இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடுப்பங் கரையில் பூனைக்குட்டி !
அயர்ந்து தூங்குது பூனைக்குட்டி !
துடுப்பை எடுத்தால் பூனைக்குட்டி
துள்ளிப் பாயுது பூனைக்குட்டி !
காலச் சுற்றுது பூனைக்குட்டி !
கதவில் ஏறுது பூனைக்குட்டி !
பாலைத் திருடுது பூனைக்குட்டி !
பரணில் பதுங்குது பூனைக்குட்டி !
முன்கால் தூக்குது பூனைக்குட்டி !
முகத்தைத் துடைக்குது பூனைக்குட்டி !
பின்கால் குந்திப் பூனைக்குட்டி
பேசா திருக்குது பூனைக்குட்டி !
20