உள்ளடக்கத்துக்குச் செல்

வைகையும் வால்காவும்/பீடரிது பெற்றான்

விக்கிமூலம் இலிருந்து

பீடரிது பெற்றான்


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் நாடித்-தாய்மகவு
இல்லம், உழைப்பாளர்க்குஓய்வு நலன், இன்பமனை
எல்லாம் வகுத்தான் லெனின். 89

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் இன்(று)-உலகில்
குடியரசும் கூட்டுடைமைக் கொள்கையும் காட்டும்
படிமை படைத்தான் லெனின். 90

இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல் என்ற- பொன்மொழிக்
கொப்பவே கோதிலறக் கோட்பாட்டை மானம்காத்து
ஒப்பவே காத்தான் லெனின். 91

பெருமை உடையவர் ஆற்றுவர், ஆற்றின்
அருமை உடைய செயல்;காண்!-உருசிய
நாடரிதாக் கொள்பொதுமை நானிலம் பின்நடக்கப்
பீடரிது பெற்றான் லெனின். 92