பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

தவறுக்குப் பரிகாரம் கண்டு ஒரு சமரசம் ஏற்படுத்தவும் அவளது கன்னிப்பூ நெஞ்சம் இடம் தர மறுத்து விடவில்லைதான்!

“உங்களுக்கு மறுபடியும் தொந்தரவு தர வேண்டாமேன்னுதான், வீட்டுக்கு நடந்தே போயிடலாம்னு யோசிச்சேன்” என்று இங்கிதமாகப் பேசினாள். மழையில்லை.

“உங்களை உங்கள் வீட்டிலே கொண்டாந்து விட்டால்தான், எம் மனசுக்கு சமாதானம் ஏற்பட முடியும். இல்லா விட்டால், உங்களை நடு வழியில் விட்டு விட்டது போல வருந்துவேன்.”

“அப்படியா?”

“ஆமாம்.”

“அப்படின்னா, என்னோடு புறப்படுங்க” என்று பட்டென்று சொன்னாள் ரேவதி.

அவளது ஒப்புதலில் அவளையும் அறியாமல் ஒரு சுவாதீனமான உரிமை, குரல் கொடுத்ததை உணர்ந்ததும் அவள் ஆச்சரியப்பட நேர்ந்ததும் உண்மைதான்! அன்றொரு நாள் கோயிலில் ஞானசீலன் விடுத்த அன்பான அழைப்பை ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட உறுத்தலுக்கு கழுவாயாக இன்று சமரசம் ஏற்படுத்திக் கொள்ள நேர்ந்தது அவளுக்கு ஆறுதலாகவே இருந்தது.

ரேவதியின் சிறிய வீட்டின் வாசலில் ஞானசீலனின் பெரிய கார் நின்றது.

பட்டுச் சேலை தரையிலே பட்டுப் புரளாமல் கொய்து சீராக்கிக் கொண்டபடி, இறங்கிக் கொண்டாள் ரேவதி.

“நான் வரட்டுமா?” என்றான் ஞானசீலன். அவனது அகன்ற மார்பில் புரண்ட சங்கிலியின் நரிப் பல் பதக்கத்தை அழகு பார்த்த ரேவதி, தனது மயில் பதக்கத்தை உருட்டி விட்டவளாக, “வீடு வரை