வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி/வரலாறு படைத்த வ.உ.சி. வாழ்க்கை
Appearance
1872 | செப்டம்பர் 5—நெல்லை மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறப்பு. | |
1894 | பிப்ரவரி—வழக்கறிஞர் பயிற்சியில் தேர்ச்சி. | |
1895 | வ.உ.சி. — வள்ளியம்மை திருமணம். | |
1900 | தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணி தொடங்குதல் | |
1901 | வ.உ.சி. — மீனாட்சியம்மை திருமணம். | |
1905 | மே— பொ. பாண்டித்துரைச் சாமித் தேவர் அவர்களைத் தலைவராகக் கொண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பரிசோதக உறுப்பினராகப் பொறுப்பு. | |
1906 | அக்டோபர் 16-சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882ஆம் ஆண்டுக் கம்பெனிகள் சட்டப்படி எண் 85 கிரேட் காட்டன் சாலை, துரத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு எண் 13 of 1906. | |
டிசம்பர்—சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கு இரண்டு கப்பல்கள் வாங்க வ.உ.சி. பம்பாய் சென்றார். அவர் அங்கு இருக்கும்போது மூத்த மகனும் மனைவியும் உடல்நலம் குன்றியதையும் பொருட்படுத்தாமல் பம்பாயில் தங்கி, திலகரின் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார். | ||
1907 | பாரதியாருடன் சூரத் காங்கிரசில் பங்கு பெற்றார். | |
1908 | நெல்லை தேசாபிமான சங்கம் உருவாகிறது. ஆறுமுகத்தம்பிரானைக் கொலை வழக்கில் விடுவித்துச் செல்வாக்குப் பெற்றார். | |
பிப்ரவரி 3 முதல் மார்ச்சு 9 வரை துர்த்துக்குடிக் கடற்கரையில் சுப்பிரமணிய சிவாவுடன் தொடர் சொற்பொழிவுகள். |
1908 | பிப்ரவரி 27— தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம். |
மார்ச்சு 9-பிபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாடினார். | |
மார்ச்சு 9—நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சிவாவுடன் கலெக்டர் விஞ்சு என்பவரைச் சந்தித்தார்.விஞ்சுக்கும் வ.உ.சி.க்கும் நடந்த உரையாடலைப் பாரதியார் இரண்டு பாடல்களாகப் பாடியுள்ளார். | |
மார்ச்சு 12 - வ. உ. சி.யும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர். | |
மார்ச்சு 13—வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து, திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் கடையடைப்பு, எதிர்ப்பு ஊர்வலங்கள், எழுச்சி. | |
மார்ச்சு 26—கூடுதல் மாவட்ட நீதிபதி வாலஸ் வழக்கு விசாரணையைத் தொடங்கினார். | |
ஜூலை 7—மாவட்ட நீதிபதி பின்கே , வ. உ. சி. க்கு ஆயுள்தண்டனை வழங்கினார். நவம்பர் 4-உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை, ஆறு ஆண்டுகள் நாடு கடத்தலாகக் குறைக்கப்பட்டது. பிறகு, இதுவே ஆறு ஆண்டுகள் கடுஞ்சிறையாக மாற்றப்பட்டது. | |
1911 | ஜூன் 17-மணியாட்சியில் மாவட்ட மாஜிஸ்டிரேட் (கலெக்டர் ஆஷ் , வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
1912 | டிசம்பர் 12 —கண்ணனூர் சிறையிலிருந்து வ.உ.சி. விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் நெல்லை மாவட்டத்தில் நுழையத் தடை நீடித்தது. |
1915 | மார்ச்சு — லோகமாண்ய பால கங்காதர திலகரின் அழைப்பை ஏற்று, பூனா வந்து சேர்ந்தார். |
மார்ச்சு 8—திலகருடன் முதல் உலகப்போர் பற்றியும் ஜெர்மனி உதவியுடன் இந்தியாவில் புரட்சி நடத்துவது பற்றியும் விவாதித்தார். |
.
1919 | மார்ச்சு — ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடந்த சத்தியாகிரகத்தையொட்டி காந்திக்கு ஆதரவு தந்தார்; காந்தியைச் சென்னையில் வரவேற்றுப் பேசினார். | |
டிசம்பர் — சென்னை வந்திருந்த திலகருடன் சந்திப்பு. திலகர் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்திருந்தது குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். அதனால் அந்த இயக்கத்தில் சேராதிருந்தார். | ||
1920 | கல்கத்தா காங்கிரசில் கலந்து கொண்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்துக் காங்கிரசிலிருந்து விலகினார். கோவை வாசம். | |
1924 | வழக்கறிஞர் பணி செய்ய இருந்த தடை நீங்கி, சன்னது பெற்றுக் கோவில்பட்டியில் குடியேறினார். நெல்லை மாவட்டத்தில் நுழையக்கூடாது என்ற தடையும் நீங்கியது. | |
ஒத்துழையாமை இயக்கத்தைத் திருப்பிப் பெற்றவுடன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார், சேலம் மாவட்ட அரசியல் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினார். ஆயினும் அரசியலில் தீவிர ஈடுபாடு கொள்ளவில்லை. | ||
1933 | காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதும் அவரது அரிசனச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காந்தி தமிழகம் வந்தபோது காரைக்குடியில் அவரை வரவேற்க நடந்த ஏற்பாட்டுக் கூட்டத்துக்கு வ.உ.சி. தலைமை தாங்கினார். | |
1934 | திருச்செந்தூரில் வ.உ.சி.யின் திருக்குறள் உரை வெளியிடப்பட்டது. | |
1935 | அப்போது காங்கிரசின் தலைவராக இருந்த பாபு ராஜேந்திரப் பிரசாத் தென்னிந்தியச் சுற்றுப் பயணத்தின்போது தூத்துக்குடி சென்று வ.உ.சி.யைச் சந்தித்து மரியாதை செய்தார். | |
1936 | நவம்பர் 18—மறைவு. |