உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலை வீரர்கள் ஐவர்/தலைவர் உரை 4

விக்கிமூலம் இலிருந்து

தலைவர் உரை

மூத்த குடிப்பிறந்த மூதறிஞர் வாழுகின்ற தமிழகத்தில் புகழ்
யாத்த குடிப்பிறந்த வ.வே.சு.அய்யர் கண்டோம்.

விடுதலை உறுதி

ஏற்ற குடித்தோன்றல் - எழில்
தூத்துக்குடி கடல்மீது கப்பல்விட்ட ஏந்தல்
இளஞ்செழியக் கவி நண்பர்.
இனிய தமிழ்ச் சொல்லால்
இங்கு வருகின்றார். இதயம் உரை நல்லார்.
திருவும் புகழும் சிறந்தன பிறவும்
மருவுற நிற்கும்என் மாசிலா, மனைவியே
என்னரும் உயிரினும் என்னுயிர் உளத்தினும்
மண்னுறப் பாதியை மகிழ்ந்துனக் களித்தேன்
பின்னுற்ப் பரதியைப் பெரிய நம் இதயத்தில்
தன்னடிக் களித்தேன் சத்தியம் இஃதே.

இந்த

அகவற் பாவால் அகத்தினைத் திறந்த
தகவுடை மேலோன் தமிழர் தலைவன்........