வைகையும் வால்காவும்/பொதுவுடமை வையம்

விக்கிமூலம் இலிருந்து

பொதுவுடமை வையம்


தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்,என்ற-சொற்குக்
குருப்சுகயா காட்டென்று கொள்ளவே அன்பின்
திருமணம் கொண்டான் லெனின். 5

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது அன்றோ-மன்பதையில்
தன்னினும் தன்நாட்டு மக்கள் தகவுயர்த்தப்
பொன்நாட்டைச் செய்தான் லெனின். 6

அன்பிலார் எல்லாம்தமக்குரியார், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு எனும்-பொன்மொழியால்
கோனாட்சி வீழ்த்தித்தான் கொண்டவளம் மக்கட்கே
தானாட்சி தந்தான் லெனின். 7

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்,
மறத்திற்கும் அஃதே துணைஆம்-மறப்போர்
புரிந்தசெயல் எல்லாம் பொதுவுடைமை வையம்
தெரிந்துய்யத் தேர்ந்தான் லெனின். 8