பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

41


எனவே, இக்குறளில் 'கொடை' என்றது, அரசன் தன்னிலும் உயர்ந்தோர்க்கு உதவுவதையேயாகும். அடுத்த குறளில் 'ஈகை' என்றது. அரசன் தன்னிலும் தாழ்ந்தவருக்கு உதவுவதையேயாகும். ஆனால் இச்சொற்கள் எல்லா இடங்களிலும் இதே பொருளில் வரும் என்று சொல்ல முடியாது . ஒன்றுக்கொன்று வேற்றுமையுடைய உண்மை, வாய்மை, மெய்ம்மை என்பவை கலந்து பயன்படுத்தப் படுவதைப் போலவே, இவையும் கலந்து பயன்படுத்தப்படும். ஆனால், அரசனுக்குக் கொடை, ஈகை இரண்டும் வேண்டும் என்று சொல்லியிருக்கிற இந்த இடத்தில் இவ்வாறு பொருள் கோடலே அமைதி.

அரசன் தன்னிலும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தல் (கொடை) என்றால், புலவர்க்கும் கலைஞர்க்கும் பரிசு வழங்கல். புலவரையும், கலைஞரையும் தம்மிலும் மிக்கோராக அரசர்கள் கருதினர் என்பதை. புறநானூறு போன்ற சங்க இலக்கியம் கற்றவர் நன்கறிவர்.

இக்குறளில் ' அளி' என்பது. எல்லாரிடத்தும் அருள் செலுத்துதல் - இரக்க உணர்ச்சி கொள்ளல். செங்கோல் என்பது, ஒருதலைச் சார்பு இன்றி நேர்மையாய் ஆளுதல். குடி ஓம்பல் என்பது, குடிமக்களுக்கு எந்தக் குறையும் வராதபடி நன்கு காத்தல்.

எனவே, கல்வி கலைகளை வளர்த்து, அருள் உள்ளந் தாங்கி, நேர்மையுடன் குடிகளை நன்கு காப்பவனது புகழ் உலக நாடுகள் எங்கும் பரவி ஒளி வீசுந்தானே !

இக்குறளை மணக்குடவர் 7-ஆம் குறளாகவும், பரிமேலழகர் 10-ஆம் குறளாகவும் இன்னும் பிறர் பிறவிதமாகவும் அமைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் நானோ, முதல் குறளில் 'அரசருள் ஏறு' என்று இருப்பதால், அது போலவே 'வேந்தர்க்கு ஒளி' என்றிருக்கும் இக்குறளை