழ்ப்புணர்வு என எனக்குப் புரியவில்லை.
—TI Buhari (பேச்சு) 15:45, 08 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams: @Info-farmer:
ஐயன்மீர்! - ஆகத்து 2021ல் நடைபெற்ற இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி-3ன் போதே, போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டிலுமே என் நோக்கமன்று என்பதைத் தெளிவு படுத்தி விட்டேன். போட்டியில் வெற்றி பெறுவதை மட்டிலுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, சிலர் செயல்படுவதால், இரு போட்டிகளுக்குப் பின்னர் நடந்த மெய்ப்பு பார்க்கும் போட்டிகளில் நான் பங்கு பற்றவில்லை.
— TI Buhari (பேச்சு) 18:48, 8 நவம்பர் 2024 (UTC)