உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

11



2, சாம்பசிவம் தெரு, தியாகராஜ நகர், சென்னை. 18.1.1938.


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் ரொம்ப அருமை பாராட்டி அனுப்பிய பொங்கல் வாழ்த்தும் கடிதமும் வந்து சேர்ந்தன. ரொம்ப சந்தோஷம். விளாத்திகுளத்தைப் பற்றி எழுதிய குறிப்புகள் எனக்கு ரொம்பவும் ரஸமாய் இருந்தன.

பழுதுபட்டுப் போன காரியங்கள் எல்லாம் தங்கள் ஆதரவால் திருத்தம் அடையும் என்று நம்புகிறேன். விளாத்திகுளம் போன்ற சிறு ஊரில் நாம் உத்தேசிக்கிறபடி எல்லாத் திருத்தங்களையும் கைகூடும்படி செய்துவிடலாம். ஜனங்கள் திருத்தங்களின் பயனை மறுநாளே கண்கூடாகப் பார்த்துவிடலாம். அதனால் திருத்த முயற்சியில் எல்லாரும் கலந்து கொள்ளுவார்கள். ஆகையால் தங்கள் முயற்சி வீண் போகாது. ஊர்க்காரருடைய நன்றிக்குத் தாங்கள் எப்போதும் உரியவராவீர்கள்.

மாம்பலம் வந்து மூன்று மாசம் ஆகிறது என்பது தங்களுக்குத் தெரிந்ததே. எப்படியும் வண்ணார்பேட்டைக்கு சங்கராந்தி சமயம் போய்விடவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

ஆவுடையப் பிள்ளையவர்கள் நாகர்கோயில் சிதம்பரம் பிள்ளையவர்கள் மற்றும் நண்பர்கள் டிசம்பர் ரஜாவுக்கு இங்கே வந்திருந்தார்கள். தாங்களும் வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். நண்பர்கள் உடன் வண்ணார்பேட்டைக்குப் போக வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இடையில் செல்லையாவுக்கு காய்ச்சல்