இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காலை எழுவோம்; எழுவோமே!
காலைக் கடனை முடிப்போமே!
நூலே எடுத்துப் படிப்போமே!
தலையை வாரி முடிப்போமே!
புத்தகம் பலகை எடுப்போமே!
பள்ளி புகுந்து படிப்போமே!
அத்தை அக்காள் போல்நாமே
ஆகும் வரையில் படிப்போமே!
படிக்கப் படிக்க அறிவுண்டாம்!
படிக்கப் பின்னொரு விழியுண்டாம்!
படிக்கப் படிக்கப் பொருளுண்டாம்!
பலரும் புகழ வழியுண்டாம்!
31