வைகையும் வால்காவும்/மக்கள் அரசு

விக்கிமூலம் இலிருந்து

மக்கள் அரசு


இவறலும், மாண்பிறந்த மானமும், மாணா
உவகையும் ஏதம் இறைக்குச்-சுவடு
பிரஞ்சுப் புரட்சி, உருசியப் புரட்சி
இரண்டும்காண் என்றான் லெனின். 41

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல், ஆகும்-வெற்றி என
மார்ககினைப் பேணி அன்பால் மக்கள் நோய் நீக்கியுயர்
சீர்பெற்றான் செம்மல் லெனின். 42

நல்லினத்தின் ஊங்குத் துணையில்லை, தீயினத்தின்
அல்லல் படுப்ப தூஉம் இல்; என்னும் சொல்லார்ந்து
மக்களர சேதுணையாய் மாசகற்றிக் கூட்டுடைமை
தக்கரசு தந்தான் லெனின். 43

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. என்னும் - எண்ணம்
புரட்சியின் ஒவ்வோர் நொடியும் போந்தன்றோ மக்கள்
அரசமைப்பில் வென்றான் லெனின். 44