விளையாட்டு உலகம்/பாதைக்கேற்ற பயணம்!

விக்கிமூலம் இலிருந்து
பாதைக்கேற்ற
பயணம்!

காற்றைக் கிழித்துக் கொண்டு கடுவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் ஒரு மூலையில், கண்ணீருங் கம்பலையுமாக ஒரு பெண் உட்காந்திருக்கிறாள். அவள் கையிலே ஒரு குழந்தை. கம்பளியால் போர்த்தி மூடப்பட்டிருக்கிறது அந்தக் குழந்தை. உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தை முகத்தைப் பார்த்துப் பார்த்து, தானும் உயிரிழந்த நிலையில் பிரயாணம் செய்கிறாள் அந்தத் தாய்.


வாழ்க்கையில் வசதியும் வளமும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவளா என்றால் அல்லவே அல்ல. அமெரிக்க நாட்டில், புகையிலை பயிரிடும் ஒரு எஸ்டேட்டில் கூலியாகப்பணியாற்றும் குடும்பத்தினள். உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவளா என்றால் அதுவும் இல்லை. நீக்ரோ இனவழி வந்தவள்.

வாரம் ஒரு முறை 90 மைலுக்கு அப்பால் உள்ள இலவச மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு அல்லல் அடைகின்றாளே! அதுதான் அவளுக்கு முதல் குழந்தையா? அல்லது குழந்தையே பிறக்காமல் அநேக ஆண்டுகளுக்குப் பிறகு தவமிருந்து பெற்ற தலைக் குழந்தை என்றால், அதுவும் இல்லை. அவளுக்கு 19 குழந்தை பிறந்ததில், இந்த நோய்வாய்ப் பட்டிருக்கும் குழந்தை 17வது குழந்தை.

பதினேழாவதாகப் பிறந்த இந்தக் குழந்தை, இந்த உலகத்தைப் பார்க்கத் தொடங்கிய நேரத்திலிருந்தே, பெற்றேர்களை உபத்திரவப் படுத்திக்கொண்டேதான் இருந்தது. வறுமையின் எல்லைக்கோட்டிலே வதிந்த அந்தக் குடும்பத்தில் உருவெடுத்துத் தோன்றிய அந்த பெண் குழந்தை பிறந்தபோது இருந்த எடை4½ பவுண்டு தான்

பிறந்த குழந்தை பிழைக்குமா மரிக்குமா என்ற, அச்சமும் கவலையும், பெற்றோர்களுக்கு முதல் நாளே முளைத்தெழுந்தது என்றாலும் குழந்தை இறக்கவில்லைய்யே தவிர பிழைக்கின்ற கட்டத்திற்குள்ளும் வரவில்லை. எண கொஞ்சங் கொஞ்சமாகக் கூடி வந்தாலும், இதயத்தில் தாக்கிவிட்ட சோகம் மாறாமலேயே வளர்ந்தது. வறுமையுடன் போராடிய அந்தக் குடும்பம், குழந்தையைக் காக்கவும் போராடியது.

பிழைத்து கொள்ளும் என்ற நம்பிக்கை பிறந்த போது, பேரிடி ஒன்று தலையில் விழுந்தது போல, குழந்தையை டபுள்நிமானியா என்ற விஷஜீரம் தாக்கியது. தாக்கிய விஷஜீரம் கொடுமையான காரியம் ஒன்றைச் செய்து விட்டு ஒதுங்கிக்கொண்டது. அதாவது, கையையும் கால்களையும் அசைக்க முடியாத அளவுக்கு இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கிவிட்டு விஷஜீரம் விடைபெற்றுக்கொண்டது.

ஒன்றைத்தயார் செய்து குழந்தைக்குப் போட்டார்கள். 11வது வயதில் நன்றாக நடக்கத் தொடங்கினாள். 13வது வயது வரை, தனியாக உருவாக்கபட்டக் காலணியுடன் நடந்த அந்தப் பெண், மற்ற எல்லோரையும் போல வீதியிலே நடக்கப்பழகினாள்.

எழுந்து நிற்கவும், நடக்கவும், ஓடவும், சக்தி வரப் பெற்ற குழந்தையைக் கண்டு, உற்சாகத்தில் மகிழ்ந்தே போனாள் தாய். இதற்கிடையில் பள்ளிப்படிப்பும் தொடர்ந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே விளையாடவும் தொடங்கி விட்டாள். ‘கடவுள் கால்களைக் கொடுத்துவிட்டான் நடக்க. இதுவே போதும்’ என்று அந்தப் பெண் திருப்தியடைந்து விடவில்லை.

‘உலகமே புகழும் வண்ணம், சிறந்த ஓட்டக் காரியாகத் திகழ்வேன்’ என்று உறுதி பூண்டாள். நிற்க முடியாமல் நிலைகுலைந்து கிடந்த பெண்ணின் நெஞ்சிலே எழுந்த இந்த உறுதியை, வீட்டின் வறுமையோ, மற்றும் சுற்றுப்புற சூழ் நிலையின் கொடுமையோ தடுத்து நிறுத்திவிட முடியவில்லை.

உடற்பயிற்சிகளை சலிப்படையாமல் தினந்தோறும் செய்தாள். ஓடப் பழகினாள். பயிற்சி பெற்றாள். பள்ளிகளில்,கல்லூரிகளில் சிறந்த வெற்றிகளைக் குவித்தாள். அவளது ஓட்டவேகத்தைக் கண்டு நாடே வியந்தது. இந்த நிலையில்தான், 1960ம் ஆண்டு ரோம் நகரில் ஒலிம்பிக் பந்தயம் நடக்கவிருந்தது. அமெரிக்கா நாட்டின் பிரதிநிதியாக ஓடுவதற்காக அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

துன்புறும் குழந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம், தாயின் மனம் தணலில் இட்ட மெழுகாகக் கரைந்தது. ‘இந்தக் குழந்தையை எப்படியும் காப்பாற்றியே தீருவேன்!’ மனதுக்குள்ளே சபதமிட்டாள் அந்த வீரத்தாய்...அந்தத் தீவிரப்பணியிலேதான், வாரம் ஒருமுறை 90 மைல்களுக்கு அப்பாலுள்ள இலவச மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாள்.

வாரக் கணக்கில் போனாலும், மாதக் கணக்கில் பயணம் முடிந்து நோய் குணமாகியிருந்தாலும், வெற்றி என்று கூறலாம். ஆனால் வருடங்கள் பல ஆகியும் எந்த விதமான குணமோ, முன்னேற்றமோ ஏற்படவே இல்லை. தோல்வி முகத்தைப் பார்த்தாலும், தொய்ந்து கிடந்த குழந்தையின் முகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம், ‘பார்த்து விடுவோம் ஒருகை’ என்ற துணிவு தொடர்ந்ததே தவிர, ஒதுங்கிப்போய்விடவில்லை.

உறுதியாக இருந்தத் தாய்க்கு இறைவனே அருள்வரம் தந்தது போல, மருத்துவம் மலர் முகம் காட்டத்தொடங்கியது. எட்டு ஆண்டுகள் தொடர்ந்து வைத்தியம் செய்த பிறகு, கைகால்கள் செயலிழந்து போய்க் கிடந்த குழந்தை, தள்ளடியவாறு நிற்கத் தொடங்கியது. கொஞ்சங் கொஞ்சமாக முன்னேற்றம் பெருகியது.

வீட்டிலே படுக்கையிலேயே படுத்துக் கிடந்த குழந்தையானது, வீட்டு வாசலிலே நடக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தன் வேலைக்குப் போய்வந்த நேரம்போக,பிள்ளைக்குக் கைகால் பிடித்துத்தடவி பணி செய்தாள் தாய். எட்டாவது வயதில் நடக்கத் தொடங்கியது அந்தக் குழந்தை. கால்களுக்கு வலிமை இல்லை நிற்க. உடலைத் தாங்கிட பொருத்தமான காலணி முதன் முதலாக 100மீட்டா் ஓட்டம். உலகசாதனை நேரம் 11 வினாடிகள். அடுத்தது 200 மீட்டர் ஓட்டம் அதிலும் தங்கப் பதக்கம். 400 மீட்டர் துாரம் ஓடுகின்ற தொடரோட்டம். அதிலும் வென்று தங்கப் பதக்கம். மூன்று தங்கப் பதக்கங்களை கழுத்தில் அணிந்து கொண்டு, உலகம் போற்றும் உன்னத வீராங்கனையாக வந்தாள் அந்தப் பெண்.

ரஷ்ய நாட்டினரும் ‘ஒலிம்பிக் ராணி’ என்று போற்றிப் புகழும் வண்ணம் புகழ் பெற்ற வீராங்கனை வில்மா ருடால்ஃப் என்பது அவள் திருநாமம். விரைவோட்டத்தில் இவ்வளவு சிறப்பாக யாரும் ஓடியதில்லை என்று பெயரெடுத்து, பெற்றோர்களையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திய வில்மாவின் வாழ்க்கையைப் பாருங்கள்.

அவள் தேர்ந்தெடுத்தப் பாதை சிறந்த பாதை. விளையாட்டுத் துறையான அந்த ஒப்பற்றப் பாதையில் நடந்தாள். அவளது பயணம் சீராக, சிறப்பாக, பாா்த்தவர்கள் புகழ்கின்ற பயணமாக அமைந்தது. உலகப்புகழ் பெற்றாள். ‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாகத் திகழ்கிறாள்.

ஒருவரின் புகழுக்கு பணமோ, பதவியோ, குடும்பப் பாரம்பரியமோ மட்டும் உதவாது. உயர்ந்த லட்சியமும் உண்மையான உழைப்பும், பண்பான பயணமும் பாதையுமே வெற்றி நல்கும் என்று வரலாறு கண்ட வில்மா ருடால்ஃபை நினைத்துக் கொள்வோம். விளையாட்டுத் துறைதரும் சிறந்த பாதைக்கேற்ற பயணத்தை நாமும் தொடர்வோம். பயன் பெறுவோம்.