விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/உயரமாய் வளர்வது குற்றமா!

விக்கிமூலம் இலிருந்து
35. உயரமாய் வளர்வது குற்றமா!

சோவியத் நாட்டின் பெண்கள் கூடைப் பந்தாட்டக் குழுவில், ஒரு விளையாட்டு வீராங்கனை, பெயர் இலியானா சிமினோவா. ரீகா எனும் பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் மகளான இலியானாவின் உயரம் ஏறத்தாழ ஏழடி ஆகும்.

28 வயது ஆன அந்த இளமங்கையின் எடையானது 284 பவுண்டாகும். இன்னும் திருமணமாகவில்லை. என்றாலும், விளையாட்டில் விருப்பமும் விடாத முயற்சியையும் உடைய இலியானாவுக்கு பிரச்சினைகள் அடிக்கடி வரத்தான் செய்கின்றன.

கூடைப் பந்தாட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரியாக விளங்கும் இலியானா, தனது திறமையை வளர்த்துக்கொள்ள, ஆண்களுடன் தான் விளையாடி பயிற்சி செய்வாள். அதிக உயரமும், தேவையான எடையும் இருந்தாலும், ஆண்களைப்போல வேகமாக ஓட முடியவில்லை, உயரமாகத் தாண்டமுடியவில்லை என்ற குறை இலியானாவுக்கு இருக்கத்தான் இருக்கிறது.

'தானும் ஒரு பெண்தான். ஆணைப்போல ஓடி ஆடிட முடியவில்லை என்று எண்ணி மயங்கும் நேரத்தில். இன்னொரு பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கின்றார்கள். அகில உலகக் கூடைப் பந்தாட்டக் கழகத்தினர்.

கூடைப் பந்தாட்டத்தில் பங்குபெற வரும் ஆட்டக்காரிகளின் உயரத்தினை அடிப்படையாக வைத்து, இரண்டு பிரிவாகப் பிரித்து, அந்தந்த பிரிவுக்குத் தனித் தனியாகப் போட்டி நடத்தப் போகிறோம் என்பதுதான் அவர்களின் திட்டம். சாதாரண உயரமுள்ள பெண்களை ஒன்று சேர்த்து ஒரு பிரிவு. இலியானா உயரத்திற்கு ஒத்தவர்களை வைத்து மற்றொரு பிரிவு.

இதைப்பற்றி இலியானாவிடம் கேட்டபொழுது, 'இது பயன்படாத திட்டம். இது நல்ல திட்டம் அல்ல' என்பதாகப் பதிலளித்தாள். கூடைப் பந்தாட்டத்தில் உள்ள திரில் போய்விடுகிறது. இந்த ஆட்டத்தில் உள்ள வீரமு89 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாம் போட்டியும் திகில் நிறைந்த சாகசமும் குறைந்து போகின்ற அளவில்தான் இது கொண்டு போகும்.

மற்றவர்கள் அதாவது குள்ளமானவர்கள் கையில் பந்து கிடைத்தால் குனிந்து கைநீட்டித்தானே பந்தெடுக்க முடியும்! அதுவும் கஷ்டம்தானே! அவரவருக்குரிய கஷ்டம் இருக்கத்தானே இருக்கிறது!

நான் உயரமாய் வளர்ந்திருக்கிறேன் என்றால் 'அது என்னுடைய தவறு அல்லவே! அது என்னுடைய குற்றம் இல்லையே என்று கூறும் இலியானாவின் கூற்று சரிதானே!

திறமையை வைத்து ஆட்டக்காரர்களைப்பிரிக்கின்ற காலம்போய், உயரத்தை வைத்துப் பிரிக்கின்ற காலமும் வந்துவிட்டது பார்த்தீர்களா! கூடைப் பந்தாட்டம் உயரமானவர்களின் ஆட்டம் என்ற கூற்று ஒன்று இருக்கிறது! அது இனி நிலைக்குமோ என்னவோ!