விவேகசிந்தாமணி 61-80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விவேகசிந்தாமணி[தொகு]

பாடல்: 61 (தாய்பகை)[தொகு]

தாய்பகை யன்புஅற் றாளேல் தந்தைபகை கடனாளி யானால்
பேய்பகை மனைவி நல்ல மதியினை யிழந்தா ளாகில்
வாய்பகை யறிவுண் டாக்கு மறநூலைக் கல்லா விட்டால்
சேய்பகை சிறுமைக் காகுஞ் செந்நெறி யொழுகா விட்டால்.


பாடல்: 62 (நிலைதளர்ந்திட்ட)[தொகு]

நிலைதளர்ந் திட்ட போது நீணிலத் துறவு மில்லை ??
சலமிருந் தகன்ற போது தாமரைக் கருக்கன் கூற்றம்
பலவன மெரியும் போது பற்றுதீக் குறவாங் காற்றே
மெலியுறு விளக்கே யாகில் மாறியே வாகுங் கூற்றம்.


பாடல்: 63 (மடுத்த)[தொகு]

மடுத்த பாவாணர் தக்கோர் மறையவ ரிறப்போர்க் கெல்லாம்
கொடுத்தெவர் வறுமை யுற்றார் கொடாது வாழ்ந்த வரியார் மண்மேல்
எடுத்து நாடுண்ட நீருமெ டாதகாட் டகத்து நீரும்
அடுத்த கோடையிலே வற்றி யல்லதில் பெருகுந் தானே.


பாடல்: 64 (உணங்கியொருகால்)[தொகு]

உணங்கி யொருகால் முடமாகி யொருகண் ணின்றிச் செவியிழந்து
வணங்கி நெடுவா லறுப்புண்டு மன்னு முதுகில் வயிறொட்டி
அணங்கு நலிய மூப்பெய்தி யகல்வா யோடு கழுத்தேந்தி
சுணங்கன் முடுவல் பின்சென்றால் யாரைக் காமன் துயர்செய்யான்.


பாடல்: 65 (கல்மனப்பார்ப்பார்)[தொகு]

கல்மனப் பார்ப்பார் தம்மைப் படைத்துக் காகத்தை யென்செயப் படைத்தான்
துன்மதி வணிகர் தம்மைப் படைத்துச் சோரரை யென்செயப் படைத்தான்
வன்மனவடுகர் தம்மைப் படைத்து வானரம் என்செயப் படைத்தான்
நன்மனை தோறும் பெண்ணைப் படைத்து நமனையு மென்செயப் படைத்தானோ.பாடல்: 66 (கொண்டுவிண்)[தொகு]

கொண்டு விண்படர் கருடன்வாய் கொடுவரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்டவன் தேரை
மண்டு தேரையின் வாயினி லகப்படு வண்டு
பண்டு தேனுக ரின்பமே மானிட ரின்பம்.


பாடல்: 67 (கற்பூரப்)[தொகு]

கற்பூரப் பாத்திகட்டிக் கத்தூரி யெருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு மதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்?
சொற்பேதை யருக்கறிவிங் கினிதாக வருமென்றே சொல்லி னாலும்?
நற்போதம் வாராதங் கவர்குணமே மேலாகி நடக்குந் தானே.பாடல்: 68 (மருவுசந்தனக்)[தொகு]

மருவு சந்தனக் குழம்பொடு நல்லணி நலம்பெற வணிந்தாலும்
சருவ சந்தேக மனமுள மாதரைத் தழுவலு மாகாதே
பருவ தங்கள்போல் பலப்பல நவமணிப் பைம்பொனைத் தந்தாலும்
கருவ மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டினுங் கூடாதே.பாடல்: 69 (தன்னைத்தான்)[தொகு]

தன்னைத்தான் புகழ்வோரும் தன்குலமே பெரிதெனவே தான்சொல் வோரும்
பொன்னைத்தான் தேடியறம் புரியாம லவைகாத்துப் பொன்றி னோரும்
மின்னலைப்போல் மனையாளை வீட்டில் வைத்து மினுக்கிசுகம் விரும்புவோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைக்கும் பேரு மறிவிலாக் கசடராமே.பாடல்: 70 (பெண்டுசொல்)[தொகு]

பெண்டுசொல் கேட்கின்ற பேயர்களே குணமூடப் பேடி யாவார்
முண்டைகளுக் கிணையில்லார் முனைவீர புருடரென மொழியொ ணாது
மண்ணுலக முதிப்பாருள் கீர்த்தியற மின்னதென வுணர்த லில்லார்
அண்டினவர் தமைக்கெடுப் பாரழிவழக்கே சொல்வத வரறிவு தானே.


பாடல்: 71 (வில்லதுவளைந்)[தொகு]

வில்லது வளைந்த தென்றும் வேழந்தா னுறங்கிற் றென்றும்
வல்லியம் பதுங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும்
புல்லர்தம் சொல்லுக் கஞ்சிப் பொறுத்தனர் பெரியோ ரென்றும்
நல்லதென் றிருக்க வேண்டா நஞ்செனக் கருத லாமே.


பாடல்: 72 (நிலமதில்)[தொகு]

நிலமதிற் குணவான் றோன்றி ணீள்குடித் தனரும் வாழ்வர்
தலமெலாம் வாசம் வீசுஞ் சந்தன மரத்துக் கொப்பாம்
நலமிலாக் கயவன் றோன்றி னக்குடி தேசம் பாழாம்
குலமெலாம் வெட்டிச் சாய்க்குங் கோடரிக் காம்பு போலாம்.


பாடல்: 73 (அருமையும்)[தொகு]

அருமையும் பெருமை தானு மறிந்துடன் படுவர் தம்மால்
இருமையு மொருமை யாகி யின்புறற் கேது வுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட் டவர்கள் நட்பால்
சிறுமையில் நரக மெய்து மேதுவே யாகு மன்னோ.


பாடல்: 74 (ஒருவனே)[தொகு]

ஒருவனே யிரண்டு தோற்ற மூன்பொதி யாகத் தோன்றும்
உருவமே யொன்றென் றாகு மருவமாய்ப் புகழென் றாகும்
மருவிய யாக்கை யிங்கே மாய்ந்திடு மற்று மாண்பு
திறமதா யுலக மேற்றச் சிறந்துபின் னிற்கு மன்றே.பாடல்: 75 (வேலியானது)[தொகு]

வேலி யானது பயிரை மேய்ந்தால்
கால னானவ னுயிரைக் கவர்ந்தால்
ஆல மன்னையர் பாலர்க் கருத்தினால்
மேலிட வோர்ந்திதை யார்கொலோ விலக்குவர்.பாடல்: 76 (அறம்கெடும்)[தொகு]

அறங்கெடும் நிதியுங் குன்று மாவியு மழியு மியாக்கை
நிறங்கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகிற் சேர்க்கும்
மறங்கெடு மறையோர் மன்னர் வணிகர்நல் உழவோரென்னுங்
குலங்கெடும் வேசி மாதைக் குலவிட விரும்பு வோர்க்கே.


பாடல்: 77 (காமமே)[தொகு]

காமமே குலத்தினையு நலத்தினையுங் கெடுக்க வந்த களங்கம்
காமமே தரித்திரங்க ளனைத்தையுந் தங்க வைக்குங் கடாரம்
காமமே பரகதிக்குச் சென்றிடாது வழியடைக்குங் கபாடங்
காமமே யனைவரையும் பகையாக்கிக் கழுத்தரியும் கத்தி யாமே.


பாடல்: 78 (அறங்கெடும்)[தொகு]

அறங்கெடும் நிதியங் குன்று மாவியு மழியு மியாக்கை
நிறங்கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகிற் சேர்க்கும்
மறங்கெடு மறையோர் மன்னர் வணிகர்நல் லுழவோ ரென்னுங்
குலங்கெடும் வேசி மாதைக் குலவிட விரும்பு வோர்க்கே.


பாடல்: 79 (காமமே)[தொகு]

காமமே குலத்தினையு நலத்தினையுங் கெடுக்கவந்த களங்கங்
காமமே தரித்திரங்க ளனைத்தையுந் தங்கவைக்குங் கடாரங்
காமமே பரகதிக்குச் சென்றிடாது வழியடைக்குங் கபாடங்
காமமே யனைவரையும் பகையாக்கிக் கழுத்தரியுங் கத்தியாமே.

பாடல்: 80 (கல்லாத)[தொகு]

கல்லாத மாந்தரையுங் கடுங்கோப மன்னரையுஞ் சாலத் தேர்ந்து
சொல்லாத வமைச்சரையுஞ் சுகந்தராத் தேவரையுஞ் சுருதி நூலில்
வல்லாத வந்த ணரையும் வரிந்தானுட னெந்நாளும் வலதுபேசி
நல்லாள்போ லருகிருக்கும் மனைவியையு மொருநாளும் நம்பொணாதே.


பார்க்க


விவேகசிந்தாமணி
விவேகசிந்தாமணி 41-60
விவேகசிந்தாமணி 81-100
"https://ta.wikisource.org/w/index.php?title=விவேகசிந்தாமணி_61-80&oldid=12464" இருந்து மீள்விக்கப்பட்டது