இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காக்கா காக்கா ஓடிவா!
கத்திக் கத்தி நடந்துவா!
ஆக்கிய சோறு தின்னலாம்;
அதன்பின் பறந்து போகலாம்!
குருவி! குருவி ஓடிவா! .
கூண்டை விட்டே இறங்கிவா!
குருவி! குருவி! ஓடிவா!
நெல்லைக் கொத்தித் தின்னவா!
மயிலே! மயிலே! இறங்கிவா!
தோகை விரித்து ஆடிவா!
குயிலே! குயிலே! ஓடிவா!
குழந்தை சிரிக்கப் பாடிவா!