வைகையும் வால்காவும்/உலகின் உழவன் லெனின்
Appearance
உழுவார் உலகத்தார்க்கு ஆணி, அஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து என்று-உழுவார்
நலனே உழைப்பின் தலை என்று காத்தான்
உலகின் உழவன் லெனின்.
97
தொல்வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக
நல்குரவு என்னும் நசை அதனால்-இல்லாமை
இல்லாமல் செய்தான் பொதுமை வளம்பகுத்தான்
எல்லார்க்கும் தோழன் லெனின்.
98
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் ஏன்?-முரண்கொள்
இனப்போர்க்கு அரணாம், கொடுமைக்கு இடமாம்
கடவுளைக் காய்ந்தான் லெனின்.
99
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு எனல் சான்றாகக்
கோவரசு சாரின் கொடிறுடைத்தான் மக்கட்கோர்
காவரசு கண்டான் லெனின்.
100