உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 5

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 5

காலவேகம் நாட்டில் புரட்சிகரமான மாறுதல் களை ஏற்படுத்தியது போலவே, நேரு குடும்பத்திலும் பெரியபெரிய மாற்றங்களே உண்டாக்கியது.

ஜவஹர்லாலின் உறுதியான தேசப்பற்றும், பொதுநல

லட்சியமும், ஊக்கமான உழைப்பும் தந்தை நேருவின் விடாப்பிடியான கொள்கைகளையும் தளரவைத்து விட்டன.மகனிடம் கொண்ட அளவில்லா அன்பு தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

தந்தையும் மகனும் தீவிர அரசியல் தலைவர்களாக மாறினர்கள். சுதந்திரப் போரில் தண்ணிகரில்லாத தனிப்பெரும் பணி ஆற்றினார்கள்.அந்த அந்த காலத்துக்கு ஏற்ப காந்திஜி காட்டிய வழிகளையும் வகுத்த திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முன்னின்றனர்.அடிக்கடி சிறையில் அடைப்பட்டு வாடினார்கள்.

இவற்றால் எல்லாம் ஆனந்த பவனம் தனது ராஜரீகத்தைப் பறிகொடுக்க நேர்ந்தது. மோதிலால்' நேரு வக்கில் தொழிலத் துறந்துவிட்ட உடனேயே குடும்பம் பலபல மாறுதல்களை அனுபவிக்க வேண்டிய தாயிற்று.

மோதலால் நேரு லடசம்லட்சமாகச் சம்பாதித்தார். பணத்தைச் சேமித்து வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்ததில்லை. தாராளமாக அள்ளி விசி ஆடம்பரமாக வாழ்க்கை கடத்தினர். வருமானம் நின்று போனதும், செலவுகளைக் குறைக்க வேண்டியது அவசியமாயிற்று.

ஆகவே முதல் காரியமாக அவர் தன்னிடமிருந்த குதிரைகளையும் வண்டிகளையும் விற்றுவிட்டார். இதைச்செய்வது அவரது மனதுக்குப் பிடித்த காரியமல்ல.

3

குதிரைகளை அவர் மிகுதியும் விரும்பினார். அவற்றிடம் விவரிக்க முடியாத அன்பு காட்டினர். எண்ணற்ற குதிரைகளை வளர்ப்பதில் பெருமை கொண்டிருந்தார். இருந்தாலும் என்ன செய்வது? வேறு வழி இல்லை.

அடுத்தபடியாக, பவனத்திலே பட்டாளம் போல். நிறைந்திருந்த பணியாளர்களை வேலையிலிருந்து நிறுத்தினார். எந்தெந்த விதமாக வெல்லாம் செலவைக் குறைத்துதுச் சிக்கனப்படுத்த முடியுமோ, அவற்றை அனுஷ்டிக்க நேரு குடும்பத்தினர் தயங்கவில்லை.

விருந்துகளும் கேளிக்கைகளும் இல்லாது போயின. இரண்டு மூன்று சமையல்காரர்கள் இருந்த வீட்டில் ஒருவன் போதும் என்று தீர்மானிக்கப்பட்டது. அகேக பட்லர்களும், அவர்களுக்குத் துணையாகத் திரிந்த எடுபிடி சிப்பந்திகளும் வேலை இழந்தனர். மாளிகைக்கு அழகு செய்து விளங்கிய விலைமதிப்பில்லா ஜம்பப் பொருள்கள் பலவும் விற்பனையாயின. ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து பழகிய நேரு குடும்பத்தினர் எளிய வாழ்க்கையை அனுபவித்து உணரலாயினர். இவை எல்லாம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அளவிட இயலாத வேதனையைப் புகுத்தியது இயற்கைதான்.

தலைகீழான இத்தகைய திடீர் மாறுதல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் இதுதான் என்று ஒரு சம்ப வத்தை வீட்டு வேலைக்காரர்கள் குறிப்பிட்டுப் பேசுவது சகஜமாகப் போயிற்று. விசித்திரமான நிகழ்ச்சி தான் அது. இந்தியரின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் புராதனமான நம்பிக்கை தூண்டிய பேச்சு அது.

 சில பெரிய வீடுகளில் தோட்டத்திலோ, எங்கோ நல்ல பாம்பு கரந்து உறையும். அதை மனைப் பாம்பு என்றும், அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித மான தீங்கும் வராது என்றும், நம்புவது மக்களின் இயல்பு. அதைக் கொல்வது பாபம் மாத்திரமல்ல ; கெட்ட காலத்துக்கு அறிகுறியுமாகும் என்று சொல்வர்.

ஆனந்த பவனத்தின் பெரிய தோட்டத்தில் சிறு சிறுறு வீடுகள் பல நின்றன. கரி, விறகு, மரக்கட்டைகள் முதலிய பலரகமான பொருள்களைப் போட்டு பூட்டி வைக்கவே அவ்வீடுகள் பயன் பட்டன. மரக்கட்டைகள் நிறைந்து கிடந்த சிறு வீடு ஒன்றில் பெரிய தொரு கிருஷ்ணசர்ப்பம் வசித்து வந்தது. ரொம்ப காலமாக அது அங்கு குடியிருந்தது. ஒரு தடவை கூட அது எவ ருக்கும் தீமை புரிந்தது இல்லே. யாரும் அதற்குத் திங்கு எண்ணியதுமில்லை. வேலைக்காரர்கள் அச்சம் இல்லாமல் அங்கு போவார்கள், வருவார்கள். நடுராத்திரியில் கூட அங்கே சென்று வருவது வழக்கம். பாம்பு இருக் கிறதே! என்று ஒருவர் கூடப் பயந்தது கிடையாது. "மனைப்பாம்பு. இது இருக்கிறவரையில் வீட்டுக்கோ, குடும்பத்துக்கோ எவ்விதக் குறையும் இல்லை. செல்வமும் சிறப்பும் பொங்கிப் பெருகும் என்றே பலரும் பேசி வந்தனர்.

1930-ம் வருஷம், மோதிலால் நேரு தொழிலைத் துறப்பதற்குக் கொஞ்ச காலத்துக்கு முந்தி, புதிதாகச் சேர்ந்திருந்த வேலைக்காரன் ஒருவன் பாம்பைக் கண்டு பயந்து போனான். சாயங்கால நேரம். பெரிய பாம்பு அது. அவனது திகில் வளர்ந்ததே தவிரக் குறையவில்லை, வேறு சிலரையும் சேர்த்துக்கொண்டு அவன் அந்த நாகத்தை வேட்டையாடிக் கொன்று திர்க்கும் வரை அவனா இருக்கவில்லை.

இவ்விஷயத்தை அறிந்ததும் பழைய வேலைக்காரர்கள் பதறினார்கள். குடும்பத் தலைவி ராணி நேரு உள்ளக் கலக்கம் எய்தினாள். என்ன பிரயோசனம் ? நடந்தது நடந்து விட்டது. இனித் தவிர்க்க முடியுமா? வருவது வந்துதானே தீரும் என்று அமைதிபெற முயன்றார்கள்.

விரைவிலேயே பவனம் முன் கண்டிராத பெரும் . மாற்றங்களே அனுபவிக்க நேர்ந்தது. மனப் பாம்பின் பெருமையைப் பேசத் தவறுவார்களா விஷயம் அறிந்தவர்கள்.

மோதிலால்நேரு எதைப்பற்றியும் கவலை கொள்ளவில்லை, தமது வாழ்க்கை ஏட்டிலே புதுக் கணக்கைத் தீட்ட துணிந்தார் அவர். அறுபதாவது வயதிலே முற்றிலும் புதுரகமான வாழ்க்கையைத் தேர்ந்து கொண்ட அவரது துணிவும் மன உறுதியும் நேரு குடும்த்தினர் அனைவருக்கும் அதிசயிக்கத் தக்க விஷயமாகவும் போற்றத் தகுந்த பண்பாகவுமே விளங்கின.

மோதிலால் நேரு வக்கீல் தொழிலைத் துறந்த பிறகும், கையிலிருந்த சில வழக்குகளை முடித்துக் கொடுப்பதற்காக நீதிமன்றம் சென்று வந்தார். அவரு டைய பழைய கட்சிக்காரர்கள் தங்களின் புதிய வழக்கு களையும் அவரே ஏற்று நடத்த வேண்டும் என்று கெஞ்சிக் கேட்பது வழக்கமாகிவிட்டது. யார் எவ்வளவு மண்றாடினாலும் சரி தந்தை நேரு தனது வைராக்கியத் தைத் தளர்த்தியதே இல்லே. பலர் பெருந்தொகை தருவதாக ஆசை காட்டுவர் ; எனினும் அவர்கள் முயற்சி பலித்தது கிடையாது. ஒரு சமயம் கட்சிக்காரர் ஒருவர் தனது வழக்கு ஒன்றை நடத்தித் தருவதற்கு அவருக்கு லட்சம் ரூபாய் தருவதாக முன்வந்து வேண்டி னார். அந்தச் சந்தர்ப்பத்தில் மோதிலாலுக்குப் பொரு ளாதாரக் கஷ்டமும், பணத்தேவையும் அதிகம் தான். என்றாலும், கொண்ட கொள்கையே பெரிது என்ற உறுதி பூண்ட நேரு அதை மறுத்து விட்டார்.

இவ்வித அரும் குணங்கள் பெற்ற மோதிலால் இந்தியாவின்இணயிலாத்தலைவர்களில்ஒருவராகஅழியாப் புகழ் பெற்றுள்ளது நியாயமான சிறப்பு தான்.