உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


3

உலக நாடுகளில் உருவான

பத்திரிகை வளர்ச்சிகள்

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.றிவுக்கு வடிவம் மொழி! மொழிக்கு வடிவம் எழுத்து. எண்ணங்களின் வடிவமும் எழுத்துதான். எண்ணங்கள் எண்ணற்ற செயல்பாடுகளை வடிவமாக்குகின்றன.

இவற்றுக்கு மூலம் எது? மனம்! மனம்தான் மேற்கண்டவற்றுக்கு ஊற்றுக் கண்களாகின்றது. அந்த ஊற்றுச் சுரப்பிகள் பெருக்கும் நீர்த் துளிகளே சுவை பயக்கும் இனிய முடிவுகள்! அந்தந்த முடிவுகளின சிகரம்தான் நாம் வெற்றி கொள்ளும் வாழ்வியல் கூறுகள்!

உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் அந்தந்த நாடுகளில் வாகை சூடிய மக்கள் வாழ்வியல் கூறுகளில் ஒன்றுதான் நாம் தினந்தோறும் படிக்கும் பத்திரிகைகள், இதழ்கள், பருவகாலச் சுவடிகளான அறிவுப் படைப்புகளாகும்.

இங்கிலாந்தில் தோன்றிய
பத்திரிகை உலகம்

பத்திரிகைகளுக்கான முன்னோடி இதழ்கள் முதன் முதலாக இங்கிலாந்து நாட்டில் 17-வது நூற்றாண்டுக்கு முன்பே தோன்றியதாக The Concise Oxford Dictionary of English Literature 1939-ம் ஆண்டு பதிப்புக் கூறுகின்றது.