வைகையும் வால்காவும்/வெற்றியுலகு ஆள்வோன்

விக்கிமூலம் இலிருந்து

வெற்றியுலகு ஆள்வோன்


அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண் என்று-நன்குணர்ந்து
போராடிப் பெற்ற புரட்சி உழைப்பாளர்
சீராரச் செய்தான் லெனின். 93

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன் என்று-பண்புடைமை
சேர்க்கும் பொதுவுடைமைச் செய்தொழில் யார்க்கும் என
ஆர்க்கும் அறிஞன் லெனின். 94

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர் என மன்பதை
காணவே சார்பொருள் கைக்கொண்டான் கார்ல் மார்க்கின்
மாணறம் காத்தான் லெனின். 95

ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள்வினையால் நீளும் குடி எனவே-மாள்வின்றிக்
குற்றம் இலனாகிக் கொள்கை அறம்காத்து
வெற்றியுல காள்வோன் லெனின். 96