வைகையும் வால்காவும்/பொதுமை நலன்

விக்கிமூலம் இலிருந்து

பொதுமை நலன்


இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு;-மருளாம்
பொருளைப் பொதுமை செயின் வேறுபாடு உண்டோ ?
கருதென்று வென்றான் லெனின். 37

தூங்காமை கல்வி துணிவுடைமை, இம்மூன்றும்
நீங்கா ‘நிலன்’ஆள் பவர்க்கு, நல்-பாங்கென்று
தீங்கரசை நீக்கித் திகழ் பொதுமைக் கூட்டமைக்கத்
தூங்காது உழைத்தான் லெனின். 38

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக; எனும்- சொற்குறுதி
காட்டவே மார்க்கு; ஏங்கேல், கற்றுக் கனவுலகைக்
காட்டினான் நாட்டில் லெனின். 39

எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு; எனும்- செவ்வி
உலகே! உணர்க'என உண்மைப் பொதுமை
நலமே நயந்தான் லெனின். 40