வைணவமும் தமிழும்/வைணவ சமயத் தத்துவம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
9. வைணவ சமயத் தத்துவம்

திருமாலை முதற்கடவுளாகக் கொண்டு பல உயரிய கொள்கைகள் அடங்கிய பரந்த சமயமே வைணவ சமயம் ஆகும்.இச்சமயத்தின் கொள்கைகளை(1)தத்துவம், (2)இதம், (3) புருஷார்த்தம் என்று சுருக்கமாகக் கூறலாம். தத்துவங்கள் மூன்று. அவை சித்து, அசித்து ஈசுவரன் என்று வழங்கப் பெறுவன. சித்து என்பது, உயிர்களின் தொகுதி. அசித்து என்பது, மக்கள் விலங்கு முதலியவற்றின் உடம்பு முதலிய உலகப்பொருள்கள் எல்லாவற்றிற்கும் காரணமான பிரகிருதி என்பது. இதனை மூலப்பகுதி என்றும் வழங்குவர். ஈசுவரன், இறைவன், இவை மூன்றும் தத்துவத் திரயம் (திரயம் - மூன்று) என்ற பெயரால் வழங்கி வருகின்றன. தத்துவத் திரயம் என்ற ஒரு நூலும் உள்ளது. இது பிள்ளை உலக ஆசிரியர் என்பார் எழுதியுள்ள அஷ்டதசா இரகசியங்கள் (அஷ்டம்-எட்டு தசம்-பத்து) என்ற நூலில் ஒன்றாகும். அஷ்டதசா இரகசியங்கள் என்பதை பதினெட்டு இரகசியங்கள் என்று அருந்தமிழில் வழங்கலாம்.

1. சித்து

ஞானத்திற்கு இடமான ஆன்மா அல்லது உயிர் - சித்து என வழங்கப்பெறுகின்றது. இஃது அன்னமயம், பிராணமயம் மனோமயங்கட்கு அப்பாலாயிருப்பது. தேகம் இந்திரியங்கள், மனம், பிராணன், ஞானம் இவற்றிற்கு வேறுபட்டது. அறிகின்ற தலைவனும் அறிவும், அறியப்பெறும் பொருளும் தானாகவே ’‘இருப்பது. அணுவின் வடிவினையுடைய இந்த ஆன்மா ஆனந்த வடிவினைக் கொண்டது; என்றும் நிலை பெற்றிருப்பது. இது கண்முதலிய இந்திரியங்கட்குத் தோற்றாது; மனத்தாலும் இதனை நினைக்க முடியாது.இதனைப் பகுதிகளாகவும் பிரிக்க முடியாது; அவயவமும் அற்றது. வளர்தல், பருத்தல், குன்றுதல் முதலிய வேறுபாடுகள் இதற்கு இல்லை. அறிவு மயமாக இருக்கும் இந்த ஆன்மா அறிவுக்கும் இருப்பிடமானது. இந்த அறிவு ‘தர்மபூதஞானம்’ என வழங்கப்பெறும். இதனால் ஆன்மா ‘தர்மிபூதஞானம்’ என வேறொரு பெயராகவும் வழங்கப் பெறும். இந்தச் சீவான்மா தனக்கு எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருக்கும். தன்னைத் தான் என்று அறியும்பொழுது தர்மபூதஞானம் உதவ வேண்டும் என்பதில்லை. ஆனால் சீவான்மா தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தன் தர்மபூதத்தால் மட்டிலுமே அறிய முடியும். தன் சொரூபத்தைத் தர்மபூதஞானத்தைக் கொண்டும் அறியலாம். ஆன்மா இறைவன் ஏவியபடி நடப்பது, அவனால் தரிக்கப்பெற்று, அவனுக்கு அடிமையாகவே இருப்பது. இதனை நன்கு உணர்ந்த ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் இத்தன்மையை வெளியிட்டுள்ளனர். பூதத்தாழ்வார் “நேர்ந்தேன் அடிமை”[1] என்பார்;” “அவற்குப் அடிமைப்பட்டேன்”[2]என்று கூறுவர் பேயாழ்வார். திருமழிசையாழ்வாரோ “ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை”[3] என்று இக்கருத்தில் ஊற்றம் காட்டுவர். நம்மாழ்வார் தமக்கே உரிய தனி முறையில் “உறுவதாவது. திருக்குருகூர் அதனுள், குறிய மாண் உரு ஆகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே”[4] என்று அருளிச் செய்வர். ஆன்மா பற்றிய கருத்துகளை ஒருவாறு தொகுத்து திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் இவ்வாறு கூறுவர் :

          மாத வங்களென் றோத வங்களின்
              மருவு சிவனென் றொருவ! நீபெரும்
          பூத மல்லை; யிந்திரிய மல்லை:ஐம்
              புலனும் அல்லைநற்; புந்தி யல்லைகாண்;
          சீத ரன்பரந் தாமன் வாமனன்
              திருவ ரங்கனுக் கடிமை; நீயுனக்
          கேது மில்லை யென்றறி யறிந்தபின்
              ஈதின் மாதவம் இல்லை எங்குமே.”

[5]

இதில் தம் மனத்திற்குத் தாமே உபதேசிக்கும் முகத்தால் சீவன்மாவின் சொரூபம் இத்தன்மையது என விளக்குகின்றார் அய்யங்கார்.

சித்தின் வகை : சித்து எனப்படும் ஆன்மாவின் தொகுதியில் எண்ணற்ற சீவான்மாக்கள் உள்ளனர். இவர்களின் தொகுதி பத்தர் (தளைப்பட்டிருப்பவர்), முத்தர்’, நித்தியர் என்று மூவகைப்படுவர். இவர்களுள் ‘பத்தர்’ என்பவர் “மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய, காலமும் கணக்கும் நீத்த காரணனான”[6] பகவானின் மாயையில் மறைக்கப் பெற்ற சொரூபத்தையுடையவர்கள்; அநாதி அஞ்ஞானத்தால் நேடிய புண்ணிய பாவமாகிய வினைகளால் குழப்பெற்றவர்கள் அவரவர்களுடைய வினைக்குத் தக்கபடி மாறிமாறித் தேவ, மனித, விலங்கு, தாவர வடிவங்களைப் பெற்று
துக்கபரம்பரைகளை அநுபவிக்கும் சம்சாரிகளாவர். “முத்தர்” என்பவர் இவ்வுலகத்தளைகள் கழிந்து பரமபதத்தில் பகவதநுபவ கைங்கரிய போகரானவர்கள். நித்தியர் என்பவர், ஒருநாளும் சம்சார சம்பந்த உறவு இல்லாத அனந்தன் (ஆதிசேடன்) சேனைமுதலியார் (விஷ்வக்சேனர்), பெரிய திருவடி(கருடன்) தொடக்கமானவர்கள். இவர்களை வேதாந்த தேசிகர்,

        பல்வினை வன்கயிற் றால்பந்த
            முற்றுழல் கின்றனரும்
        நல்வினை மூட்டிய நாரண
            னார்பதம் பெற்றவரும்
        தொல்வினை என்றுமில் லாச்சோதி
            வானவ ருஞ்சுருதி
        செல்வினை யோர்ந்தவர் சீவரென்
            றோதச் சிறந்தனமே7

என்று எடுத்துக்காட்டுவர் “கர்மங்களால் கட்டுப்பட்டவர் பத்தர், எமபெருமான் சந்நிதியை (பரமபதத்தை) அடைந் தவர்கள் முத்தர் அநாதியான கர்மபந்தம் இல்லாதவர்கள் நித்தியசூரிகள்” என்கின்றார்.

2. அசித்து :
'அசித்து' என்பது அறிவில்லாத பொருள். அசித்தினால் கிடைக்கக்கூடிய பொருள்களை அதுபவிப்பவர்கள் சீவான் மாக்களே. அசித்து விகாரத்திற்கு இடமானது. ஒருபொருள் ஒரு நிலையினின்றுப் பிறிதொரு நிலையை அடைவதுதான் விகாரம் என்பது. அஃதாவது, அசித்து முன்னைய நிலையை

7. தே. பி. 26 விட்டு வேறுவேறு நிலைகளை அடைவதாகின்ற வேறுபாட்டிற்கு இடமாக இருக்கும். அசித்தில் ஞானத்திற்குச் சிறிதும் இடம் இல்லை. இந்த அசித்தைச் சுத்த சத்துவம், மிச்ர தத்துவம்’, ‘சத்துவசூனியம்’ என்று மூன்று வகையாகப் பிரித்துப் பேசுவர் மெய்விளக்க இயலார்

(அ). சுத்த சத்துவம் : இராசச தாமச குணங்கள் கலவாதது. ஆதல், அழிதல் இல்லாதது; என்றும் நிலைபெற் றிருப்பது. இது ஞானத்தையும், ஆனந்தத்தையும் உண்டாக்கக் கடவதாக இருக்கும். இறைவனின் அநுபவத்தின் பொருட்டே உண்டான இச்சையாலே நித்திய விபூதியில் (பரமபதத்தில்) விமானம், கோபுரம், மண்டபம், உப்பரிக்கை முதலிய வடிவுடன் தோற்றம் கொள்ளும், தீ, கதிரவன் முதலிய ஒளியுள்ள பொருள்களும் மின்மினிக்கு ஒப்பாம்படி அளவிறந்த வடிவினைக் கொண்டது. இது நித்தியர், முத்தர், ஈசுவான் இவர்களாலும் அளவிடற்கு அரியது, கண நேரத்திற்குக் கணநேரம் முன்பில்லாத வியப்பினை உண்டாக்க வல்ல தாகவும் இருக்கும். நித்தியர், முத்தர், ஈசுவரன் இவர்கள் ஞானத்தால் தன்னை அறியவொண்ணாதபடி ஒளி விட்டுத் திகழும். ஆயினும் சம்சாரிகட்கு அங்கனம் தோற்றாது. இது வைகுந்தத்திலிருந்து மேலே எல்லையின்றி எங்கும் பாவி நிற்கும் தன்மையுடையதாக இருக்கும்.

(ஆ). மிச்ரதத்துவம்: இதுவே மூலப்பிரகிருதி என்பது இது சாத்துவிகம், இராசசம், தாமசம் என்னும் மூன்று குணங்களையுடையது. ஆதலின் இத்தத்துவம் 'திரிகுணம்' என்ற திருநாமத்தாலும் வழங்கும். இவற்றுள் சத்துவ குணமானது ஞானத்தையும், சுகத்தையும் நல்கி அந்த ஞான

சுகங்களாகின்ற இரண்டிலும் ஆசையை உண்டாக்கும். இராசச குணமானது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர்கொள்ளும் ஆசையையும் சுவை, ஒளி முதலான ஐம்புலன்களால் உண்டாகும் இன்பங்களில் ஆசையையும், உழவு, வாணிகம் முதலிய தொழில்களில் ஆசையையும் உண்டாக்கும். தமோகுணமானது விபரீத ஞானத்தையும் சோம்பலையும் தூக்கத்தையும் உண்டாக்கும். இந்த முக்குணங்கள் சமமான நிலையில் உள்ளபோது பிரகிருதியின் விகாரங்கள் நாமரூப விசேடம் இல்லாமல் பிரமாணங்களால் காணக்கூடாதபடி அதிசூக்குமங்களாக இருக்கும் (இதுவே மகாப்பிரளய நிலை யாகும்). இந்தக் குணங்கள் ஏற்றத் தாழ்வை அடையுங்கால் இந்தப் பிரகிருதி பலவித தத்துவங்களாக மாறி நாமரூப விசேடத்தை உடையனவாகும். இவை பிரமாணங்களால் காணக் கூடியவை. இந்த மூன்று குணங்களுள் சாத்துவித குணத்தை யுடையவனுக்கு வீடணனையும்,இராசசகுணத்தை 6761) லுக்கு இராவணனையும், தாமசகுணம், உடையவனுக்கு கும்பகரு ணனையும் எடுத்துக்காட்டுகளாகக் கொள்வர் தவத்திரு சித்பவானந்த அடிகள்.

இந்த மூன்று குணங்களும் சேர்ந்த நிலையில் கர்மவான் களாகிய சம்சாரியினுடைய ஞானம் ஆனந்தம் இவற்றிற்கு மறைவை உண்ட ாக்கும். அதுவல்லாததனை அதுவாக நினைக்கும் விபரீத ஞானத்தையும் உண்டாக்கும். ஆன்மா அல்லாத உடலை ஆன்மா எனக் கொள்ளல், இறைவனுக்கு அடிமையாக உள்ள ஆன்மாவை சுதந்திரமானது எனக் கருதுதல், ஈசுவரன் அல்லாதவர்களை ஈசுவரனாகக் கருதுதல், புருஷார்த்தம் அல்லாத கைவல்யார்த்திகளையே புருஷோர்த்த மாகக் கொள்ளல், உபாயமல்லாதவற்றை உபாயமாகக் கொள்ளல் போன்றவை விபரீத ஞானத்திற்கு எடுத்துக் காட்டுகளாகும். இன்னும் இத்தத்துவம் ஆதல் அழிதல் இல்லாதது. இஃது ஈசுவரனுடைய உலகப் படைப்பு முதலியவற்றிற்கு விளையாட்டுக் கருவியாக அமைந்து ஏற்றத்தாழ்வு உள்ள இடம், ஏற்றத்தாழ்வு அற்ற இடம் என்ற இடவேறுபாட்டாலும், அழிக்குங்காலம் படைப்புக்காலம் என்ற இரண்டு வகையான காலவேறுபாட்டாலும் சூக்கும விகாரங்களையும் துல விகாரங்களையும் உண்டாக்கும் தன்மையது. -

இந்த மிச்ர தத்துவம் இருபத்து நான்கு வடிவங்களாக இருக்கும். அதாவது சீவான்மாவைப் பூரிக்கும்படிச் செய்ய வல்ல சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்ற புலன்கள் ஐந்தும், மெய், வாய்கண், செவி,மூக்கு ஆகிய பொறிகள் ஐந்தும்; வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் ஆகிய கருமேந்திரியங்கள் ஐந்தும்; மண், நீர், எரி, கால், ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்தும்; இங்குள்ள இந்த ஆன்மாக்கள் பொருந்தியுள்ள மூலப்பிரகிருதி ஒன்றும்; மகத் (மான்) தத்துவம் ஒன்றும், அகங்காரத் தத்துவம் ஒன்றும் மனம் ஒன்றும் என இருப்பத்து நான்காம் அசித்தின் இந்த இருபத்து நான்கு தத்துவங்களையும் கலந்துதான் ஈசுவரன் தானாகாவும்,நான்முகன் மூலமாகவும் இந்த அகிலத்தைப் படைக்கின்றான்.

இத் தத்துவங்களை வடமொழியிலுள்ள முதல் 24 எழுத்துகள் குறிக்கின்றன. எவ்வாறெனில், க. இனத்தைச் சேர்ந்த ஐந்து எழுத்துகளால் பூதங்கள் ஐந்தும்; ‘ச இனத்தைச் & 5 சார்ந்த ஐந்து எழுத்துகளால் கருமேந்திரியங்கள் ஐந்தும்;' இனத்தைச் சேர்ந்த ஐந்து எழுத்துகளால் ஞானேந்திரியங்கள் ஐந்தும்; த இனத்தைச் சார்ந்த ஐந்து எழுத்துகளால் ரூபம், சத்தம், மணம், சுவை, ஸ்பர்சம் (ஊறு) ஆகிய ஐந்தும் ‘ப’ இனத்தைச் சார்ந்த முதல் நான்கு எழுத்துகளால் மனம், அகங்காரம் மகத் தத்துவம், மூலப்பிரகிருதி ஆகிய நான்கும்: இவ்வினத்தைச் சார்ந்த 25-ஆம் எழுத்தாகிய மகாரத்தால் ஆன்மாவும் சொல்லப் பெறுகின்றன.

படைப்பு வகைகள் : எம்பெருமான் அண்டத்தைப் படைத்து அதற்குள் நான்முகனைப் படைத்தல் சமஷ்டி’ சிருஷ்டி என்று வழங்கப்பெறும் இதனை அத்வாரக'சிருஷ்டி’ என்றும் கூறுவர். நான்முகன் வாயிலாக இந்த அண்டத்திற்குட் பட்டபதினான்கு உலகங்களையும் தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் முதலியவற்றைப் படைத்தல் வியஷ்டிசிருஷ்டி எனப்படும். இது சத்வராக சிருஷ்டி எனவும் வழங்கப்பெறும். நான்முகனுடைய முகம், புயம் துடை, கால்களில் முறையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப் பிறந்த சத்துவ இராசச, தாமசகுனங்களை உடையவரான சேதநர்களைப் படைத்தல் மிச்ரசிருஷ்டி என்று கூறப்பெறும்.

அண்டங்கள் : இவை அசித்தின்பாற்பட்டவை. எம்பெருமான் படைத்த அண்டங்கள் எண்ணிறந்தவை.

          அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
          அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
          ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகளின்
          நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

என்று மணிவாசகப் பெருமான் கூறியுள்ளதை நினைவு கூரலாம். பாரதியாரும் ,

         நக்க பிரானருளால்-இங்கு
             நடைபெறும் உலகங்கள்- கணக்கிலாம்!
         தொக்கன அண்டங்கள்- வளர்
             தொகைபல கோடிபல் கோடிகளாம்!
         இக்கணக் கெவரறிவார்-புவி
             எத்தனை யுளதென்ப தியாரறிவார்!
         நக்க பிரானறிவான்;- மற்று
             நானறியேன்பிற நரரறியார்?

என்று கூறியுள்ளதை நினைவு கூர்ந்து மகிழலாம்.

அண்டங்கள் அமைப்பு வருமாறு : கீழ் அண்ட கபாலத்தின்மேல் எண்பத்துமூன்றரை (83%) இலட்சம் யோசனை உயரம் உள்ளது கர்ப்போதகம். இதன் மேல் ஒவ்வொன்றும் பதினாயிரம் யோசனை உயரமும் அகலமும் உள்ள அதலம், விதலம், நிதலம், தராதலம், மகாதலம்,சுதலம், பாதளம் என்ற பெயர்களையுடைய ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றின்மீது மனிதர்கள் வாழும் பூலோகம் உள்ளது. இஃது எழுபதினாயிரம் யோசனை அகலமுடையது. இதில் ஏழு தீபங்களும், ஏழு மாக்கடல்களும், ஏழு குலபர்வதங்களும் அடங்கியிருக்கும். இந்த உலகிற்குமேல் சூரியனுக்குக்கீழ் நூறாயிரம் யோசனை உயரமுடையதாய் இருப்பது புவர் லோகம். இதில் கந்தர்வர்கள் வசிப்பர். சூரியனுக்குமேல் துருவனுக்குக்கீழ் பதினான்காயிரம் யோசனை உயரத்தி லுள்ளது ‘சுவர்லோகம். இதில் நட்சத்திரங்கள், கிரகங்கள்,
9. பா.க.தோ.பா. கோமதியின் மகிமை-(4-5) இந்திரர் முதலியோர் வசிப்பர். துருவனுக்குமேல் ஒரு கோடி யோசனை உயரமுள்ளதாக இருப்பது மகர்லோகம்”. இதில் அதிகாரத்திலிருந்து விடப்பட்டவரும், அதிகார அபேட்சித ருமான இந்திரர் முதலியோர் இருப்பர். இந்த உலகிற்குமேல் . இரண்டு கோடியோசனை உயரத்திலிருப்பது ஜனர்லோகம். இதில் சனகர் முதலிய பரமயோகியர் வசிப்பர். ஜனர் லோகத்திற்குமேல் எட்டுக்கோடியோசனை உயரத்திலிருப்பது ‘தபோலோகம் ஆகும்.இதில் வைராக்கியரான பிரஜாபதிகள் வசிப்பர், தபோலோகத்திற்குமேல் நாற்பத்தொரு கோடி யோசனை உயரமுள்ளது சத்தியலோகம். இங்குத்தான் நான்முகன், விஷ்ணு, சிவன் இவர்கள் வசிப்பர்.

இந்தப் பதினான்கு உலகங்களையும் கோடி யோசனை எடுப்புள்ள அண்டகடாகமும், அதை அதனினும் பதின்மடங்கு அதிகமான ஜலதத்துவமும்,அதனை அதனினும் பதின்மடங்கு அதிகமான தேஜஸ் தத்துவமும், அதை அதனினும் அதிகமான வாயு தத்துவமும், அதை அதனினும் பதின்மடங்கு அதிகமான ஆகாய தத்துவமும், அதை அதனினும் பன்மடங்கு அதிகமான அகங்கார தத்துவமும், அதை அதனினும் பதின்மடங்கு அதிக மான மகத் தத்துவமும், அதை அளவிறந்ததாயும் பதின்மடங்கு அதிகமானதாயும் உள்ள அவ்யக்தமும் அதாவது மூலப் பிரகிருதியும் ஆவரித்துக் கொண்டிருக்கும். ஆக, இப்படி கடாகாவரணம், அக்கினி ஆவரணம், வாயுவாவரணம், . ஆகாயவாவரணம், அகங்காரஆவரணம், மகத்ஆவரணம், அவ்யக்தாவரணம் என ஏழு ஆவரணங்களாலும் இந்தப் பதினான்கு உலகங்களும் சூழப்பெற்றிருக்கும். சிறார்கட்கு விளையாட்டுக்குரிய பந்து போலே பகவானுக்கு இந்த உலகங்கள் விளையாட்டுக்குரிய கருவிகளாக இருக்கும்.மேலும் இவை ஒவ்வொரு படையாக வைத்து வீடு கட்டுவது போல ஒவ்வொரு அண்டமாகப் படைக்கப்பெறாமல் நீர்க்குமிழிகள் போல் ஒரே காலத்தில் பகவானுடைய சங்கற்பத்தினால் படைக்கப் பெறும்.

(இ).சத்துவ சூனியம்: இதுவே அசித்தின் இரண்டாவது பகுதியாகிய காலத்தத்துவமாகும். காலம் என்பது எங்கும் பரந்து நிற்கும் ஒரே திரவியம். இதில் சாத்துவிகம், இராசசம், தாமசம் என்ற முக்குணங்கள் இல்லை. எதிர்நிகழ், கழிவு என்ற காலநிலைகட்கு இதுவே காரணமாகும். காலம் என்பது விநாடி நிமிடம், நாழிகை, முதல் பரார்த்தம் வரையிலுள்ள பகுதிகளைக் கொண்டது. "நிமிடம் பதினைந்து கொண்டது காஷ்டை, காஷ்டை முப்பது கொண்டது கலை; கலை, முப்பது கொண்டது முகூர்த்தம் முகூர்த்தம் முப்பது கொண்டது.நாள்; நாள்முப்பது கொண்டது மாதம் மாதம் இரண்டு கொண்டது. இருது; இருது மூன்று கொண்டது அயனம், அயனம் இரண்டு. கொண்டது ஆண்டு; பரார்த்தம்"

இங்ஙனம் மனித ஆண்டு 360 கொண்டது. தேவ ஆண்டு; தேவ ஆண்டு 12,000 கொண்டது ஒரு சதுர்யுகம், 71 சதுர்யுகம் கொண்டது. ஒரு மந்வந்தரம் 14 மந்வந்தரம் கொண்டது 1000 சதுர்யுகம். இது நான்முகனுக்கு ஒரு பகல் 2000 சதுர்யுகம் நான்முகனுக்கு ஒருநாள். இந்த நாட்களால், மாதம், வருடங்களைப்பெருக்கி அந்த வருடங்கள் 100 ஆனால் நான்முகன் ஆயுள் முடியும். இதற்குப் 'பரம்' என்று பெயர். இங்ஙனம் பல்வேறு வடிவாகத் தோன்றக் கடவதாய், ஆதி, அந்தம் அற்றதாய், ஈசுவரனுடைய உலகப் படைப்பு, அளிப்பு, அழிப்பு - ஆகிய விளையாட்டுக் கருவியாய் ஈசுவரனுக்குச் சரீரமாக அமைந்தது இக் காலத் தத்துவம். இவ்வாறு காலத்தின் கூறுகளை பராசரபகவான் விஷ்ணுபுராணத்தில் பேசுவர். ஆதியும் அந்தமும் இல்லாத இக்கால நியமத்திற்கு உட்பட்டே இக்கர்ம லோகத்திலுள்ள மாறுபாடுகள் எல்லாம் எம்பெருமான் சங்கற்பத்தினால் நடைபெறுகின்றன. காலம் நித்திய விபூதியில் (பரமபதத்தில்) நித்தியம். இந்த லீலா விபூதியில் (நம் உலகத்தில்) காலம் அநித்தியம், அதாவது பரமபதத்தில் காலம் நடையாடாது; இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற நிலைகள் அங்கு இல்லை; ஆகவே, நித்தியம், ஆனால் முன்பின் என்ற அளவிற்கு வேறுபாடு உண்டு. ஆயினும், அதன் சம்பந்தம் இன்றி அனைத்தும் எம்பெருமானது சங்கற்பத்தில் மட்டும் நடைபெறுவனவாகும். இந்த உலகில் இஃது அநித்தியமாதலால் இறப்பு, நிகழ்வு எதிர்வு என்ற பேச்சு உண்டு. இந்தக் காலம் ஈசுவரப்படைப்பின் பரிணாமங்கட்குக் காரணமாய், அவனுடைய படைப்பு அளிப்பு, அழிப்பு ஆகிய விளையாட்டுக் கருவியாய்ப் பயன்படுகின்றது.

சித்து, அசித்து என்ற தத்துவங்கள் எம்பெருமான் திருமேனியில் அடங்கியிருக்கும் நிலையை வேதாந்த தேசிகர். அழகாகப் பாசுரம் இட்டுக் காட்டுவர்.

         புருடன்மணி வரமாகப் பொன்றாமூலப்
         பிரகிருதி மறுவாக மான்தண் டாகத்
         தெருள்மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கள்
         சார்ங்கஞ்சங் காகமனம் திகிரி யாக
         இருடிகங்கள் ஈரைந்தும், சரங்க ளாக
         இருபூத மாலைவன மாலை யாகக்
         கருடன்உரு வாம்மறையின் பொருளாங்கண்ணன்.

. . . . . . . . . . . . . . . . . . . . . . .

10. தே.பி.80 இதில் கருடனுடைய உடலாக நிற்கின்ற வேதத்தின் பொருளாகவுள்ள எம்பெருமான் திருமேனி காட்டப் பெறுகின்றது. சீவன் இரத்தினங்களுள் சிறந்த கெளஸ்த்துவ இரத்தினமாகவும், அழியாத மூலப்பிரகிருதி ரீவத்ஸம் என்னும் மறுவாகவும், மகாந் என்றும் தத்துவம் கெளமோதகி - என்னும் கதையாகவும், ஞானம் ‘நந்தகம் என்னும் கத்தி யாகவும், அஞ்ஞானம் கத்தியின் உறையாகவும் தாமசாகங் காரம்'சார்ங்கம்’ என்னும் வில்லாகவும், சாத்துவிகஅகங்காரம் பாஞ்சசன்னியம்’ என்னும் சங்காகவும், மனம் என்னும் தத்துவம் “சுதர்சனம்’ என்னும் சக்கரமாகவும், ஞானேந் திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும்,அம்புகளாகவும், தந்மாத்திரைகள் ஐந்தும், பூதங்கள் ஐந்தும் ஆகியவற்றின் வரிசை'வனமாலையாகவும் எம்பெருமானின் திருமேனியில் இருப்பதை அழகாகக் காட்டுவர் சுவாமிதேசிகன்.

3. ஈசுவரன் :

சீமந் நாராயணனே சர்வேசுவரன். இவன் எப்பொழுதும் மாறுபடாத் தன்மையுடையவன். சத்தியம், ஞானம், ஆனந்தம், அனந்தம் இவற்றின் சொரூபமாக இருப்பவன். இடத்தாலும் காலத்தாலும் அளவிடப்பெறாதவன். மூன்றுவித சேதந. அசேதந பரிமாண ரூபமான வேறுபாட்டின் குறைகள் தட்டாதவன். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்குவித பலன்களையும் உயிர்கட்கு நல்கி அவற்றின் புகலிடமாக இருப்பவன். தன் சொரூபத்தாலும் திருமேனியாலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். ஞானம் சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம் தேஜஸ் முதலிய மங்களக் குணக் கூட்டங் களால் அலங்கரிக்கப்பெற்றவன். அவனிடம் இக்குணங்கள் ஆதல் அழிதல் இன்றி எப்பொழுதும் நிறைந்திருக்கும். இவற்றைத் தவிர, வாத்சல்யம், செளசீல்யம், செளலப்பியம் முதலிய எண்ணற்ற குணங்களையும் கொண்டவன்.

இந்தப் பூவுலகில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் காரணபூதன், அனைத்திற்கும் ஆதாரமானவன்; அனைத்தையும் அடக்கி ஆள்பவன்; அனைத்தினுடைய பலனையும் அநுபவிப்பவன். தன்னை அடைந்தவருடைய எல்லா வினைகளையும் போக்குபவன். சகல வேதங்களாலும் போற்றப்படுபவன். சகல கர்மங்களாலும் தானே ஆராதிக்கப் பெற்று பலன்களைத் தருபவன். நான்முகன் முதலிய சகல தேவர்களையும் படைப்பவன். அவர்கள் அனைவரும் இவனுடைய கட்டளைக்கு அடங்கி நடப்பவர்களே. இந்த லீலாவிபூதியில் (உலகில்) உயிர்களைத் தம் வினைகட்கேற்ப உடல்களை அடைவதற்கும், பிறகு அவை வீடுபேறு அடைவதற்கும் இவனே காரணன். இவன் விரும்பிப் பெற முடியாதது ஒன்றும் இல்லை.

நித்திய விபூதியாகிய பரமபதத்தில் இவனுக்கெனத் தனியான திருமேனி உண்டு. அஃது ஈடும் எடுப்பும் அற்ற பேரொளியினை உடையது. பேரழகு வாய்ந்து, கண்டாரை ஈர்ப்பது; யோகியரின் தியானத்திற்கு ஏற்றது. அந்த உருவத்துடன் பெரிய பிராட்டியார், பூமிப்பிராட்டியார், நீளாதேவி ஆகியோருக்கு நாயகனாக இருப்பவன்.

ஐந்து நிலைகள் : இறைவனுடைய திருமேனி (திவ்விய மங்கள விக்கிரகம்) பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யா மித்துவம், அர்ச்சை என்ற ஐந்து வகையோடு கூடியிருக்கும். (அ) பரத்துவம் : இது நித்திய விபூதியில் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் நீளாப்பிராட்டியார் என்ற மூன்று தேவிமார்களைக் கொண்டிருக்கும் இருப்பு பஞ்சாயுதங்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் இருப்பு மாகும். ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்ற ஆறு திருக்குணங்களும் இவனுக்கு உண்டு. இவனைப் ‘பரவாசுதேவன் என்ற திருப்பெயரால் வழங்குவர்.

(ஆ) வியூகம் : இது லீலாவிபூதியில் (இந்த உலகில்) அதன் படைப்பு, அளிப்பு, அழிப்பு இவற்றை நடைபெறச் செய்வதற்காகவும் சம்சாரிகட்கு வேண்டியவற்றை ஈந்து வேண்டாதவற்றைப்போக்கி அவர்களைக் காத்தற்பொருட்டும் மோட்சத்தை விரும்பி. தன்னை இடைவிடாது நினைப்பவர் கட்கு (உபாசிப்பவர்கட்கு) அவர்தம் தளைகளைப் போக்கித் தன்னை வந்து அடைவதற்குக் காரணமான பேரருளைச் சுரப்பதற் காகவும் வியூகம் “வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்நன், அதிருத்தன்” என்ற பெயர்களுடன் இருக்கும் இருப்பாகும்.

(i) வாசுதேவர் : இவர் வியூக வாசுதேவன் என்று வழங்கப் பெறுவார். வாசுதேவரூபமான பரத்துவத்தில் இருப்பது போல இவரிடமும் ஞானம், சக்தி பலம், ஐசுவரியம், வீரியம்,தேஜஸ் என்ற ஆறு குணங்களும் நிறைந்திருக்கும். ஏனைய மூன்றில் அவரவர் மேற்கொண்ட செயலுக்குத் தக்கவாறு ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு குணங்கள் விளக்கமாக இருக்கும். படைக்கப்பெற்ற சேதநர்களைக் காத்தற் பொருட்டு, தேவர் முதலியவர்கட்கு ஆபத்து நேரிட்டகாலத்துச் சென்று அறிவிக்கலர்ம்படி அவதாரங்கட்கெல்லாம் நாற்றங்காலான திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மீது உலகப் பாதுகாப்பில் சிந்தை செலுத்தி உறங்குவான்போல் யோகத்தில் ஆழ்ந்து கிடப்பார் இந்த வியூகாவதாரங்களைப் பற்றிய குறிப்புகளை ஆழ்வார் பாசுரங்களில் காணலாம்.

(ii) சங்கர்ஷணர் : ஞானம், பலம் என்ற இரண்டு குணங்களோடு கூடியிருப்பார். இவர் பிரகிருதிக்குள் உயிர்த் தத்துவத்திற்குத் தலைவனாகி நிற்பார். இந்தத் தத்துவத்திற்குப் பிரகிருதியினின்றும் வேறாக்கி பிரத்யும்நர் நிலையை அடைந்து வேதம் முதலிய சாத்திரங்களை வெளியிடுவார். உலக அழிப்பிற்கும் காரணமாக இருப்பவரும் இவரேயாவார்.

(iii) பிரத்யும்நர் : இவர் ஐசுவரியம், வீரியம் ஆகிய இரண்டு குணங்கள் பொருந்தியிருப்பவர். இவர் ஞானத்திற்கு ஊற்றுவாயான மனம் என்ற தத்துவத்திற்குத் தலைவராக இருப்பார்.மேலும் இவர் சாத்திரமுறைப்படி ஒழுக வேண்டிய தர்மோபதேசத்தையும் சுத்தவர்க்க சிருஷ்டியையும் செய்பவ ராக இருப்பார்.

(iv)அநிருத்தர்: சக்தி,தேஜஸ் என்ற இரண்டு குணங்க ளோடும் கூடியவர். இவர் உலகப் பாதுகாப்பிற்கும் உயிர்கள் ஈடேறுவதற்கும் தகுதியான தத்துவஞானங்களைக் கொடுத் தற்கும் காலப் படைப்பிற்கும் மிச்ரவர்க்க சிருஷ்டிக்கும் உரியவராக இருப்பார்.

கிளை வியூகங்கள் : மேற்குறிப்பிட்ட நான்கு வியூகங்கள் ஒவ்வொன்றும் மும்மூன்றாகப் பன்னிரண்டு கிளை வியூகங்களாகப் பிரிந்து நிற்கும். வியூக வாசுதேவரிடத் தினின்று கேசவன், நாராயணன், மாதவன் என்ற மூவரும் பிரிவர். சங்கர்ஷணரிடத்திருந்து கோவிந்தன், விஷ்ணு, மதுகுத்ணன் என்ற மூவரும் தோன்றுவர். பிரத்தியும்னரிடத்தி னின்று திரிவிக்கிரமன், வாமனன், சிரீதரன் ஆகிய மூவரும் பிரிந்து நிற்பர். அநிருத்தரிடத்தினின்று இருடிகேசன், பதுமநாபன், தாமோதரன் என்ற முவரும் பிரிவர்.இவர்களைப் பற்றிய குறிப்பு:திருவாய்மொழியில் பன்னிரு திருநாமப்பாட்டு’ ஒன்பதில் காணலாம். வேதாந்த தேசிகரும் பன்னிருதிருநாமம் என்ற தலைப்பில் ஒரு பிரபந்தம்’ அருளிச் செய்துள்ளார்.

(இ) விபவம் : இது அவதாரங்களைப் பற்றிக் கூறுவது. இவை ஆவேச அவதாரம்,முக்கிய அவதாரம் என்று இரு வகையாகப் பகுத்துப் பேசப்பெறும் ஆவேச அவதாரத்தைக் கெளணாவதாரம் என்றும் வழங்குவர். முக்கிய அவதாரம் சாட்சாத் அவதாரம் என்றும் கூறப்பெறும். -

(i) ஆவேச அவதாரம் : ஆவேச அவதாரத்தில் கபிலர், தத்தாத்ரேயர், பரசுராமன் போன்ற அவதாரங்கள் அடங்கும். இவற்றுள் ஆவேச அவதாரங்களில் அகங்காரத்துடன் கூடிய சீவர்களை ஈசுவரன் ஒரு காரியத்தின் பொருட்டு ஆவேச முகத்தால் அதிட்டித்து நிற்கையாலேஇவை புயூட்சுகளுக்கு” உபாசிக்கத் தக்கவையேயன்றி முமுட்சுகளுக்கு உபாசிக்கத் தக்கவை அல்ல. -

(ii) முக்கிய அவதாரம் : இதில் “ஆதிஅம்சோதியுருவை

அங்கு வைத்து இங்குப் பிறந்த” இராமர், கிருஷ்ணர், வாமன திரிவிக்கிரமர் முதலான மனித அவதாரங்களும்“மச்சம் கூர்மம்

11. திருவாய்-2.7

12. தே.பி. (286-292)

13. முமுச்சுகள்-மோட்சத்தில் விருப்பமுள்ளவர்கள் புயூட்சுகள்-உலகாயதர்

14. திருவாய் 3, 5:5 வராகம்” போன்ற திர்யக் (= விலங்கு) அவதாரங்களும் குப்ஜாமரம்(குட்டைமாமரம்) முதலான தாவரவடிவங்களும் அடங்கும். முக்கிய அவதாரங்கள் யாவும் ஒரு விளக்கினின்றும் கொளுத்திய மற்றொரு விளக்கு தனக்குக் காரணமான விளக்கின் தன்மைகளைப் பெற்றிருக்குமாப்போலே அசாதாரண விக்கிரகத்தின் தன்மையைக் கொண்டிருத்தலால் முமுட்சுகளுக்கு உபாசிக்கத் தக்கவையாக அமைகின்றன.

இந்த இரண்டு வகை அவதாரங்களும் எம்பெருமானின் இச்சையாலே ஏற்பட்டவையாகும். ஈசுவரனின் அவதாரங் களின் பலன் அடைந்தாரைக் காத்தல் அவர்தம் விரோதிகளைப் போக்கல், வைதிக தருமத்தை நிலைநிறுத்தல்15 ஆகிய மூன்றுமாகும்.

(ஈ) அந்தர்யாமித்துவம் : சேதநர்களின் உள்ளே புக்கிருந்து அவர்களுடைய எல்லாச் செயல்கட்கும் தான் ஏவுபவனாக இருக்கும் நிலையாகும். அதாவது நல்வினை காரணமாக துறக்கம் அடைதல். தீவினைகாரணமாக நரகம் புகுதல்,நல்வினை தீவினைகளாகிய இரண்டின் காரணமாக கருப்பத்தில் புகுதல் முதலிய TT நிலைகளிலும் எல்லாச் சேதநர்க்கும் ஆன்மாவிற்குள்ளே தனது சொரூபத்தாலே வியாபித்து நின்று அவர்கட்குத் துணையாய் அவர்களை ஒருகாலும் விடாமல் அந்தராத்மாவாய் இருக்கும் இருப்பே இது. சேதநர்க்குத் தியானருசி பிறக்கும்போது தியானத்திற்கு உரியவனாதற்காகவும் அவர்களைக் காப்பதற்காகவும் அழகே வடிவெடுத்தாற்போன்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பெற்றவனாய்ப் பெரிய பிராட்டியரோடு கட்டை விரல் அளவாய் (அங்குஷ்ட
15. கீதை 4:8 பிரமாணமாய்) எழுந்தருளியிருக்கும் இருப்பே இந்த நிலையாகும். இது விக்கிரக வியாப்தியாகும்.

(உ) அர்ச்சாவதாரம் : அடியார்கள் எதைத் தமக்குத் திருமேனியாகக் கொள்ளுகின்றார்களோ அதனையே இறைவன் தனக்கு வடிவமாகவும், அவருகந்து வைத்த பெயரையே தனக்குப் பெயராகவும் கொண்டுள்ள நிலையாகும். இந்நிலையில் இறைவன் இன்ன இடத்தில் இன்னகாலத்தில் இன்னாரிடத்தில் தோன்றி சந்நிதி பண்ணவேண்டும் என்கின்ற நிலை இல்லாதபடி விரும்பிய எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும் எவரிடத்திலும் தோன்றிச் சந்நிதி பண்ணி நீராட்டம்,தளிகை, இருப்பு முதலான எல்லாச் செயல்களையும் உடையவனாய் திவ்விய தேசங்களிலும், அடியார்களின் திருமாளிகையிலும் எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். உலகியலில் மண்டியிருப்போருக்குத் தன்பக்கல் ருசியை உண்டாக்குதலும் பிறகு தன்னைத் துதிப்பவர்களுடைய கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம்படி போக்கியத்திற்கு இடமாயிருத்தலும், தன்னை உபாயமாகப் பற்றுமளவில் எல்லா உலகினரும் உபாயமாகப் பற்றுதற்குத் தகுதியா யிருத்தலும் பரமபதத்தில் போய் அநுபவிக்க வேண்டாமல்,

        அண்டர்கோன் அணிஅரங்கன் என் அமுதினைக்
        கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே16

என்று திருப்பாணாழ்வார் அநுபவித்தவாறு அநுபவிக்கத் தக்கதாக இருத்தலும் இந்த அர்ச்சாவதாரத்தில் முற்றுப் பெற்றிருக்கும்.
16. அமலனாதி-10 பிள்ளை உலக ஆசிரியரின் விளக்கம் : இந்த ஐந்து நிலைகளையும் பிள்ளை உலக ஆசிரியர், ...

     “பூகத ஜலம்போலே அந்தர்யாமித்துவம்; ஆவரன
      ஜலம் போலே பரத்துவம்; பாற்கட்ல் போலே
      வியூகம்; பெருக்காறு போலே விபவம்; அதிலே
      தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்” 17

       [பூகதம் பூமிக்குள்ளே இருக்கின்ற ஆவரணம் மூடிக்
       கொண்டிருப்பது]

என்று அழகாக விளக்குவர்.

இந்த வாக்கியத்தில் பரத்துவம் முதலான எம் பெருமானின் நிலைகளின் அருமையையும் அர்ச்சாவதாரத்தின் எளிமையையும் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குவர். இந்த ஆசாரியப் பெருமகனார்.

தண்ணிர் வேட்கை கொண்டவனுக்கு வேறு இடங்கட்குச் செல்லவேண்டாதபடி தண்ணிர் தான் நிற்கும் இடத்தில் பூமிக்கடியில் இருந்தாலும் கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக்கிடைக்காதிருப்பதைப் போல, எம்பெருமானைக் கண்டு பற்றவேண்டும் என்ற அவா இருந்தும் கட்கீலீ’18 என்று நம்மாழ்வார் குறிப்பிட்டபடி கண்களால் காணமுடியாதவாறு அட்டாங்க யோகமுயற்சியால் மட்டிலும் காணக்கிட்டுபவன் அந்தர்யாமித்துவ நிலையிலுள்ள இறைவன். அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது”19 என்று பரகாலர் கூறியபடி இந்த லீலாவிபூதிக்கு (படைப்பு, ஆழிப்பு முதலான விளையாட்டிற்குரிய உலகங்17. பூநிவச.பூஷ.42

18.திருவாய் 7.2:3

19. திருநெடுந் 14 கட்கு) அப்பாற்பட்டிருப்பவன் பரத்துவ நிலை எம்பெருமான். அப்படி மிக்க நெடுந்தொலைவு அன்றியே இந்த உலகின் எல்லைக்குள்ளே இருப்பினும் “பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்”20 என்று நம்மாழ்வார் கூறுகிறபடி கேட்டிருக்கும் என்பதன்றிச் சென்று காண அரிதாம்படி இருப்பவன் வியூகநிலை எம்பெருமான்.

மிக அண்மையில் இருந்தும் வெள்ளம் வருங்காலத்தில் இருந்தவர்கட்கு மட்டிலும் பருகலாம்படியாய் வேறு காலங்களில் இருப்பவர்கட்குப் பருகுவதற்கு அரியதாய் இருக்கும் பெருக்காறு போலே,"மண்மீது உழல்வாய்’ என்று நம்மாழ்வார் கூறுவதுபோல் பூமியிலே அவதரித்துச் சஞ்சரித்தும் அக்காலத்தில் வசித்தவர்கட்குமட்டிலும் அடையத்தக்கவர்களாய்ப் பிற்காலத்தில் உள்ள இவனுக்குக் கிட்டாதபடி இருப்பவர்கள் விபவநிலை எம்பெருமான்கள். மேற்கூறிய எம்பெருமான்கள் போலன்றி காண்பதற்குத் தேசத்தாலும், காலத்தாலும், கரணத்தாலும் கிட்டுவதற்குச் சேயதாய் அன்றி. திருக்கோயில்களிலும், திருமாளிகைகளிலும் என்றும் ஒக்க எல்லார்க்கும் கண்ணுக்கு இலக்காகும்படி பின்னானார் வணங்கும் சோதியாக” இருப்பவன் அர்ச்சாவதார எம்பெருமான், பல இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலைகளை நினைந்து மடுக்கள்போலே என்று பன்மையால் அருளிச் செய்தார். அவதாரங்களின் குணங்கள் எல்லாம் அர்ச்சையிலேயே குறைவற்று நிறைந்திருப்பதாலும் அவதாரங் களின் திருவுருவங்களை அர்ச்சை வடிவமாகப் பலவிடங்களில் மேற்கொண்டிருப்பதனாலும் "அதிலேதேங்கினமடுக்கள்போலே” என்று குறிப்பிட்டார் இந்த ஆசாரியப் பெருமகனார்.

20. பெரி. திருவந். 34 21. திருவாய் 6.9:5 22. திருநெடுந்.10

  1. 1. இரண்-திருவந்- 80.
  2. 2. மூன்-திருவந். 37
  3. 3. நான்- திருவந்-95.
  4. 4. திருவாய். 4.10:10
  5. 5. திருவரங். கலம். 63
  6. 6. கம்ப. சுந்தர-பிணிவிட்டு, 80