இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொன்
அளிக்கும்
வேலை
கல்வி கற்க வேண்டும் !-கைத்
தொழிலும் கற்க வேண்டும் !
கல்விச் செல்வம் போலே-கைத்
தொழிலும் செல்வ மாமே !
துய்மை செய்யக் கற்போம் !-சிறு
துடைப்பம் செய்யக் கற்போம் !
பாய்மு டையக் கற்போம் !-தோட்டப்
பயிர்வி ளைக்கக் கற்போம் !
தையல் வேலை கற்போம் !-சிறு
தட்டி செய்யக் கற்போம் !
பையப் பையப் பொம்மை-சட்டி
பானை செய்யக் கற்போம் !
48