வைகையும் வால்காவும்/புகழ் விரும்பான்
Appearance
என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்; சான்று-வன்கொடிய
சாரும் அவனுள்ளம் சார்ந்தோரும் சாக்காட்டில்
சேர்ந்தெரியக் காய்ந்தான் லெனின்.
9
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண
விழுமம் துடைத்தவர் நட்பு-முழுமைபெறு
நூறாண்டின் மேலாய்ப் பொதுவுடமை நோற்றான்பல்
நூறாண்டும் வாழ்வான் லெனின்.
10
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும், உலகில் - மிக்க
உருசியநா டுண்மை , ஒழுக்கம், நல் கல்வி
தரும்பரிசாய்த் தந்தான் லெனின்.
11
நிலையில் திரியா(து) அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது- மலைபோல்
புகழ்மிகினும், தான்அப் புகழ்விரும்பான்; யார்க்கும்
இகல்அற் றமைந்தான் லெனின்.
12